**********************
*மாநில சங்கத்தின் இரங்கல் செய்தி...*
**********************
நாள்: 05/06/2018 (செவ்வாய்)
காரைக்குடி கோட்டச் சங்கத்தின் கோட்டச் செயலரும் தொழிற் சங்க போராளியுமான திரு. *M. ரவி ஆறுமுகம்* அவர்கள் நேற்று மாலை 6 மணியளவில் ஆர்ப்பாட்ட நிகழ்வுகளை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கி அகால மரணம் அடைந்ததார். அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் மாநில சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது...அவரது பூத உடல் காரைக்குடி பழைய ரயில்வே ரோடு அரசுமருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மதியம் 12:30 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெறும்.
*********************
இவண்...
*தலைவர் மற்றும் மாநில செயலர் (பொறுப்பு), தமிழ் மாநிலம், சென்னை.*
**********************
எங்கள் கோரிக்கைகளுக்கு அரசும், அதிகார வர்க்கமும் செவி சாய்க்க மறுக்கிறது. நாங்களும் மனிதர் தானே. ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் அலுவலரும் பத்தாயிரம் சம்பளம் வாங்கும் அலுவலரும் உண்ணும் உணவின் விலை ஒன்றுதான். பள்ளியில் படிப்பின் விலையும் ஒன்றுதான். நாங்கள் அளவிற்கு அதிகமாக சம்பளம் கேட்கவில்லை. விலைவாசிக்கு தகுந்தவாறு மாற்றி அமைக்கும் சம்பள கமிசனைத்தானே நடைமுறைப்படுத்தச் சொல்கிறோம். 15ந்து நாள் போராட்டத்தால் சம்பளத்தை மட்டுமே நம்பி உள்ள எமது தோழர் தோழியர்கள் அவர்களின் நிலை என்ன?. இதை ஏன் அரசு ஏற்க மறுக்கிறது. பொதுமக்களின் நலன் எங்களுக்கு முக்கியம்தான் . அதேபோல் பல கோடி மக்களின் பாதிப்பை யோசிக்கும் அரசு வயிற்றுப்பிழைப்புக்காக பாடுபடும் எங்களின் கோரிக்கை ஏற்று குறையைத் தீர்க்க வழி வகை செய்ய மறுக்கிறது. ஆண்டு தோறும் தங்களுக்கு தேவையான டார்கெட்டுக்களை படாத பாடுபட்டு அசராமல் உழைத்து முடித்துக் கொடுக்கும் எங்களையும் சக தோழராக... இல்லை மனிதராக பாருங்கள் எங்களின் மேல் பரிவு ஏற்படும். மதிப்பிற்குறிய அதிகாரிகள் எங்களின் கஷ்டங்களை அரசிடம் முறையிட்டு எங்கள் கோரிக்கைகள் வெற்றியடையவும் வாடிக்கையாளர்களின் நலன்களையும் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
ReplyDeleteநன்றி
எங்கள் தோழரின் பிரிவால் வாடும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ReplyDeleteஇன்னும் எத்தனை பேரை பலிவாங்க துடிக்கிறதோ அரசு
கலங்காதீர்கள். காலம் என்றும் உழைப்போர் பக்கம்தான்.
ReplyDeleteஉங்களை என்றில்லை. அரசுக்கு அடித்தட்டு மக்கள் என்றாலே அலட்சியம் தான்.
இறுதி வெற்றி நமக்கே!
Thanks sir
ReplyDelete