Wednesday 19 December 2018

*********************
 *மாநில சங்கத்தின்* *முக்கிய செய்தி* 📢📢📢📢📢
நாள் 19/12/2018
**************************
என் இனிய GDS உறவுகளே, அனைவருக்கும் 
இனிய மாலை வணக்கம்..🙏🏻
இரண்டாம் நாள் வேலை நிறுத்தம் வெற்றி !!!!👍
நாளை மூன்றாம் நாளை நோக்கி நகர்கிறது .பேச்சு வார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை .
***********************
தற்சமயம் நடைபெறும் வேலைநிறுத்தத்தை
சீர் குலைக்கும் விதமாக சில குட்டிக் குட்டி அதிகாரிகள்(மயிலாடுதுறை, திருவாடனை,தாராபுரம், பாளையங்கோட்டை ASP ,IP ,SDI போன்றோர்  ) தங்கள் அதிகாரத்தை தவறுதலாகப் பயன்படுத்தி நமது தோழர், தோழியரை பணிக்குச் செல்லுமாறு அச்சுறுத்தி வருகின்றனர்.

நமது வேலைநிறுத்தம் என்பது "NO WORK, NO PAY" என்ற விதியின் படி சங்க, இந்திய அரசின் சட்டத்திற்கு உட்பட்டு, நமது உரிமையின் அடிப்படையிலேயே நடக்கிறது. எந்த அதிகாரியும் நம்மை புடுங்கக் கூட முடியாது 

இதில் நம் மீது நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரிக்கும் உரிமையில்லை.

 உபகோட்ட அதிகாரிகள் இந்த வேண்டா வேலையில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.

தொழிலாளர் உரிமைக்கு எதிராக நடந்து கொள்ளும் இந்த அரக்க குணம் கொண்ட அதிகாரிகள் இந்தப் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் மாநில சங்கம் இவர்களுக்கெதிரான நடவடிக்கைகளைக் கையிலெடுக்கும் என எச்சரிக்கிறது.
தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம் 
வீரத்தின் விளை நிலமாம் தமிழகத் தோழர்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம் 
வீரம் செறிந்த போராட்ட வாழ்த்துகளுடன்...💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻 
==================
 *M. பாஸ்கரன்* 
அகில இந்திய உதவி பொதுச் செயலாளர்/
மாநில செயலர் (பொறுப்பு),தமிழ் மாநிலம், சென்னை. 
 *********************
 *வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...வலிகள் இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும்...*🙏🏻🙏🏻🙏🏻
*************************

1 comment:

  1. AIGDSU -வின் மத்திய மாநில சங்கங்களின் அலுவல்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் செய்திகளை மட்டுமே GDS ஊழியர்கள் நம்பவேண்டும். வேலைநிறுத்தம் மற்றும் மத்திய மாநில சங்கங்களின் அறிவிப்புகள் நடவடிக்கைகள் பற்றி பிறர் சொல்லக் கேட்டாலும் அந்த செய்திகளின் உண்மைத்தன்மையை மத்திய மாநில சங்கங்களின் அலுவல்பூர்வ இணையதளத்தில் பார்வையிட்டு சரிபார்த்துக் கொள்ளுமாறு GDS உறவுகளை கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete