Thursday 30 August 2018

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இன்று (06.09.18 )அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்- கிராமம் அஞ்சல் ஊழியர்கள்(AIPEU-GDS ), தேசிய கிராம அஞ்சல் ஊழியர்கள் சங்கம்(NUGDS),அகில இந்திய கிராம அஞ்சல் ஊழியர்கள் சங்கம்(AIGDSU) ஆகியவற்றின் பொதுச்செயலாளர்கள் புதுடில்லியில் கூடி GDS ஊழியர்களின் பிரச்சனைகள் குறித்தும் GDS கமிட்டி அமலாக்கம் குறித்தும் GDSகமிட்டி அமலாக்கத்தில் அரசாங்கத்தின் நிலை குறித்தும் நீண்ட விவாதம் நடைபெற்றது .
      விவாதத்தின் முடிவில் கோரிக்கைகளை முன்வைத்து 3 கட்ட போராட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர் .
      இதனை மூன்று GDS சங்கங்கள் மட்டுமல்லாமல் அஞ்சல் ஊழியர்கள் சம்மேளனங்கள் (NFPE ,FNPO) ஆதரவுடன் மிகப்பெரும் போராட்டங்களாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அஞ்சல் ஊழியர் சம்மேளனங் களுக்கு ஆதரவு கேட்டு வேண்டுகோள் விடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

      *GDS JCA அறிவித்துள்ள மூன்று கட்ட போராட்டங்கள்:-*

      1. 25.09.2018- கோட்ட தலைமையிடங்களில் ஒருநாள் உண்ணாவிரதம்.

      2. 04.10.2018- மாநில அஞ்சல்துறை தலைமை இடங்களில் ஒருநாள் உண்ணாவிரதம் .
      3. 10.10.2018- புதுடெல்லியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்.

      *GDS JCA கோரிக்கைகள்:-*

      1. GDS கமிட்டியின் சாதகமான பரிந்துரைகள் 01.01.2016 முதல் முழுவதுமாக அமல்படுத்தப்பட வேண்டும்.

      2. தற்போது வழங்கப்பட்ட நிலுவைத்தொகைக்கான கணக்கீடுமுறை மாற்றப்பட வேண்டும்.

      3. பணி கொடை( Gratuity ) உச்சவரம்பு தற்போதுள்ள ரூ1,50,000 என்பது ரூ5,00,000 ஆக உயர்த்தப்பட வேண்டும்.

      4. GDS GROUP INSURANCE தொகையை ரூ 5,00,000ஆக உயர்த்தப்பட வேண்டும் .
      அதற்கான சந்தா தொகையாக மாதம் ரூ 500 பிடித்தம் செய்யப்பட வேண்டும்.

      5. SDBS திட்டத்தில் 10% தொகையை GDS ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்து கொண்டு அதற்கு சமமான தொகையை அரசாங்கமும் முதலீடு செய்ய வேண்டும்.

      6. (EPF)ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்தத் திட்டம் கடந்த ஊதிய கமிட்டியில் GDS ஊழியர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

      7. ஓராண்டிற்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு(Paid Leave ) வழங்கப்பட வேண்டும். இந்த விடுப்பினை தனது பணிக்காலத்தில் 180 நாட்கள் வரை சேமித்து வைத்து பணமாக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.

      8. GDS ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்விப்படி (CEA) ஆண்டு ஒன்றுக்கு ஒரு குழந்தைக்கு ரூ6000 வீதம் வழங்கப்பட வேண்டும்.

      9.தற்போது BPM-களுக்கு வழங்கப்படும் COMPOSITE ALLOWANCE ரூ500/மாதம் என்பது ரூ1600/மாதம் ஆக உயர்த்தப்பட வேண்டும். ரூ1600/மாதம் என்பது ABPM களுக்கும் வழங்கப்பட வேண்டும். இலாகா அலுவலகங்களில் பணிபுரியும் DAK SEWAK-களுக்கு நகரங்களின் தரவரிசை (X,Y,Z)அடிப்படையில் COMPOSITE ALLOWANCE வழங்கப்பட வேண்டும்.

      10. 12 ,24 ,36 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வுகள் அளித்து பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டும்.

      11. GDS ஊழியர்களுக்கான பணிமாறுதல் விதிகள் தளர்த்தப்பட வேண்டும். பணிமாறுதல் பெறும் GDS ஊழியர்களுக்கு புதியபணியில் முன்பிருந்த ஊதியத்தில் எந்தவித ஊதியகுறைவும் இல்லாமல் இருக்க வேண்டும். மேலும் கோட்டா அளவிலான மாறுதல்களை கோட்ட தலைமைஅதிகாரியும் ,மண்டல அளவிலான பணி மாறுதல்களை மண்டல தலைமை அதிகாரியும் ,மாநில அளவிலான பணி மாறுதல்களை மாநில தலைமை அதிகாரியும் பணிமாறுதல் உத்தரவுகள் வழங்கும் வகையில் விதிகளை தளர்த்த வேண்டும்.

      12. 65 வயது நிறைவடைவதற்கு முன்பே பணி ஓய்வில் செல்ல விரும்பும் GDS ஊழியர்களுக்கு GDS கமிட்டி பரிந்துரைத்த மூன்று விதமான விருப்ப ஓய்வு திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

      13. ஓய்வு கால பலன்கள் அனைத்தும் 01.01.2016 முதல் ஓய்வுபெற்றவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

      14. PUT OFF DUTY தண்டனைகளை தவிர்த்து GDS ஊழியர்கள் இடமாற்றம் செய்வது போன்றவை அளிக்கப்பட பரிசீலனை செய்ய வேண்டும்.

      15. GDS ஊழியர்கள் குறிப்பிட்ட மாதத்தின் எந்த தேதியில் 65 வயதை பூர்த்தி செய்தாலும் அவர்களின் ஓய்வு பெறும் தேதி மாதத்தின் கடைசிநாளாக இருக்க வேண்டும்.

      16. IPPB -INDIAN POSTAL PAYMENT BANK பணிகளுக்கு GDS ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் முறை கைவிடப்பட வேண்டும் . IPPB வேலைகளை கிளை அஞ்சலகங்களின் வேலைநேரத்துடனும் ஊழியர்களின் வேலை பளுவுடனும் சேர்க்கப்பட வேண்டும்.

      17. ஒரு நபர் மட்டுமே பணியாற்றும் கிளை அஞ்சலகங்களை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பணியாற்றும் கிளை அஞ்சலகங்களாக தரம் உயர்த்தப்பட வேண்டும்.

      18. ESI மருத்துவமனை,மருந்தகங்கள் உள்ள இடங்களில் ESI வசதி GDS ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

      *ஒன்றுபடுவோம் தோழர்களே! போராடுவோம் தோழர்களே! போராடுவோம் தோழர்களே! வெற்றிபெறுவோம் தோழர்களே!*

      Delete