Monday, 6 August 2018

கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு 

தமிழ் மாநில கோட்ட கிளை செயலர்கள் கூட்டம் 05.08.2018 அன்று மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில் வைத்து மாநில தலைவர் M இராஜாங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அனைத்து கோட்ட கிளை செயலர்கள், மாநில சங்க நிர்வாகிகள், சங்க ஆலோசகர்கள் மற்றும் உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்கு பின் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றி தீர்மான நகல் அகில இந்திய பொதுச் செயலருக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தீர்மானங்கள் 

1) கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைத்த கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு மூன்று கட்ட பதவி உயர்வு வழங்கி பணிக்காலத்தை 12,24,36 வருடங்களுக்கு முறையே இரண்டு,  நான்கு,ஆறு இன்க்ரீமென்ட் வழங்கிட வேண்டும்.

2) பணிக்கொடையாக ரூபாய் 5,00,000/- ம் (Gratuity) severance தொகை ரூபாய் 5,00,000/- வழங்கிட வேண்டும்.

3) மருத்துவ காப்பீடு, மற்றும் குரூப் இன்சூரன்ஸ் ஆகியன கமிட்டியின் பரிந்துரைப்படி அமுல் படுத்திட வேண்டும்.

4) பணியிடமாற்ற விதிகள் தளர்த்தப்பட்டு கோட்ட அதிகாரிகளுக்கு பணியிடமாற்ற ஆணை வழங்குவதற்கான அதிகாரம் வழங்கிட வேண்டும்.

5) பல கோட்டங்களில் SDBS திட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் இணைக்கப்படாமல் உள்ளனர். எனவே விடுபட்ட ஊழியர்களை உடனடியாக இத்திட்டத்தில் இணைத்திட வேண்டும்.

6) புதிய தொழில்நுட்பங்கள் புகுத்துவதன் மூலம் கிராமிய அஞ்சல் ஊழியர்களின் பணியினை வேலைப்பளுவின் சேர்ப்பதில்லை. எனவே சம்பள கணக்கெடுப்பின் போது ஊதியம் குறைவதற்கான வாய்ப்புகளை இலாகாவே உருவாக்குகிறது. எனவே Darpan திட்டம் கிராமிய அஞ்சலகங்களில் அமலாக்கப்படுவது வரை அலுவலக வருவாய் கணக்கெடுப்பினை தற்காலிகமாக நிறுத்திட வேண்டும்.

7) 01.01.02016 முதல் ஓய்வுபெற்ற அனைத்து கிராமிய அஞ்சல் ஊகியார்க்கும் புதிய சம்பள விகித அடிப்படையில் நிலுவைத்தொகை பணிக்கொடை (Gratuity, Severance Amounts) வழங்கிட வேண்டும்.

8) பதிலிகளாக பணியாற்றிய அனைத்து வெளியாட்களுக்கும் புதிய ஊதிய அடிப்படையில் நிலுவை தொகை வழங்கிட வேண்டும்.

9) 31.07.2018 அன்றைய பேசிச்சுவார்த்தையில் பரிசீலிப்பதாக இலாகா அறிவித்த சேமிப்பு விடுப்பு, கல்வி கட்டணம், ஆகியன உடனடி வழங்கிட ஆணை பிறப்பித்திடவும், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஆணைப்படி Compine duty Allowance, Cash Coveyance Allowance, Composite Allowance, Cycle Allowance ஆகியன பல கோட்டங்களில் வழங்காமல் உள்ளது. உடனடியாக நிவர்த்தி செய்திட வேண்டும்.

10) குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில் IPPB Darban பணிகளில் ஒத்துழையாமை  மற்றும் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்துவது என்றும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.



கூட்ட புகைப்படங்கள் 











2 comments:

  1. தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள அணைத்து GDS ஊழியர்களுக்கும் உயர்தர காகிதத்தில் தத்ரூபமான விளக்கப் படங்களுடன் Hand Held divic-ஐ எப்படி கையாள வேண்டும் எனும் விளக்கத்தினை எளிய தமிழில் அச்சிட்டு கையேடாக வழங்கிட வேண்டும். அந்தக் கையேட்டில் தேவையான இடங்களில் ஆங்கிலச் சொற்களும் இடம் பெறலாம்.

    Hand Held divice-ஐ எப்படி கையாள்வது என்பது பற்றிய விளக்கக் காணொளியை தமிழில் உருவாக்கி அதை You Tube-ல் வெளியிட்டு அதன் விபரத்தை தமிழ்நாடு அஞ்சல் வட்ட GDS ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    மேற்கண்ட விபரங்களை கோரிக்கைகளாக எழுதி அதை GDS ஊழியர்கள் சங்கங்கள் தமிழ்நாடு வட்ட அஞ்சல் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வலியுறுத்த வேண்டும்.

    இதன் மூலம் GDS ஊழியர்களின் Hand Held device பற்றிய பயிற்சி காலத்தை குறைக்க முடியும் என்பதையும் அதிகாரிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

    மேற்படி கையேடு மற்றும் You Tube காணொளி வாயிலாக ஐயமற கற்று தேர்ந்த GDS ஊழியர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களுக்கு உடனடியாக நேரடிப் பயிற்சியளித்து Hand Held device வழங்கி ஆவன செய்ய அதிகாரிகள் முழு ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும்.

    இந்தக் கோரிக்கைகளை அதிகாரிகள் உடனே ஏற்க வேண்டும். செய்வார்களா அதிகாரிகள் இதை? உண்மையான அதிகாரிகள் செய்வார்கள்.

    ReplyDelete