Tuesday, 17 July 2018

சேலம் கிழக்கு கோட்ட மாநாடு 

சேலம் கிழக்கு கோட்ட மாநாடு 15.07.2018 அன்று அயோத்தி பட்டணம் அன்னை கஸ்தூரிபா திருமண மண்டபத்தில் வைத்து கோட்ட தலைவர் லோகநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலர் A இஸ்மாயில் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். மாநாட்டில் முன்னணி தலைவர்கள் தோழர் அமிர்தலிங்கம், தோழர் வாசுதேவன், தோழர் முத்துஸ்வாமி, பெங்களூர் தோழர் கருணாநிதி, தோழர் கந்தசுவாமி, தோழர் ரத்தினம் ஆகியோரும், மாநில உதவி செயலர் தோழர் பாஸ்கரன், கோவை, திருப்பத்தூர், விருத்தாச்சலம், திருப்பூர், தருமபுரி, தாராபுரம், கோட்ட/கிளை செயலர்களும், மேற்கு மண்டல செயலர் தோழர் ஹரிராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற ஆத்தூர் அஞ்சலக முதல்வர் தோழர் செல்வராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. 
தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் தோழர் மாரி அவர்கள் தலைவராகவும், தோழர் பாலமுருகன் அவர்கள் செயலாளராகவும், தோழர் ரமேஷ் அவர்கள் பொருளாளராகவும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டு புகைப்படங்கள்




No comments:

Post a Comment