*********************
*நாள்: 09/06/2018 (சனிக்கிழமை)*
*மாநில சங்கத்தின்* *முக்கிய செய்தி*
************************
*நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவதில்லை!!!*
************************
நமது வேலை நிறுத்தப் போராட்டம் மத்திய மோடி அரசையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. GDS ஊழியர்களின் ஒன்றுபட்ட போராட்டம் வரலாற்றுப் பதிவாக இந்திய சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது. GDS ஊழியர்களுக்கு மட்டுமே சொந்தமான இந்த போராட்டத்தை எந்த ஒரு அயோக்கிய சங்கங்களும் உரிமை கொண்டாட முடியாது. மத்திய அரசு வரும் 15 ஆம் தேதிக்குள் அத்துனை பணப் பலன்களும் வழங்குவதாக ஆணை பிறப்பித்துள்ளது. அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு இல்லாத ஊழியர்கள் கணக்கினை துவங்குமாறு வேண்டுகிறோம். மற்ற அனைத்து விபரங்களுக்கும் நமது இணையதளத்தைக் காணவும். ஒன்றுபட்ட போராட்டம் வென்று காட்டும் நிச்சயம்.
**********************
குறிப்பு: மத்திய அரசின் மோடி வித்தை மற்றும் ஏமாற்று வேலைகளை நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கிறது மாநில சங்கம்.
*************************
வீரம் செறிந்த வெற்றி வாழ்த்துகளுடன்...🏻🏻🏻🏻🏻
==================
M. பாஸ்கரன்
மாநில செயலர் (பொறுப்பு)
தென் மண்டல செயலர்,தமிழ் மாநிலம், சென்னை.
**********************
*வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...வலிகள் இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும்...
...*
**********************
மிக்க நன்றி🏻🏻🏻🏻🏻
**********************
வலி உணர்வு என்பது இறைவன் கொடுத்த வரம். வாழ்க்கையில் வலி உணர்வு அவசியமான ஒன்று. வாழ்க்கையில் வலி இருக்கலாம். ஆனால் வாழ்க்கை வலிகள் மட்டுமே நிறைந்ததாக இருந்துவிடக் கூடாது. துன்பத்திற்கே துன்பம் தரும் வல்லமை உள்ளவர்களாக கிராமிய அஞ்சல் ஊழியர்கள் இருக்க வேண்டும். அஞ்சல் துறைக்கு கடமையை செய்யுங்கள் அதேசமயத்தில் அந்தக் கடமைக்கு நிகரான பலனை அடைந்தே தீர வேண்டும்.
ReplyDeleteகிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பிரீமியத்திற்கு கொடுக்கப்பட்டு வந்த கமிஷன் தொகையை கருங்காலிகள் இன்சென்டிவ் என்று பெயர்மாற்றிவிட்டார்கள். கமிஷன் என்றால் உரிய காலத்தில் கொடுக்க வேண்டும் இன்சென்டிவ் என்றால் அந்தத் தொகையை உரிய காலத்தில் வழங்காமல் இழுத்தடிப்பு செய்யலாமோ? என்ன இழவோ? எல்லாம் அந்த கருங்காலிகளுக்கே வெளிச்சம்.கமிஷன் வழங்க காலதாமதம் செய்தாலும் அந்தந்த முகவரின் அடையாள எண்ணும் பெயரும் குறிப்பிட்டு மாதந்தோறும் வரவுச்சீட்டு (Credit Note) ஏன் வழங்கக் கூடாது? -கருங்காலிகள் கவனத்திற்கு
ReplyDeleteRPLI பிரீமியத்திற்கான கமிஷன் தொகையை விடுவித்து அந்தந்த முகவர்களின் அஞ்சலக சேமிப்புக் கணக்கில் சேர்த்ததும் அதற்கான பற்றுச்சீட்டும் (Debit Note) ஏன் வழங்கக் கூடாது? -கருங்காலிகள் கவனத்திற்கு
Delete