Thursday, 14 April 2016

Short Submission of Memorandum

                                  ஏழாவது ஊதியக்குழு சம்பந்தமான GDS Committee யிடம் பொதுச்செயலாளர் தோழர் S.S. மஹாதேவைய்யா அவர்கள் அளித்துள்ள memorundam த்தில் இடம் பெற்றுள்ள கோரிக்கைகளை சுருக்கமாக தங்களின் பார்வைக்கு விவரிக்கிறோம்.

1) 1977 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றம் P.V. Rajamma வழக்கில் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், ஐந்தாவது ஊதியக்குழுவில் நீதிபதி தால்வார் அவர்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு இலாகா ஊழியர் அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும்.

2) இந்தியா முழுவதிலும் 2013-2014 நிலவரப்படி உள்ள 1,54,882 தபால் அலுவலகங்களில் 1,29,389 கிளை அஞ்சலகங்களில் பணியாற்றும் 2,59,604 கிராமிய அஞ்சல் ஊழியர்கள் இலாகா ஊழியர்கள் செய்யும் அனைத்து பணிகளையும் செய்து வருகிறார்கள். ஆயினும் 1898 ஆம் ஆண்டு Indian Post Office Act படி 5 மணி நேரப்பணிதான் அதிகபட்சமாக கணக்கிடப்படுகிறது. எனவே வேலைப்பளு அடிப்படையில் பணி நேரம் உயர்த்தப்படவேண்டும்.

3) கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கான Conduct and Employment Rules என்பது நடராஜ மூர்த்தி கமிட்டி அறிக்கைக்குப்பின் Conduct and Engagement Rules 2011 என மாற்றப்பட்டு ஒப்பந்த அடிப்படையிலான வேலை எனும் நிலையில் உள்ளது. இது 1977 உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், தொடர்ந்து அமைக்கப்பட்ட ஊதியக்குழு அறிக்கைகளுக்கும் எதிரானது. எனவே Conduct and Engagement Rules 2011 என்பது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

4) கிளை அஞ்சலகங்களின் வேலை நேரம் குறைந்தபட்சம் ஆறு மணி நேரமாகவும் அதிகபட்சம் 8 மணி நேரமாகவும் உயர்த்தப்பட வேண்டும். Time Related Continuity Allowance(TRCA) முறையில் கிராமிய அஞ்சல் ஊழியர்களின் பணி அனைத்தும் கணக்கிடப்படுவதில்லை. புதிய பணிகள் அனைத்தும் GDS ஊழியர்களுக்கு வழங்கப்பட்டும் ஊதிய நிர்ணய அளவீட்டின் போது பணிகள் அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ள படுவதில்லை. எனவே TRCA முறை மாற்றப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

5) ஊதியம் சம்மந்தமான கோரிக்கை

கிராமிய அஞ்சலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இலாகா ஊழியர்களுக்கு இணையான பணிகளை திருப்திகரமாக செய்து வருகின்றனர். எனவே இலாகா ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற அனைத்து சலுகைகளும் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். GDS BPM தோழர்களுக்கு Postal Assistant சம்பள விகித அடிப்படையிலும், GDS MD தோழர்களுக்கு Post Man சம்பள விகித அடிப்படையிலும்,GDS MC/PKR/Mailman  தோழர்களுக்கு MTS சம்பள விகித அடிப்படையிலும் ஊதியம் வழங்கிட வேண்டும்.

6) விடுப்பு சம்பந்தமாக விடப்பட்ட கோரிக்கைகள்

a. இலாகா ஊழியர்களைப்போல் E.L, 6 மாதத்திற்கு 15 தினங்கள் என கணக்கிட்டு அதனை 300 நாட்கள் வரை சேமித்து வைத்து அதில் உபயோகித்த நாட்களை கழித்து மீதமுள்ள நாட்களுக்கு பணி முதிர்வு அடைந்தபின் அதற்குரிய பண பலன் வழங்கிட வகை செய்ய வேண்டும்.

b. மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிற CL புறநிலை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

c. HPL மத்திய அரசு ஊழியர்களை போல் கணக்கிட்டு 6 மாதத்திற்கு ஒருமுறை 10 தினங்கள் எனவும் அதனை மருத்துவ விடுப்பில் Commute செய்வதற்கும் மீதமுள்ள நாட்களை பணிமுதிர்வின் போது காசாக்கி கொள்வதற்கு அனுமதி அளித்திடவேண்டும்.

d. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல LND மொத்த பணி நாட்களில் 360 தினங்கள் வரை வழங்கிட வேண்டும்.

e. பெண் ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பு 6 மாதத்திற்கு அனுமதிக்க வேண்டியும், 45 தினங்கள் abortion - க்கு வழங்க வேண்டியும், குழந்தைகளை பராமரிப்பதற்க்காக மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப்போல் 2 வருட கால விடுமுறை வேண்டி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

f. இதைப்போல் Paternity Leave மற்றும் Extraordinary Leave, Special Casual Leave ஆகியவை 7-வது ஊதிய குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.

7) பணி முதிர்வில் வழங்கவேண்டிய சலுகைகள்

புறநிலை ஊழியர்கள் தங்களது 65-வது வயதில் பணிநிறைவின் போது வெறும் கையோடு செல்லாமல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் அனைத்து சலுகையும் வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு.
a. நடராஜ மூர்த்தி கமிட்டி பரிந்துரைத்த மாதந்தோறும் ரூபாய் 200/- புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு(NPS ) அரசு சார்பில் செலுத்தப்படுவதை மாற்றி மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

b. புறநிலை ஊழியர்கள் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டாலோ அல்லது நோய்வாய்ப்பட்டு பணியினை தொடர இயலாமலோ இருந்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப்போல சலுகைகள் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

c. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவகுவது போல் Commutation of Pension புறநிலை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.

d. மத்திய அரசு ஊழியர்களைப்போல் 80 வயதிற்கு மேல் முறையான உயர்வு ஓய்வூதியத்தில் வழங்க வேண்டும்.

e. DCRG மத்திய அரசு ஊழியர்களைப்போல் கணக்கிட்டு வழங்க வேண்டும்.

f. CGEIS புறநிலை ஊழியர்களிடம் முறையான பிடித்தம் செய்து 10,00,000 வழங்க வேண்டும்.

g. புறநிலை ஊழியர்களுக்கு கீழ்க்காணும் allowances வழங்க வேண்டும்.
      1)  Dearness Allowance
      2) House Rent Allowance
      3) Family Planning Allowance
      4) Children Education Allowance
      5) Funeral Allowance
      6) Uttrarakhand Allowance
      7) Project Allowance
      8) Cycle Maintenance Allowance
      9) Combined Duty Allowance
     10) Overtime Allowance
     11) Allowance for conveyance of cash
     12) Special Duty Allowance
     13) Split Duty Allowance
     14) Fixed Medical Allowance 
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குகிற இதர Allowances வழங்கப்பட வேண்டும். 

8. ஊழியர் சங்கங்களுக்கான சலுகைகள்

a. இதர சங்கங்களுக்கு வழங்குகிற சலுகைகளைப்போல் கிராமிய அஞ்சல் ஊழியர்  சங்கப்  பிரதிநிதிகளுக்கும் Special Casual Leave வழங்க வேண்டும்.

b. கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க நிர்வாகிகள் விருப்பதிற்கேற்ப Foreign Service வழங்க வேண்டும்.

c. JCM அங்கீகாரம் வழங்க வேண்டும்.

9. புறநிலை ஊழியர்களுக்கான பதவி உயர்வு 

தபால்காரர் மற்றும் MTS பதவிகள் அனைத்தும் புறநிலை ஊழியர்களின் பணி மூப்பு அடிப்படையில் வழங்க வேண்டும், வெளியில் இருந்து ஆள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
         தபால்காரர் மற்றும் MTS - ற்கான நியமன உத்தரவில் முறையான மாற்றம் கொண்டு வர வேண்டும்.
         25% PA/SA பதவிகளுக்கு கிராமிய அஞ்சல் ஊழியர்களில் இருந்து நேரடி நியமனம் செய்ய வேண்டும். அதற்க்கு ஏற்றார் போல் நியமன உத்தரவுகளை மாற்றி அமைக்க வேண்டும்.
         மூன்று Financial Upgradations 10,20,30 வருடங்களுக்கு என கணக்கிட்டு வழங்க வேண்டும்.

10. Welfare and Medical 
      இலாகா ஊழியர்களுக்கு வழங்குகிற அனைத்து சலுகைகளும் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கும் எந்த வித Contribution இல்லாமல் வழங்க வேண்டும்.
       மருத்துவ சலுகைகள் மற்றும் CGHS சலுகைகள் அனைத்தும் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
       இலாகா ஊழியர்களுக்கு வழங்குவதைபோல் HBA வழங்க வேண்டும்.
       இலாகா ஊழியர்களுக்கு வழங்குவதைப்போல் LTC வழங்க வேண்டும்.
  கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கான Training Period -ல் ஊதியம் வழங்க வேண்டும்.
  கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கான அலுவலகத்தில் ஊழியர்களுக்கு கீழ்க்காணும் வசதிகள் செய்து தர வேண்டும்.

1. Proper Counter
2. Chairs, Tables and Furniture
3. Almirah
4. A small hand box for counter
5. one iron chest with inbuilt lock for cash and valuables.

மற்றும் பொதுமக்களுக்கு உரிய வசதிகள் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் அலுவலகத்தில் செய்து கொடுக்கவும்.

        உடல் ஊனமுற்றோருக்கான 3% இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
        Sccoter/Motor Cycle Advance கிராமிய அஞ்சல்ஊழியர்களுக்கு வழங்க                             வேண்டும்.
        Flood Advance -ஆக 30,000 வழங்க வேண்டும்.
        இயற்கை சீற்றத்தின் போது ஏற்படுகிற வீடு சேதம் போன்றவற்றிற்கு முறையான நிவாரணம் வழங்க வேண்டும்.
         வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற வசதியாக அவர்களுக்கு முறையான Salary Certificate வழங்க வேண்டும்.
         Condingency உயர்த்தி வழங்க வேண்டும்.

இவை அனைத்தும் அடங்கிய ஒரு Memorandum கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் S.S. மஹாதேவைய்யா அவர்களால் GDS committee யிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
                                              தோழமையுடன்
                                                                                                    A.Ismail
                                                                                              Circle Secretary
                                                                                            Tamil Nadu Circle

No comments:

Post a Comment