ஏழாம் நாள் போராட்டம்
நமது காலவரையற்ற போராட்டம் பேசிச்சுவார்த்தையின் மூலமாக நல்ல முடிவை எட்டும் என எதிர்பார்த்த வேலையில் அரசின் அடக்குமுறை ஆரம்பம் ஆகி விட்டது. போராட்டத்தை நிபந்தனையின்றி விளக்கிக்கொண்டால்தான் பேசிச்சுவார்த்தை என இலாகா தரப்பில் அறிவித்ததோடு மட்டுமில்லாமல் போராடும் GDS ஊழியர்களுக்கு FR 17 நோட்டிஸ் வழங்க உத்தரவு இலாகாவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடக்கு முறைக்கு அடிபணியாமல் நமது தோழர்கள் போராட்ட வீச்சத்தினை அதிகப்படுத்தி, இலாகா அனுப்பும் நோட்டிஸை நம்முடைய தோழர்கள் யாரும் வாங்கிட வேண்டாம். முறைப்படியாக இலாகாவுக்கு வேலை நிறுத்த நோட்டிஸ் அகில இந்திய சங்கத்தால் வழங்கப்பட்டு கால அவகாசம் வழங்கித்தான் நாம் போராட்டத்தை ஆரம்பித்தோம் போராட்டத்தின் பலம் நாளுக்கு நாள் அதிகரிப்பதை தாங்க முடியாத இலாகா அடக்கு முறைகள் மூலம் நமது போராட்டத்தை அடக்க நினைக்கிறது. தொழிலாளரின் கோரிக்கைகளை தீர்க்க முன்வராத இலாகாவின் நடவடிக்கைகளை எந்த விதத்திலும் எதிர்கொள்ள நமது தோழர்களை முனைப்புடன் வழிநடத்தி போராட்டத்தை வெற்றியடைய செய்திட கோட்ட கிளை நிர்வாகிகளை மாநில சங்கம் வேண்டுகிறது.
A இஸ்மாயில்
மாநில செயலர்
No comments:
Post a Comment