Wednesday, 12 December 2018

*AIGDSU TN CIRCLE* 
நாள்:13/12/2018
.....................................

 அன்பிற்கினிய GDS உறவுகளே அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ..🙏🏻
🙏🏻🙏🏻
......................................

 நேற்றைய  (12-12-18)  நமது மத்திய சங்க அறைகூவலின்படி 14/12/2018 வெள்ளி அன்று மாலை 5மணி அளவில் கோட்ட தலைமை இடங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டமும் 17/12/2018 அன்று 6மணி அளவில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டமும் நடத்த பொதுச் செயலாளர் அறைகூவல் விடுத்துள்ளார் அதனை சிறப்பாக செய்திட மத்திய மாநில சங்கம் அன்போடு வேண்டுகிறது *ஒன்றுபட்ட போராட்டம் வென்று காட்டும் நிச்சயம்* !!!  
ஒன்று படுவோம் போராடுவோம் வெற்றி பெறுவோம் !!! 💪
........................................

இவண் 
*எம்.பாஸ்கரன்*  
மாநில செயலர் (பொறுப்பு) மற்றும் 
அகில இந்திய உதவி பொதுச் செயலாளர்
தமிழ் மாநிலம் சென்னை 
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻


நமது பொதுச்செயலாளர் அவர்கள் Pay commission Arrear தொடர்பாக இலாகா விற்கு எழுதிய கடிதம்👇








மாநில சங்கத்தின் சுற்றறிக்கை



Thursday, 6 December 2018

A|GDSUவின் 10வது அகில இந்திய மாநாட்டில் (மஹாராஷ்ட்ரா மாநிலம்) தலைவராக தோழர்.B.V.ராவ் அவர்களும், தோழர் நாராயணன் சவுத்ரி பொருளாளராகவும், தோழர்.S.S.மகாதேவய்யா அவர்கள் அகில இந்திய பொதுச் செயலராகவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

நமது மதுரை மைந்தன் தோழர்.M.பாஸ்கரன் மாநிலச்செயலர்(பொறுப்பு), உதவிச்செயலர்,தென் மண்டலச்செயலர் அவர்கள்,AIGDSU அகில இந்திய துணைப் பொது ச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு அன்னாரின் சங்கப்பணிகள் சிறப்பாக அமைய இதயப்பூர்வமாக வாழ்த்துகிறோம் 


இவண்
மாநில செயலர் 
AIGDSU தமிழ் மாநிலம் 
சென்னை 

நடைபெற்ற அகில இ்ந்திய 10வது  மாநாட்டில் நமது தமிழகத்தில் இருந்து 15க்கும் மேற்பட்ட கோட்டங்களில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட தோழர்,தோழியர்கள் கலந்து கொண்டு மாநாட்டினை சிறப்படைய செய்தனர்.
மாநாட்டின் இறுதி நாளன்று அகில இந்திய துணை பொதுச்செயலாளர் பதவிக்கு நமது தமிழ் மாநில (பொறுப்பு) செயலாளரும்,மாநில உதவிச்செயலாளர் மற்றும் தென்மண்டலச்செயலாளருமான தோழர். M.பாஸ்கரன் அவர்கள் பெயர் பரிசீலிக்கப்பட்டு போட்டியி்ன்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாபெறும் வெற்றி.தமிழ்நாட்டு தோழர்களின் ஒட்டு மொத்த ஒற்றுமைக்கு கிடைத்த அருமையான வெற்றி.

AIGDS Union  10வது அகில இந்திய மாநாட்டுக் காட்சிகள்  நாள் DEC 3 ,4, 5 /2018     இடம்: மகாராஷ்டிரா மாநிலம், துலி நகரம்