Monday, 30 July 2018

திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினரிடம் கோவில்பட்டி கோட்டம் சார்பாக அளிக்கப்பட மனு 

தோழர்கள் தோழியர்களுக்கு
        
        வணக்கம்.  நமது Gds ஊழியர்களுக்கான கமலேஷ்சந்திரா கமிட்டியை முழுமையாக அமல்படுத்தாமல் இந்த இலாகாவும் அரசும் நம்மை வஞ்சித்து விட்டது. விடுபட்ட அம்சங்களை விரைவில் அமுல்படுத்த வேண்டும் என்று நமது மத்திய சங்கம் 21 தீர்மானங்கள் அடங்கிய மெமோரண்டம் அரசுக்கும் இலாகாவிற்கும் அனுப்பி உள்ளது.
     அதன் அடிப்படையில் நமது கோவில்பட்டி கோட்ட AIGDSU சார்பில் இன்று(29.07.18) காலை திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் திரு.K.R.P.பிரபாகரன் அவர்களை சந்தித்து 21 தீர்மானங்கள் அடங்கிய மெமோரண்டம் கொடுக்கப்பட்டது. M.P அவர்கள் நான் மேல்மட்டத்திற்கு இந்த கோரிக்கையை எடுத்து செல்வதாக உறுதி அளித்தார்.
      இதில் நமது சங்க நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment