Wednesday, 7 March 2018

குமரி கோட்ட 10வது கோட்ட மாநாடு

           குமரி கோட்ட 10வது கோட்ட மாநாடு 04.03.2018 அன்று நாகர்கோவில் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க அரங்கத்தில் வைத்து கோட்ட தலைவர் V சுகுமாரன் அவர்கள் தலைமையில் நடை பெற்றது. மாநில சங்க ஆலோசகர் தோழர் R ஜான் பிரிட்டோ, மாநில செயலர் தோழர்.A இஸ்மாயில், மாநில பொறுப்பு செயலர் தோழர். M பாஸ்கரன் கோவில்பட்டி கோட்ட செயலர் தோழர் M பூராஜா, முன்னாள் மண்டல செயலர் தோழர் K குப்புசாமி சங்க ஆலோசகர்கள் தோழர் P முஹம்மது அப்துல் ரவூப், தோழர் வைத்தீஸ்வரன் மற்றும் P3, P4 கோட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 31.03.2017 இல் ஓய்வு பெரும் கோட்ட தலைவர் தோழர் V சுகுமாரன் அவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. கீழ் காணும் நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்: தோழர் A இஸ்மாயில், GDS BPM, South Soorankudy, a/w Eathamozhy.

செயலர்: தோழர் S P சுபாஷ், GDS BPM, Kalpady, a/w Ammandivilai.

பொருளாளர்: தோழர் C தெய்வசெல்வன் GDS MC, Palugal.


மாநாட்டு புகைப்படங்கள்












                                

மாபெரும் ஆர்ப்பாட்ட போராட்டத்தை வெற்றிபெற செய்வீர்

 கோட்ட கிளை செயலர்களுக்கு,

           தமிழகத்தின் பல்வேறு கோட்டங்களில் கோட்ட, உபகோட்ட அதிகாரிகள் GDS தோழர்களுக்கு புதிதாக SB, RD, 26A, RPLI கணக்குகள் ஆரம்பித்திட Target கொடுத்து மிரட்டி வருகிறார்கள். அப்பாவி GDS தோழர்கள் தங்களது சொந்த பணத்தில் கணக்குகளை தொடங்கிட நிர்பந்தித்து வருவதாகவும், அதிகாரிகள் மட்டத்தில் கணக்கு எண்ணிக்கையை காட்டிட ரூபாய் 10 மற்றும் ரூபாய் 25 க்கு RD கணக்குகள் தொடங்கிடவும், குறைந்த தொகையில் RPLI பாலிசிகள் பிடித்திடவும் GDS தோழர்களிடம் கெடுபிடி செய்து வருகிறார்கள். இத்தகைய போக்கு DG உத்தரவுக்கு எதிரானது என்பதை நாம் CPMG அவர்களுக்கு தெரிவித்த பின்னும் கோட்ட மட்டத்தில் இந்நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே Target கொடுத்து Torture செய்யும் போக்கிக்கினை உடனடி நிறுத்திடவும், கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கையை உடனடி அமுல் படுத்திட கோரியும் 09.03.2018 அன்று மாநில சங்கம் அறிவித்துள்ள ஆர்ப்பாட்ட போராட்டங்களை கோட்ட தலைமையிடங்களில் வீரம் செறிந்த போராட்டமாக நடத்திட கோட்ட கிளை செயலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

M பாஸ்கரன் 
மாநில செயலர்(பொறுப்பு)

Saturday, 24 February 2018

தொடர் கறுப்பு சட்டை அணிந்து போராட்டம்


தோழர்களே

    நமது மத்திய சங்க அறிவிப்பின்படி கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை உடனடியாக அமுல் படுத்திடக்கோரி 19.02.2018 முதல் நமது பணியிடங்களில் கறுப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம் தமிழகமெங்கும் இன்றைய தினம் ஐந்தாவது நாளாக வீரம் செறிந்த போராட்டமாக நடை பெற்று வருகிறது. நாளைய தினம் (24.02.2018) நமது போராட்டத்தை சிறப்பான முறையில் நடத்திடவும், வரும் மார்ச் 14 ஆம் தியதிக்குள் நமது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையெனில் 15.03.2018 அன்று டெல்லியில், பிரதமர் இல்லத்தின் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. எனவே தமிழகத்தில் இருந்து பெருவாரியான தோழர்கள் டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்ள தங்கள் பயணத்திற்கான இரயில் முன்பதிவினை உடனடியாக செய்து கொள்ளவும்.

     நமது கோரிக்கை குறித்து பொதுச் செயலர் S S மஹாதேவைய்யா BJP அகில இந்திய தலைவர் அமித்ஷா அவர்களை 21.02.2018 அன்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் சந்தித்து பிரச்னையின் தீவிரத்தை எடுத்துரைத்து கோரிக்கை மனு அளித்துள்ளார்கள். BJP தலைவர் அவர்கள் நமது கோரிக்கையை உடனடி கவனிப்பதாக உறுதிமொழி அளித்துள்ளார்.

   பயண ஏற்பாடு செய்துள்ள தோழர்கள் பொறுப்பு செயலர் தோழர் M பாஸ்கரன் அவர்களிடமோ அகில இந்திய தலைவர் தோழர் M இராஜாங்கம் அவர்களிடமோ தங்கள் பயண விபரங்களை தெரிவித்தால் தலைநகரில் மத்திய சங்கம் ஏற்பாடு செய்துள்ள ரவிதாஸ் மந்திர் குருத்துவாரா இல் இருந்து தமிழக தோழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டி மாநில சங்கம் ஏற்பாடு செய்யும்.



M பாஸ்கரன் 
மாநில செயலர் (பொறுப்பு)





















Friday, 16 February 2018