முதல் நாள் வேலைநிறுத்த போராட்டம் மகத்தான வெற்றி.
மத்திய சங்க அறிவிப்பின்படி இன்று முதல்(16.08.2017) நடைபெறுகின்ற காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் அனைத்து கோட்டங்களிலும் பெருவாரியான கிளை அஞ்சலகங்கள் மூடப்பட்டு ஏராளமான தோழர்களும் தோழியர்களும் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். நமது AIGDSU சங்கத்தின் நியாயமான கோரிக்கைகளுக்காக மாற்று சங்கத்தை சார்ந்த தோழர் தோழியர்கள் பெரும்பாலான கோட்டங்களில் நம்மோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் மாநில சங்கம் வீர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. போராட்ட வீச்சத்தினை முனைப்புடன் நடத்திட உழைத்திட்ட கோட்ட,கிளை நிர்வாகிகளுக்கும் மாநில சங்கம் வீர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு இச்செய்தியினை அனைத்து தோழர் தோழியருக்கும் தெரிவித்திடவும் கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை போராட்டத்தினை முன்னெடுத்துச்செல்ல மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
A.இஸ்மாயில்
மாநில செயலர்
சங்கு ஊதி போராட்டம் நடத்திய தபால் ஊழியர்கள்!
ReplyDeleteஎம்.கணேஷ் செ.சல்மான் ஈ.ஜெ.நந்தகுமார் SAKTHI ARUNAGRI V
கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை இன்று மதுரையில் சங்கு ஊதி தொடங்கினர். இதுவரை தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்தும் மத்திய அரசை எதிர்த்து லட்சக்கணக்கான கிராமிய அஞ்சல் ஊழியர்கள் இப்போராட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியுள்ளனர்.
கோட்ட அளவில் மதுரைத் தலைமை அஞ்சல் அலுவலக வாயிலில் நடந்த போராட்டத்தில் திரளாக கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரை செய்ததை உடனே அமல்படுத்தவும், எட்டு மணி நேர வேலை வழங்கி துறை மூலமாக நிரந்தரப்படுத்தவும், மத்திய நிர்வாக தீர்ப்பாயமும், சென்னை நிர்வாக தீர்ப்பாயமும் வழங்கிய தீர்ப்பின்படி தங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ''தங்கள் கோரிக்கை அரசின் காதில் விழ வேண்டும் என்பதற்காக வலம்புரி சங்கை ஊதி போராட்டம் நடத்தினோம்'' என்று போராட்டக்காரர்கள் கூறினர்.

In madurai
ReplyDeleteSuper
ReplyDeleteA. Sardhar Organising secretary AigdsuDharmapuri Dist
ReplyDeleteஎங்கள் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட கிளை அஞ்சலக ஊழியர்கள் அனைவரும் பாப்பிரெட்டிப்பட்டி அஞ்சல் அலுவலகம் முன்பு ஒன்று கூடி ஏழாம் ஊதியக்குழு நடைமுறை படுத்திடவும் எட்டு மணி நேர வேலை வழங்கிடவும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல செயலாளர் சந்திரன் தலைமையில் ஒருங்கிணைப்பு செயலாளர் சர்தார் முன்னிலையில் சிறப்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்