சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்படும் செய்திகளை உண்மையென கருத வேண்டாம் மாநில சங்கம் வேண்டுகோள்
சமூக வலைத்தளங்களான Whatsapp, Facebook மற்றும் youtube ல் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வதற்காக சில தோழர்கள் உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களையும், வதந்திகளையும் (கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கை சம்மந்தமாக) பரப்பி வருகின்றனர்.
கமிட்டி அறிக்கையின் விரைவான அமலாக்கத்திற்கான நடவடிக்கையில் மத்திய சங்கமும், மாநில சங்கமும் முழு முயற்சியுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 07.11.2017 அன்று மாநில செயலர் நிதித்துறை இணையமைச்சரை சந்தித்த பின் 17.11.2017, 20.11.2017 தியதிகளில் நமது அகில இந்திய பொதுச்செயலரும், பொருளாளரும் நிதித்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ளனர். இலாகாவின் உயர் அதிகாரிகளும் நிதித்துறை அனுமதிக்காக உள்ளனர். தவறான பிரச்சாரங்களை தவிர்த்து உண்மை செய்திகளை Rural Postal Employees, aigdsutamilnadu இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளவும். வதந்திகளை நம்ப வேண்டாம்.
A இஸ்மாயில்
மாநில செயலர்
No comments:
Post a Comment