Saturday, 15 September 2018

கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு 

          06.09.2018 அன்று டெல்லியில் நடைபெற்ற முச்சங்கங்களின் JCA கூட்ட முடிவின்படி மூன்று கட்ட உண்ணாவிரத போராட்டங்களை மத்திய சங்கம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட இலாகாவை வலியுறுத்தும் விதமாக போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாநில சங்கம் இது சம்மந்தமாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண் 23 இல் 6 கோரிக்கைகள் மட்டும் பதிவிடப்பட்டுள்ளது. சுற்றறிக்கையில் ஏற்பட்ட தவறுக்கு மாநில சங்கம் வருத்தம் தெரிவித்து கொள்கிறது.

     கோட்ட கிளை செயலர்கள் 25.09.2018 அன்று கோட்ட மட்டங்களில் உண்ணாவிரத போராட்டத்தை முழு வீச்சுடன் நடத்துவதோடு, 04.10.2018 அன்று சென்னை CPMG அலுவலகம் முன் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு கோட்ட கிளைகளில் இருந்து அதிக அளவில் உறுப்பினர்களை பங்கு கொள்ள செய்திட உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டு அதிகப்படியான உறுப்பினர்களை சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கு பெற செய்திடவும், 10.10.2018 இல் டெல்லியில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளும் தோழர்கள் தங்கள் பயண ஏற்பாடுகளை தாங்களாகவே செய்து கொள்ளவும்.

            போராட்டத்தை வெற்றியடைய செய்திட கோட்ட கிளை செயலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

A இஸ்மாயில் 
மாநில செயலர்.













No comments:

Post a Comment