Tuesday 6 September 2016

தஞ்சை கோட்ட 9வது கோட்ட மாநாடு

 தஞ்சாவூர் கோட்ட 9வது கோட்ட மாநாடு 04.09.2016 அன்று தஞ்சை தலைமை அஞ்சலகத்தில் வைத்து கோட்ட தலைவர் V ஜானகிராமன் தலைமையில் நடைபெற்றது.

மாநில செயலர்  A இஸ்மாயில் அவர்கள் சங்க கொடியினை ஏற்றி வைத்தார்.

புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் : V ஜானகிராமன், GDS BPM, Mullakkdy BO

செயலர்   :  A செபஸ்தியான், GDS MD, Gudalur BO

பொருளாளர் :  R கருப்பசாமி, GDS BPM, Tettuvasalpatti BO

தொடர்ந்து நடைபெற்ற பொது அரங்கில் மன்னார்குடி கிளை தலைவர் R தமிழ்ச்செல்வன், செயலர் M உதயகுமார், பாபநாசம் கிளை செயலர் S முத்தமிழ் செல்வன், SBCO மண்டல செயலர் C இதயநாதன், P4 முன்னாள் உதவி தலைவர் S A  சாகுல் ஹமீது, P3 முன்னாள் கோட்ட செயலர் M S சௌடையன், மாநில முன்னாள் பொருளாளர் R ஜெகநாதன், மண்டல செயலர் R சுவாமிநாதன், மாநில செயலர் A இஸ்மாயில் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

பெருவாரியான தோழர்களும் தோழியரும் மாநாட்டில் கலந்து சிறப்பித்தனர்.





No comments:

Post a Comment