Monday, 1 October 2018

Clarification regarding drawl of Composite allowance to GDS BPMs on implementation of recommendations of One Man committee on wages and allowances of Gramin Dak Savaks (GDS).

DOP No. 17-31/2016-GDS(Pt) Dated 28-09-2018




இதன் தமிழாக்கம்.

*GDS கமிட்டியின் அமலாக்கத்தில் BPM ஊழியர்களுக்கு Composite Allowance வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் Rs 500, மற்றவர்களுக்கு  Rs250 என உத்தரவு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இது குறித்து பல கோட்டங்களில் குழப்பமானநிலை நீடித்ததால் இது சம்பந்தமாக விளக்கமளித்து அஞ்சல் துறை இன்று உத்தரவு வெளியிட்டுள்ளது.*

*கிளை அஞ்சலகங்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தால் மட்டுமே BPM ஊழியர்களுக்கு ரூ500 வழங்கப்படும் என்றும் பூர்த்திசெய்யாத கிளை அஞ்சலகங்கள் எனில் BPM ஊழியர்களுக்கு ரூ250 வழங்கப்படும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது*.
I.கிளைஅஞ்சலகங்கள்  கீழ்கண்ட ஏதேனும் ஒரு இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.
1. பஞ்சாயத்து கட்டிடங்கள், 2.மத்திய ,மாநில அரசு அலுவலகங்கள் அல்லது பள்ளிகள் .
3.BPMகளின் சொந்த வீடுகள் 
4. உரிய வாடகையுடன் கூடிய கிராமத்தின் முக்கிய பகுதி.
5. தொண்டு நிறுவனங்களின் இடங்கள்.

*II. கிளை அஞ்சலகங்கள் கிராமத்தின் முக்கிய பகுதியில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.*

*III. கிளை அஞ்சலகங்கள் 100 சதுர அடிக்கு குறையாத இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.10×10 சதுரஅடிஉடன் கூடிய இடத்தில் மற்றும் தரைத்தளத்தில் இருப்பது நன்று.*

*IV. கிளை அஞ்சலகங்கள் கிராம சாலைகளின் மூலம் எளிதில் சென்றடைய தக்க வகையில் இருத்தல் வேண்டும் .கிளை அஞ்சலகங்கள் கட்டிடங்களின் முன்பகுதியில் அனைவரும் அறியும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் .வராண்டா ,சமையலறை, படிக்கட்டுகளின் கீழ்ப்பகுதி, படுக்கையறை ,பழுதடைந்த அறைகள், மக்கள் எளிதில் சென்றடைய முடியாத கிராமத்தின் கடைக்கோடி இடங்கள் ஆகியவற்றில் கிளை அஞ்சலகங்கள் அமைக்கப்படக்கூடாது.*

*V. செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களில் கிளை அஞ்சலகங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.மேலும் அது பாதுகாப்பாகவும் உறுதிதன்மையுடனும் இருக்க வேண்டும்.*
*கிளைஅஞ்சலகங்கள் நன்கு காற்றோட்டம் வசதிகளுடன்  அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.*  *கிளை அஞ்சல்அலுவலகங்கள் வெள்ளையடிக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.*

*VI. கிளை அஞ்சலகங்கள்  கையடக்கக் கருவிகள் மின்விசிறி ,மின்சார விளக்கு ஆகியவை பயன்படுத்தத்தக்க வகையில்*
 *மின்இணைப்பு பெற்று இருக்க வேண்டும்.* *சூரியமின்சக்தி  பெறுவதற்கு தகுந்த இடம் இருக்க வேண்டும்.*

*VII. கிளை அஞ்சலகங்கள் கிராமங்களில் கடைகள் உள்ள பிரத்யேகமான இடத்தில் அமைக்கபடலாம். அலுவலக பதிவேடுகள்,Micro ATM மற்றுமுள்ள பொருட்கள் வைக்கப்படுவதற்கான போதிய இடவசதி இருக்க வேண்டும்.*

1 comment:

  1. Dei ismail Jan 2017 la anupuna my request letter ku answer pana thopu ilaya unku

    ReplyDelete