Wednesday, 9 May 2018

வேலை நிறுத்த போராட்ட தயாரிப்பு 

"கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையை உடனடியாக அமுல் படுத்து" என்ற ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி நமது மத்திய சங்கம் NUPE - GDS (FNPO) சங்கடத்துடன் இணைந்து அரசுக்கு கொடுத்துள்ள வேலை நிறுத்த அறிவிப்பிற்கு ஏற்ப கோட்ட கிளை செயலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து தோழமை சங்கத்துடன் இணைந்து கோட்ட மட்டங்களில், பகுதி கூட்டங்கள் நடத்தி ஊழியர் மத்தியில் போராட்ட வீச்சத்தினை வலுப்படுத்திடவும், பொதுமக்கள் மத்தியில் நமது பிரச்சனைகளை துண்டு பிரசுரங்கள் மூலம் தெரியப்படுத்தி ஆதரவு பெற்றிடவும், ஊடகங்களுக்கு செய்தியினை தெரிவித்து நமது பிரச்சனைகளை வெளிப்படுத்தவும் செய்து GDS ஊழியர்கள் 100 சதவீதம் போராட்டத்தில் பங்கு பெற செய்வதுடன், பதிலியாக பணியாற்றும் (out sider) தோழர்களிடம் நமது கோரிக்கையின் தீவிரத்தை அவர்களிடம் விளக்கி சொல்லி அவர்களையும் பங்கு பெற செய்து போராட்டத்தை வெற்றியடைய செய்து நமது கோரிக்கைகளை வென்றெடுத்திட துடிப்புடன் விரைந்து செயல்படுமாறு மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.


M பாஸ்கரன் 
மாநில செயலர் (பொறுப்பு)

8 comments:

  1. போராடிப் போராடித்தான் கோரிக்கைகளை பெறவேண்டியுள்ளது. போராடி நாம் தோற்றதில்லை போராடாமல் எதுவும் கிடைப்பதில்லை.ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம்.

    ReplyDelete
  2. Replies
    1. This is rong write plz wait other gain

      Delete
  3. வெல்லட்டும் -வெல்லட்டும்
    வா ! மற்றுமொரு போராட்ட களம்
    விரும்பி உன்னை அழைக்கிறது
    ஒட்டுமொத்த சங்கங்களும்
    ஒருசேர இணைகிறது !

    ED அடிமை தலை அறுக்கும்
    லிங்கனும் நீதான்
    இனவேறுபாட்டை அகற்றும்
    லூதர் கிங்கும் நீ தான்
    இந்த சுதந்திரப்போரில் படை நடத்தும்
    நேதாஜியும் நீதான்
    ஜார்களின் கொட்டத்தை ஒடுக்கும் -உன்னத
    பாட்டாளி வர்க்கமும் நீதான்

    ED -சுதந்திர இந்தியாவின்
    அறிவிக்கப்படாத கொத்தடிமைகளா ?
    ஊதிய மாற்றத்தை கூட
    ஊதியத்தை இழந்து பெறுவதற்காக
    பிறந்த சாபத்தின் சாட்சிகளா ?
    அஞ்சல் துறையின் அட்சய பாத்திரத்தில்
    சிதறி விழும் பருக்கைகளுக்காக
    கையேந்தும் வறுமையின் அடையாளங்களா ?
    ஒளிரும் இந்த தேசத்தில்
    ஒடுக்கப்பட்ட இனத்தின் பிறப்புகளா ?

    ஆட்சியில் பங்கு கேட்டனா ?
    அதிகாரத்தில் ஆசை பட்டானா ?
    மல்லையாக்களை போல் வங்கிளில்
    கடன் கேட்டனா !
    கொடுத்த அறிக்கைகை கேட்கிறான் -நீ
    அமைத்த கமிட்டியின் முடிவை கேட்கிறான்

    அஞ்சல் துறையின் தயக்கம் புரியவில்லை -
    தாமதம் ஏன் யாருக்கும் தெரியவில்லை
    அமைச்சரவைக்கு சென்ற கோப்பை கானவில்லை -
    இனியும் பொறுப்பது யாருக்கும் லாபமில்லை

    தட்டி தட்டி பார்த்தோம் -திறப்பதற்கு ஆள் இல்லை
    கேட்டு கேட்டு பார்த்தோம் கொடுக்க நாதி இல்லை
    கிணற்றில் போட்ட கல்லாய் கிடக்கிறது -ED நிலை பார்த்து
    சுற்றமும் நட்பும் கூட சிரிப்பாய் சிரிக்கிறது

    அழுது வாழ அவசியமில்லை -எவரையும்
    தொழுது பிழைக்கவும் விருப்பமில்லை
    பழுது பட்ட இயக்க ஆயுதங்களை கூற்படுத்தி
    போர் பரணி பாடி இணைந்திடுவோம்

    வேலை நிறுத்த நாளை -திருவிழாபோல்
    எதிர்கொள்வோம்
    எதிர்ப்போரின் விலா ஓடிய
    வீறு கொண்டு எழுந்திடுவோம்

    கந்தர்வ வரிகளை போல்
    கடையடைப்பு நடத்தும் காலமல்ல
    படையெடுக்கும் காலம்
    முதல் சங்கம் -இடை சங்கம்
    கடை சங்கம் போய் -இன்று
    தொழிற்சங்க காலம் -அமைய போவது
    தொழிலாளியின் களம்
    போராட்ட வாழ்த்துக்கள்
    Karthikeyan.K Gdsmd/mc

    ReplyDelete
  4. This is tirunelvelli post bro,anyway union is strength

    ReplyDelete
  5. நமது இலாகா மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதை முற்றிலும் தடுக்க நமது போராட்டம்தான் சரியான தீர்வு காண வழிவகுக்கும்...

    ReplyDelete