Tuesday 16 October 2018

AIGDSU CHQ  NOTICE ISSUED FOR -
All India Conference
 From 3rd-4th-5th December 2018 
at Dhule, Maherestra Circle




DOP ISSUED PLB BONUS ORDER FOR 60 DAYS ORDER NO 26-1/2018-PAP DATED 15/10/2018.




DARPAN பணி விளக்க தமிழ் கையேடு

























மாநில சங்க வழிகாட்டுதல் படி குமரி கோட்ட சங்கம் மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு.பொன் இராதாகிருஷ்ணன் அவர்களிடம் கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கை அமலாக்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி கொடுத்த மனுவின் மீது எடுத்த நடவடிக்கைக்கு இலாகா துறை அமைச்சக தனி அதிகாரி நிதித்துறை தனி அதிகாரிக்கு எழுதிய கடிதம் நிதித்துறையின் தனி அதிகாரிமூலம் குமரி கோட்ட செயலருக்கு வந்த கடித நகல்.



Monday 15 October 2018

முக்கிய செய்தி 

2018 ஆம் ஆண்டிற்கான போனஸ் இலாகா உத்தரவு எண் 26-1/2018 PAP dated 15.10.2018 இன் படி 60 நாட்களுக்கு வழங்கிட இலாகா உத்தரவிட்டுள்ளது.


Saturday 13 October 2018

முக்கிய செய்தி 

பத்தாவது அகில இந்திய மாநாடு மஹாராஷ்டிரா மாநிலம் துளி(Dhule) என்னும் இடத்தில் 03.12.2018 முதல் 05.12.2018 வரை நடைபெற உள்ளது. எனவே மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் உடனடியாக பயண ஏற்பாட்டிற்கான ரயில் முன்பதிவு செய்து கொள்ளவும். ரயிலில் முன்பதிவு செய்பவர்கள் கீழ்காணும் வழித்தடங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Chennai to Pune Jn
Pune to Dhule

Chennai to Kanyan Jn
Kanyan Jn to Dhule

Chennai to Ahmed Nagar
Ahmed Nagar to Dhule

Chennai to Dadar
Dadar to Dhule

Chennai to Dhane
Dhane to Dhule
DARPAN அமலாக்கத்திற்கு பின் Network கிடைக்காததால் பணி செய்ய முடியாமல் உள்ளதை உடனடி நிவர்த்தி செய்திட வேண்டியும், network சரி செய்யும் வரை தற்போதய நிலையிலே(manual work) பணி செய்யவும் அனுமதிக்க வேண்டி CPMG அவர்களுக்கு அனுப்பிய கடித நகல்.





DARPAN Training இல் கலந்து கொண்ட BPM தோழர்களுக்கு பயணப்படி, உணவுப்படி வழங்கிட CPMG அவர்களுக்கு அனுப்பிய கடித நகல்.



Friday 12 October 2018

அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாஞ்சலி நிகழ்ச்சி 

அன்பு தோழர்களே !

கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு தனி சங்கம் உதயமாக அடித்தளமிட்டு அஞ்சல் துறையில் போராளியாக, அகில இந்திய தொழிற் சங்க தலைவர்களை தமிழகம் நோக்கி திரும்ப வைத்த, அஞ்சல் இயக்கத்தில் அரசியல் சார்பற்ற அசைக்க முடியாத சக்தியாக, தொழிற்சங்க தலைவன் எவ்வாறு இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டி, பல்வேறு தலைவர்களை தென்னகத்தில் தொழிற்சங்கத்தில் உருவாக்கிய அண்ணன் பாலு அவர்கள் 20.10.2015 அன்று இப்பூவுலகை விட்டு விண்ணுலகை அடைந்தார்கள்.

அண்ணன் கண்ட கனவை நிறைவேற்றிட அண்ணனால் அடையாளம் காட்டப்பட்ட நமது பொதுச்செயலர் தோழர் S S மஹாதேவய்யா அவர்கள் கலந்து கொள்ளும் அண்ணன் பாலு அவர்களுடைய மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி வரும் 21.10.2018 அன்று சேலம் நாலு ரோடு அருகில் உள்ள சாமுண்டி சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள லட்சுமி அரங்கில் வைத்து NCA பேரவை சொந்தங்களால் நடைபெற உள்ளது. எனவே தமிழகத்தின் அனைத்து கோட்டத்தில் இருந்தும் பெருவாரியான தோழர்கள் அண்ணனின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று அண்ணனுக்கு புகழஞ்சலி செலுத்தி அவர்தம் வழியில் வீரமிக்க தொழிற்சங்க பணி ஆற்றிட உறுதியேற்போம். 
வாழ்க அண்ணன் பாலு புகழ்.

வளர்க போராட்ட உணர்வு 



A இஸ்மாயில் 
மாநில செயலர்  




Thursday 4 October 2018

சென்னை CPMG அலுவலகம் முன் நடைபெறும் மாபெரும் உண்ணாவிரத போராட்ட புகைப்படங்கள் 









Monday 1 October 2018

அணி திரள்வீர் சென்னை CPMG அலுவலகம் நோக்கி 

04.10.2018 அன்று மத்திய சங்க அறிவிப்பின்படி 16 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட அஞ்சல் இலாகாவை வலியுறுத்தி இரண்டாம் கட்டமாக மாநில தலைநகரில் நடைபெற இருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து கோட்டங்களில் இருந்தும் பெருவாரியான தோழர்கள் கலந்து கொண்டு தலைநகரை அதிர வைப்பதன் மூலம் நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசுக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும். இன்றில்லையேல் என்றும் இல்லை என்ற உணர்வோடு போராட்டக்களம் புகுந்து வெற்றியை இலக்காக்கிட நமது உரிமைகளை பெற்றிட சென்னை CPMG அலுவலகம் முன்பாக அனைத்து தோழர்களும் 04.10.2018 அன்று காலை 09.00 மணிக்குள் திரண்டு உண்ணாவிரத போராட்டத்தை வெற்றியடைய செய்திட வேண்டும் என மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.


A இஸ்மாயில் 
மாநில செயலர்.
Clarification regarding drawl of Composite allowance to GDS BPMs on implementation of recommendations of One Man committee on wages and allowances of Gramin Dak Savaks (GDS).

DOP No. 17-31/2016-GDS(Pt) Dated 28-09-2018




இதன் தமிழாக்கம்.

*GDS கமிட்டியின் அமலாக்கத்தில் BPM ஊழியர்களுக்கு Composite Allowance வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் Rs 500, மற்றவர்களுக்கு  Rs250 என உத்தரவு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இது குறித்து பல கோட்டங்களில் குழப்பமானநிலை நீடித்ததால் இது சம்பந்தமாக விளக்கமளித்து அஞ்சல் துறை இன்று உத்தரவு வெளியிட்டுள்ளது.*

*கிளை அஞ்சலகங்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தால் மட்டுமே BPM ஊழியர்களுக்கு ரூ500 வழங்கப்படும் என்றும் பூர்த்திசெய்யாத கிளை அஞ்சலகங்கள் எனில் BPM ஊழியர்களுக்கு ரூ250 வழங்கப்படும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது*.
I.கிளைஅஞ்சலகங்கள்  கீழ்கண்ட ஏதேனும் ஒரு இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.
1. பஞ்சாயத்து கட்டிடங்கள், 2.மத்திய ,மாநில அரசு அலுவலகங்கள் அல்லது பள்ளிகள் .
3.BPMகளின் சொந்த வீடுகள் 
4. உரிய வாடகையுடன் கூடிய கிராமத்தின் முக்கிய பகுதி.
5. தொண்டு நிறுவனங்களின் இடங்கள்.

*II. கிளை அஞ்சலகங்கள் கிராமத்தின் முக்கிய பகுதியில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.*

*III. கிளை அஞ்சலகங்கள் 100 சதுர அடிக்கு குறையாத இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.10×10 சதுரஅடிஉடன் கூடிய இடத்தில் மற்றும் தரைத்தளத்தில் இருப்பது நன்று.*

*IV. கிளை அஞ்சலகங்கள் கிராம சாலைகளின் மூலம் எளிதில் சென்றடைய தக்க வகையில் இருத்தல் வேண்டும் .கிளை அஞ்சலகங்கள் கட்டிடங்களின் முன்பகுதியில் அனைவரும் அறியும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் .வராண்டா ,சமையலறை, படிக்கட்டுகளின் கீழ்ப்பகுதி, படுக்கையறை ,பழுதடைந்த அறைகள், மக்கள் எளிதில் சென்றடைய முடியாத கிராமத்தின் கடைக்கோடி இடங்கள் ஆகியவற்றில் கிளை அஞ்சலகங்கள் அமைக்கப்படக்கூடாது.*

*V. செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களில் கிளை அஞ்சலகங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.மேலும் அது பாதுகாப்பாகவும் உறுதிதன்மையுடனும் இருக்க வேண்டும்.*
*கிளைஅஞ்சலகங்கள் நன்கு காற்றோட்டம் வசதிகளுடன்  அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.*  *கிளை அஞ்சல்அலுவலகங்கள் வெள்ளையடிக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.*

*VI. கிளை அஞ்சலகங்கள்  கையடக்கக் கருவிகள் மின்விசிறி ,மின்சார விளக்கு ஆகியவை பயன்படுத்தத்தக்க வகையில்*
 *மின்இணைப்பு பெற்று இருக்க வேண்டும்.* *சூரியமின்சக்தி  பெறுவதற்கு தகுந்த இடம் இருக்க வேண்டும்.*

*VII. கிளை அஞ்சலகங்கள் கிராமங்களில் கடைகள் உள்ள பிரத்யேகமான இடத்தில் அமைக்கபடலாம். அலுவலக பதிவேடுகள்,Micro ATM மற்றுமுள்ள பொருட்கள் வைக்கப்படுவதற்கான போதிய இடவசதி இருக்க வேண்டும்.*