அன்பார்ந்த கோட்ட/கிளை செயலர்களுக்கு
மத்திய சங்க அறிவிப்பின்படி முதல் கட்ட போராட்டத்தை இன்று (25.09.2018) சிறப்பான முறையில் நடத்தி ஊழியர்களின் போராட்ட உணர்வினை வெளிப்படுத்தி கோரிக்கைகளின் வெற்றியினை நோக்கி அணி திரட்டி உள்ளீர்கள். அறிவித்த குறுகிய காலத்தில் இத்தனை சிறப்பாக போராட்டம் நடத்திட எடுத்த முயற்சிக்கு மாநில சங்கம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.
இரண்டாவது கட்டமாக சென்னையில் CPMG அலுவலகம் முன்பு 04.10.2018 அன்று நடைபெற இருக்கும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஒவ்வொரு கோட்டத்திலிருந்தும் பெருவாரியான தோழர்களை கலந்து கொள்ள செய்திட நடவடிக்கை எடுத்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
A இஸ்மாயில்
மாநில செயலர்
No comments:
Post a Comment