M.Baskaran, Circle Seretary,B5,P&T Quarters,Dr.Subarayanagar,Teynampet, Chennai-600018
Friday, 28 September 2018
AIGDSU Emergency Central working committee meeting (Informal)
AIGDSU Emergency Central working
committee meeting (Informal) will be
held on 09-10-2018 on Tuesday from
10 A.M. to 4 P.M. in Ravidas mandir,
Wednesday, 26 September 2018
Department of Posts Postmen &MailGuard Recuritment Rules 2018 "மத்திய அரசிதழில் 20.09.2018 ல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய தேர்வு விதிமுறைகள் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட நாளில் இருந்து அமலுக்கு வருகிறது.
POSTMEN RECRUITMENT RULES
******************
25% காலியிடங்கள் :-
காலிபணியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்த பட்சம் 6 ஆண்டுகள பணி முடித்த MTS ஊழியர்கள் மூலம்பணிமூப்பு(Senority) அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும். நிரப்பபடாத இடங்கள் GDSஊழியர்களின் போட்டி தேர்வுகளுக்கான இடங்களுடன் சேர்க்கப்படும்.
******************
25% காலியிடங்கள் :-
காலிபணியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணிமுடித்த MTS ஊழியர்கள் மூலம் போட்டித்தேர்வின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும் . இதில் அந்த கோட்டங்களில் பூர்த்தி செய்யபடாத இடங்கள் மாநில அளவில் உள்ள மற்ற அஞ்சல் கோட்டங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற MTS ஊழியர்கள் மூலம் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.
இதன்மூலம் பூர்த்தி செய்யபடாத இடங்கள் மாநிலம் அளவில் RMS கோட்டங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற MTS ஊழியர்கள் மூலம் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.
மேற்கண்ட முறைகளிலும் பூர்த்தி செய்யப்படாத இடங்கள் GDS ஊழியர்களின் போட்டி தேர்வுகளுக்கான இடங்களுடன் சேர்க்கப்படும்
******************
50%காலியிடங்கள் :-
காலிபணியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிமுடித்த GDS ஊழியர்கள் மூலம் போட்டி தேர்வின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும். இதில் அந்த கோட்டங்களில் பூர்த்தி செய்யபடாத இடங்கள் மாநில அளவில் உள்ள மற்ற அஞ்சல் கோட்டங்களில் தேர்வு எழுதிய தேர்ச்சி பெற்ற GDS ஊழியர்கள் மூலம் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும் . இதன்மூலம் பூர்த்தி செய்யபடாத இடங்கள் மாநில அளவில் RMS கோட்டங்களில் உள்ள தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற GDS ஊழியர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற GDS ஊழியர்கள் மதிப்பெண் தரவரிசை அடிப்படை பூர்த்தி செய்யப்படும். GDS ஊழியர்கள் தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 50 (OBC பிரிவிற்கு 3 ஆண்டுகளும் SC/ST பிரிவிற்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
இதன்பிறகும் பூர்த்தி செய்யபடாத இடங்கள் நேரடி தேர்வு(Direct Recruitment ) முறை மூலம் நிரப்பப்படும்.
MAILGUARD RECRUITMENT RULES
******************
25%காலியிடங்கள்
காலிபணியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்த பட்சம் 6 ஆண்டுகள் பணி முடித்த MTS ஊழியர்கள் மூலம் பணிமூப்பு (Senority) அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும். நிரப்பபடாத இடங்கள் GDSஊழியர்களின் போட்டி தேர்வுகளுக்கான இடங்களுடன் சேர்க்கப்படும்.
******************
50% காலியிடங்கள் -
காலிபணியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணிமுடித்த MTS ஊழியர்கள் மூலம் போட்டித்தேர்வின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும் . சம்பந்தப்பட்ட RMS கோட்டத்தில் பூர்த்தி செய்யபடாத இடங்கள் மாநில அளவில் உள்ள மற்ற RMS கோட்டங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற MTS ஊழியர்கள் மூலம் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.இதன்மூலம் பூர்த்தி செய்யபடாத MAILGUARD இடங்கள் அஞ்சல் கோட்டங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற MTS ஊழியர்கள் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்.
மேற்கண்ட முறைகளிலும் பூர்த்தி செய்யப்படாத MAILGUARD இடங்கள் GDS ஊழியர்களின் போட்டி தேர்வுகளுக்கான இடங்களுடன் சேர்க்கப்படும்
******************
25%காலியிடங்கள்
காலிபணியிடங்களுக்கான ஆண்டின் ஜனவரி மாதம் 1ந்தேதி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிமுடித்த GDS ஊழியர்கள் மூலம் போட்டி தேர்வின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும். இதில் சம்பந்தப்பட்ட RMS கோட்டத்தில் பூர்த்தி செய்யபடாத MAILGUARD இடங்கள் மாநில அளவில் உள்ள மற்ற RMS கோட்டங்களில் தேர்வு எழுதிய தேர்ச்சி பெற்ற GDS ஊழியர்கள் மூலம் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும் .
இதன்மூலம் பூர்த்தி செய்யபடாத MAILGUARD இடங்கள் அஞ்சல் கோட்டங்களில் உள்ள தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற GDS ஊழியர்கள் தரவரிசை அடிப்படை பூர்த்தி செய்யப்படும்.
GDS ஊழியர்கள் தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 50 (OBC பிரிவிற்கு 3 ஆண்டுகளும் SC/ST பிரிவிற்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.
******************
Tuesday, 25 September 2018
அன்பார்ந்த கோட்ட/கிளை செயலர்களுக்கு
மத்திய சங்க அறிவிப்பின்படி முதல் கட்ட போராட்டத்தை இன்று (25.09.2018) சிறப்பான முறையில் நடத்தி ஊழியர்களின் போராட்ட உணர்வினை வெளிப்படுத்தி கோரிக்கைகளின் வெற்றியினை நோக்கி அணி திரட்டி உள்ளீர்கள். அறிவித்த குறுகிய காலத்தில் இத்தனை சிறப்பாக போராட்டம் நடத்திட எடுத்த முயற்சிக்கு மாநில சங்கம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.
இரண்டாவது கட்டமாக சென்னையில் CPMG அலுவலகம் முன்பு 04.10.2018 அன்று நடைபெற இருக்கும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஒவ்வொரு கோட்டத்திலிருந்தும் பெருவாரியான தோழர்களை கலந்து கொள்ள செய்திட நடவடிக்கை எடுத்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
A இஸ்மாயில்
மாநில செயலர்
Monday, 24 September 2018
அன்பார்ந்த தோழர்களே,
நமது அகில இந்திய சங்க அறைகூவல்படி 25.09.2018 செவ்வாய் காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை கோட்ட தலைமையிடங்களில் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்திட மாநில சங்கம் விடுத்த வேண்டுகோளை வெற்றிகரமாக நிறைவேற்றிடவும், போராட்டத்தின் வீச்சம் அரசையும், அஞ்சல் துறையையும் நம்மை நோக்கி திருப்பிடும் விதமாக அமைந்திட வேண்டும். கோரிக்கையின் வெற்றியை இலக்காக கொண்டு நடத்திடும் போராட்ட நிகழ்வுகளை மாநில சங்கத்துக்கு புகைப்படத்துடன் கூடிய செய்தியாக அனுப்பி வைக்கவும். நமது வீரம் செறிந்த போராட்டத்தின் மூலம் மீண்டும் வெற்றி இலக்கை அடைவோம்.
04.10.2018 இல் சென்னை CPMG அலுவலகம் முன் நடைபெற இருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க அனைத்து கோட்ட பொறுப்பாளர்களும் தோழர்களை தயார் படுத்தி பெரும் திரளாக சென்னை போராட்டத்தில் பங்கேற்றிட செய்திடவும்.
போராட்ட வாழ்த்துக்களுடன்
A இஸ்மாயில்
மாநில செயலர்
Saturday, 15 September 2018
அஞ்சல் துறை செயலர் திரு.A.N.நந்தா அவர்கள் அனைத்து CPMGகளுக்கும் ஒரு அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார். உச்சநீதிமன்ற வழக்கு சம்பந்தமாக கீழ்கண்ட விவரங்களை 15.09.2018 க்குள் அஞ்சல் துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.*
(அ) . *GDS ஊழியர்களிலிருந்து 01.01.2004முன் அஞ்சல் துறையில் GROUP C/GROUP D ஊழியர்களாக பணியில் சேர்ந்து பத்தாண்டுகள் முழுமையாக இலாகா பணி செய்யாமல் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் இலாகா பணி செய்து பத்தாண்டுகள் சேவைக்காலம் இல்லாததால் பென்ஷன் பெற முடியாத ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை.*
(ஆ) *மேற்கண்ட ஊழியர்களுக்கு pension அளிப்பதனால் ஏற்படும் உத்தேச செலவுத்தொகை*
(இ) *01.01.1994முதல்31.12.2013 முடிய GDSஊழியர்களிலிருந்து இருந்து இலாக்கா ஊழியர்களாக (GROUP C/ GROUP D ) பதவி உயர்வு பெற்ற ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை.*
கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு
06.09.2018 அன்று டெல்லியில் நடைபெற்ற முச்சங்கங்களின் JCA கூட்ட முடிவின்படி மூன்று கட்ட உண்ணாவிரத போராட்டங்களை மத்திய சங்கம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட இலாகாவை வலியுறுத்தும் விதமாக போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாநில சங்கம் இது சம்மந்தமாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண் 23 இல் 6 கோரிக்கைகள் மட்டும் பதிவிடப்பட்டுள்ளது. சுற்றறிக்கையில் ஏற்பட்ட தவறுக்கு மாநில சங்கம் வருத்தம் தெரிவித்து கொள்கிறது.
கோட்ட கிளை செயலர்கள் 25.09.2018 அன்று கோட்ட மட்டங்களில் உண்ணாவிரத போராட்டத்தை முழு வீச்சுடன் நடத்துவதோடு, 04.10.2018 அன்று சென்னை CPMG அலுவலகம் முன் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு கோட்ட கிளைகளில் இருந்து அதிக அளவில் உறுப்பினர்களை பங்கு கொள்ள செய்திட உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டு அதிகப்படியான உறுப்பினர்களை சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கு பெற செய்திடவும், 10.10.2018 இல் டெல்லியில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளும் தோழர்கள் தங்கள் பயண ஏற்பாடுகளை தாங்களாகவே செய்து கொள்ளவும்.
போராட்டத்தை வெற்றியடைய செய்திட கோட்ட கிளை செயலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
A இஸ்மாயில்
மாநில செயலர்.
Friday, 14 September 2018
Monday, 10 September 2018
மயிலாடுதுறை கோட்ட மாநாடு
மயிலாடுதுறை கோட்ட மாநாடு 09.09.2018 அன்று மயிலாடுதுறை ROA கட்டிடத்தில் வைத்து கோட்டத் தலைவர் K பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலர் A இஸ்மாயில் மாநில சங்க ஆலோசகர் தோழர் R ஜான் பிரிட்டோ, மாநில சங்க பொருளாளர் R ஸ்வாமிநாதன், P3 கோட்ட தலைவர் ஊமைத்துரை, செயலர் மோகன் குமார் சீர்காழி P3 கிளை செயலர் கோவிந்தராஜன், சாமி கணேசன், தர்மதாஸ், விருத்தாசலம் கோட்ட செயலர் ராமகிருஷ்ணன், நாகப்பட்டிணம் கோட்ட செயலர் இளங்கோவன், சீர்காழி கிளை தலைவர் ரவிச்சந்திரன், செயலர் செந்தில், மன்னார்குடி கிளை செயலர் உதயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கீழ்காணும் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்: P சத்தியசீலன், ABPM, மயிலாடுதுறை
செயலர்: A கலையரசன், ABPM, திருநன்றியூர்
பொருளாளர்: G சாருமதி, BPM, கழுக்காணிமுட்டம்.
புகைப்படங்கள்
Subscribe to:
Posts (Atom)