அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாஞ்சலி நிகழ்ச்சி
அன்பு தோழர்களே !
கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு தனி சங்கம் உதயமாக அடித்தளமிட்டு அஞ்சல் துறையில் போராளியாக, அகில இந்திய தொழிற் சங்க தலைவர்களை தமிழகம் நோக்கி திரும்ப வைத்த, அஞ்சல் இயக்கத்தில் அரசியல் சார்பற்ற அசைக்க முடியாத சக்தியாக, தொழிற்சங்க தலைவன் எவ்வாறு இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டி, பல்வேறு தலைவர்களை தென்னகத்தில் தொழிற்சங்கத்தில் உருவாக்கிய அண்ணன் பாலு அவர்கள் 20.10.2015 அன்று இப்பூவுலகை விட்டு விண்ணுலகை அடைந்தார்கள்.
அண்ணன் கண்ட கனவை நிறைவேற்றிட அண்ணனால் அடையாளம் காட்டப்பட்ட நமது பொதுச்செயலர் தோழர் S S மஹாதேவய்யா அவர்கள் கலந்து கொள்ளும் அண்ணன் பாலு அவர்களுடைய மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி வரும் 21.10.2018 அன்று சேலம் நாலு ரோடு அருகில் உள்ள சாமுண்டி சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள லட்சுமி அரங்கில் வைத்து NCA பேரவை சொந்தங்களால் நடைபெற உள்ளது. எனவே தமிழகத்தின் அனைத்து கோட்டத்தில் இருந்தும் பெருவாரியான தோழர்கள் அண்ணனின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று அண்ணனுக்கு புகழஞ்சலி செலுத்தி அவர்தம் வழியில் வீரமிக்க தொழிற்சங்க பணி ஆற்றிட உறுதியேற்போம்.
வாழ்க அண்ணன் பாலு புகழ்.
வளர்க போராட்ட உணர்வு
A இஸ்மாயில்
மாநில செயலர்
No comments:
Post a Comment