Wednesday, 30 August 2017

வேலை நிறுத்த நாட்களில் தேங்கிய தபால்களை பட்டுவாடா செய்திட கூலி வழங்கிட வேண்டி CPMG அவர்களுக்கு எழுதிய கடிதம்.



Monday, 28 August 2017

கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு 

                ஏழு நாட்கள் நடைபெற்ற வீரம் செறிந்த வேலை நிறுத்த போராட்டத்தின் தொடர்ச்சியாக நமது AIGDSU சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக வரும் September இறுதிக்குள் கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை இலாகா அமலாக்க உள்ளது. போராட்டத்தை விமர்சிக்கும் போட்டி சங்கங்களின் பொய்யான வதந்திகளை புறந்தள்ளி நமது வெற்றியினை போராடாத தோழர்களுக்கும் சேர்ந்தே பகிர்ந்தளிப்போம்.

                         சங்க அங்கீகார உறுப்பினர் படிவம் சமர்ப்பித்திட 05.09.2017 இறுதி நாளாகும். எனவே கோட்ட கிளை செயலர்கள் விரைந்து செயல்பட்டு அனைத்து GDS தோழர்களையும் நமது AIGDS சங்கத்தில் உறுப்பினராக்கி தமிழகத்தில் 100% உறுப்பினர் சேர்க்கையை உறுதி செய்திட வேண்டுவதோடு, இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக கோட்ட கண்காணிப்பாளர்களிடம் உறுப்பினர் படிவத்தை சமர்ப்பித்து இலாகாவில் பெரும் உறுப்பினர்  படிவத்திக்கான நகலை மாநில சங்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்.


A இஸ்மாயில் 
மாநில செயலர்.
பாபநாசம் கிளை மாநாடு 

தஞ்சாவூர் கோட்டம் பாபநாசம் கிளை மாநாடு 27.08.2017 அன்று நடைபெற்றது. மாநில பொருளாளர் தோழர் சுவாமிநாதன், கோட்ட செயலர் தோழர் ஜெபாஸ்டியான் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது.

Wednesday, 23 August 2017

கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு 

        ஏழு நாட்கள் வெற்றிகரமாக நடத்திய போராட்டத்தின் மூலம் அரசு நமது கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுத்துள்ளது. போராட்ட பலன்கள் அகில இந்திய சங்க அறிக்கை கிடைத்தபின் வெளியிடப்படும். தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான யூகங்களும் தவறான செய்திகளும் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. நமது சங்கம் எப்போதும் உண்மையான செய்திகளை ஆதாரத்துடன் தான் வெளியிடும். எனவே தவறாக பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனும் செய்தியினை அனைத்து தோழர்களுக்கும் தெரியப்படுத்தவும். மாநில, அகில இந்திய சங்க அதிகாரபூர்வமான இணைய தளங்களில் வரும் செய்தியை மட்டும் சுற்றரிக்கையாக வெளியிட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

A இஸ்மாயில் 
மாநில செயலர் 

மாநில சங்க சுற்றறிக்கை 




Tuesday, 22 August 2017

FLASH NEWS

இன்றைய தினம் (22.08.2017) மாலை  6 மணி அளவில் இலாகா முதல்வருடன் (DG) நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையிலும் தொடர்ந்தது இலாகா அமைச்சர் அலுவலகத்தில் நடந்த பேசிச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது. எனவே நாளைய தினம் (23.08.2017) அனைத்து தோழர்களும் தோழியரும் அவரவர் பணியிடங்களில் பணியில் சேர்ந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

A இஸ்மாயில் 
மாநில செயலர்