Tuesday, 7 August 2018

முதுபெரும் அரசியல் தலைவர் மறைவு 


திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் திரு.மு.கருணாநிதி அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 95வது வயதில் இன்று 07.08.2018 சென்னை காவேரி மருத்துவமனையில்  காலமானார்.

தமிழகத்தில் ஐந்துமுறை முதல் அமைச்சராகவும், தொடர்ந்து தோல்வியின்றி 30 வருடங்கள் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். எழுத்தாளராக, பத்திரிகையாளராக, சினிமா கதாசிரியராக, தமிழ் மொழி காவலராக பன்முகத்த்தோடு வளம் வந்தவர். தனது ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து தொழில் துறையில் தமிழகத்தை முதலிடம் வகிக்க செய்தவர். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியவர், சென்னையில் வள்ளுவர் கோட்டமும், கன்னியாகுமரியில் கடலுக்குள் 137 அடி உயர திருவள்ளுவர் சிலையை நிறுவியவர். திராவிட முன்னேற்ற கழக தலைவராக 50 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்தியவர். தமிழகத்தில் பல அரசு பொறியியல் கல்லூரிகள் நிறுவி பல்வேறு பட்டதாரிகள் உருவாக வழி வகுத்தவர். குடிசை மாற்று வாரிய திட்டத்தின் மூலம் அடித்தட்டு மக்களை அடுக்குமாடி குடியிருப்பில்  குடியமர்த்தியவர்.ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் எனும் பொது மொழியை அறிமுக  படுத்தியவர்.வேலை நிறுத்தம் செய்ததால் பணியிட நீக்கம் செய்த ஒன்றரை இலட்சம் தமிழக ஊழியர்களை பணியிட நீக்க ஆணையை ரத்து செய்து மீண்டும் பணியாற்றிட ஆணை வழங்கியவர்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் தமிழ் மாநில சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.



1 comment: