Tuesday, 28 November 2017

கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையினை உடனடியாக அமுல்படுத்தக் கோரி பாரதிய ஜனதா தேசிய தலைவர் திரு.H. ராஜா அவர்களுடன் சந்திப்பு.

கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கையினை உடனடியாக அமுல்படுத்திடக்கோரி பாரதிய ஜனதா தேசிய தலைவர் திரு.H ராஜா அவர்களை காரைக்குடியில் அவருடைய இல்லத்தில் இன்று காலை (28.11.2017) மாநில சங்க தலைமை ஆலோசகர் தோழர் R ஜான் பிரிட்டோ, தென் மண்டல செயலாளர் தோழர் பாஸ்கரன், காரைக்குடி கோட்ட செயலர் தோழர் M ரவி ஆறுமுகம், தலைவர் தோழர் S சிவகுமார், பொருளாளர் தோழர் S S முருகன், முன்னாள் செயலர் S ஆறுமுகம், முன்னாள் தலைவர் S பூமிநாதன் மூத்த தோழர் K R ஆதிமுத்து ஆகியோர் சந்தித்து மாநில சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு அளித்து GDS ஊழியர் பிரச்சனைகளை தெளிவாக எடுத்துரைத்தனர். சுமார் ஒருமணிநேரம் கடந்த சந்திப்பின் விளைவாக திரு H ராஜா அவர்களும் தான் உடனடியாக நிதி அமைச்சரை சந்தித்து GDS பிரச்சனைகளை விரிவாக எடுத்துரைத்து கமிட்டி அறிக்கையின் அமலாக்கத்திற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். மாநில சங்கம் கமிட்டி அறிக்கையின் அமுலாக்கத்திற்கான தொடர் நடவடிக்கைகளை விரைவு படுத்தி உள்ளது.

A இஸ்மாயில் 
மாநில செயலர்.






Monday, 27 November 2017

மிலாடி நபி விடுமுறை நாள் மாற்றப்பட்டுள்ளது.

கோவில்பட்டி கிளை மாநாடு

கோவில்பட்டி கிளை மாநாடு கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் வைத்து 26.11.2017 அன்று நடைபெற்றது. மாநில தலைமை ஆலோசகர் தோழர் R ஜான் பிரிட்டோ, மாநில செயலர் தோழர் A இஸ்மாயில், மண்டல செயலர் தோழர் பாஸ்கரன், விருதுநகர் கோட்ட செயலர் தோழர் அசோக்குமார், தலைவர் தோழர் ராமசுவாமி, ராமநாதபுரம் கோட்ட தலைவர் தோழர் சேகர், கோவில்பட்டி கோட்ட செயலர் தோழர் பூராஜா, தலைவர் தோழர் நெல்லையப்பர் முன்னாள் தென் மண்டல செயலர் தோழர் குப்புசாமி, கோவில்பட்டி கோட்ட சங்க ஆலோசகர் தோழர் முருகேசன், சங்கரன் கோவில் கிளைச்செயலாளர் தோழர் M இராஜமனி உட்பட பலர் கலந்து கொண்டனர். கீழ்கண்ட நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். 

தலைவர்                 : தோழர் W ஜெயராஜ்
                                       GDS MD /MC, அய்யனார் ஊத்து

செயலர்                   : தோழர் U பிச்சையா
                                       GDS MD /MC, கிழக்கு பாண்டவர் மங்களம்

பொருளாளர்         : தோழர் S பாண்டுரங்கன்
                                       GDS MD /MC, சூரங்குடி


மாநாட்டு புகைப்படங்கள்









Tuesday, 21 November 2017

சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்படும் செய்திகளை உண்மையென கருத வேண்டாம் மாநில சங்கம் வேண்டுகோள் 

சமூக வலைத்தளங்களான Whatsapp, Facebook மற்றும் youtube ல் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வதற்காக சில தோழர்கள் உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களையும், வதந்திகளையும் (கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கை சம்மந்தமாக) பரப்பி வருகின்றனர்.

கமிட்டி அறிக்கையின் விரைவான அமலாக்கத்திற்கான நடவடிக்கையில் மத்திய சங்கமும், மாநில சங்கமும் முழு முயற்சியுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 07.11.2017 அன்று மாநில செயலர் நிதித்துறை இணையமைச்சரை சந்தித்த பின் 17.11.2017, 20.11.2017 தியதிகளில் நமது அகில இந்திய பொதுச்செயலரும், பொருளாளரும் நிதித்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ளனர். இலாகாவின் உயர் அதிகாரிகளும் நிதித்துறை அனுமதிக்காக உள்ளனர். தவறான பிரச்சாரங்களை தவிர்த்து உண்மை செய்திகளை Rural Postal Employees, aigdsutamilnadu இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளவும். வதந்திகளை நம்ப வேண்டாம்.

A இஸ்மாயில் 
மாநில செயலர் 
நமது மாநில சங்கத்தின் விடாமுயற்ச்சியின் பயனாக கருணை அடிப்படையிலான பணியிடங்களை நிரப்பிட கடந்த 10.11.2017 அன்று அதற்கான குழு கூட்டம் கூட்டப்பட்டு கல்வி தகுதி அடிப்படையில் GDS பணி இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நமது கோரிக்கை குறித்து விரைவாக முடிவெடுத்த CPMG அவர்களுக்கு மாநில சங்கம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

பணி நியமன ஆணை 
CLICK HERE

Monday, 20 November 2017

கோவில்பட்டி கோட்டம் சங்கரன்கோவில் கிளை மாநாடு 

சங்கரன்கோவில் கிளை மாநாடு 19.11.2017 அன்று சங்கரன்கோவில் தலைமை அஞ்சலகத்தில் வைத்து கோட்டத்தலைவர் தோழர் G அனஞ்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலர் A இஸ்மாயில் மாநில சங்க தலைமை ஆலோசகர் R ஜான் பிரிட்டோ, கோட்டச்செயலர் M பூராஜா கோட்ட சங்க ஆலோசகர் M முருகேசன், கிளை சங்க ஆலோசகர் G முருகேசன் கோவில்பட்டி கிளை சங்க செயலாளர் முன்னாள் தென்மண்டல செயலர் K குப்புசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பெரும்பாலான கிளை சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்                          : தோழர் G அனஞ்சி
                                                  GDS BPM, புன்னையாபுரம் 

செயலாளர்                    : தோழர். M இராஜமனி,
                                                 GDS MD/MC, பணவடலிசத்திரம்.

பொருளாளர்                : தோழர். A பண்டாரம் 
                                                 GDS MD, வீரசிகாமணி