அன்பார்ந்த தோழர்களே,
நமது அகில இந்திய சங்க அறைகூவல்படி 25.09.2018 செவ்வாய் காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை கோட்ட தலைமையிடங்களில் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்திட மாநில சங்கம் விடுத்த வேண்டுகோளை வெற்றிகரமாக நிறைவேற்றிடவும், போராட்டத்தின் வீச்சம் அரசையும், அஞ்சல் துறையையும் நம்மை நோக்கி திருப்பிடும் விதமாக அமைந்திட வேண்டும். கோரிக்கையின் வெற்றியை இலக்காக கொண்டு நடத்திடும் போராட்ட நிகழ்வுகளை மாநில சங்கத்துக்கு புகைப்படத்துடன் கூடிய செய்தியாக அனுப்பி வைக்கவும். நமது வீரம் செறிந்த போராட்டத்தின் மூலம் மீண்டும் வெற்றி இலக்கை அடைவோம்.
04.10.2018 இல் சென்னை CPMG அலுவலகம் முன் நடைபெற இருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க அனைத்து கோட்ட பொறுப்பாளர்களும் தோழர்களை தயார் படுத்தி பெரும் திரளாக சென்னை போராட்டத்தில் பங்கேற்றிட செய்திடவும்.
போராட்ட வாழ்த்துக்களுடன்
A இஸ்மாயில்
மாநில செயலர்
Please press meet arrange
ReplyDeleteபோராட்டமே நமது வாழ்க்கை...
ReplyDeleteபோராட்டமே நமது வாழ்க்கை...
ReplyDeleteஎப்ப தான் விடிகாலம் பிறக்கும்
ReplyDeleteஅஞ்சல் கோட்ட தலைமையிடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்திட எந்த முயற்சியும் செய்யாத சங்கத்தின் கோட்ட செயலாளர்களிடம் அதற்கான காரணத்தினை மாநில சங்கம் கடிதம் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும்.
ReplyDelete