Monday, 10 July 2017

தொழிற்சங்க சகுனி சிரிதரன் - எச்சரிக்கை 

அன்பார்ந்த தோழர்களே

   தொழிற்சங்க அங்கீகாரம் வழங்கிட இலாகாவால் அறிவிப்பு வெளியிடப்பட்டு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க (AIGDSU) கோட்ட கிளை நிர்வாகிகள் பம்பரம் போல் செயல்பட்டு உறுப்பினர் படிவங்களை பெற்று வரும் செய்திகள் மாநில சங்கத்திற்கு வலு சேர்ப்பதாக உள்ளது. அகில இந்திய அளவில் AIGDSU சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ள சூஸ்நிலையில், இலாகாவின் அடக்குமுறைகளை எதிர்க்கும் துணிவும், ஆற்றலும் மிக்க நமது சங்க மா பொதுச்செயலர் தோழர் S S மஹாதேவையா அவர்களின் தொழிற் சங்க செயல்பாடுகளை சகித்து கொள்ள முடியாத தொழிற் சங்க வியாபாரிகள் நமது கிராமிய அஞ்சல் ஊழியர்களின் ஒற்றுமையை குலைக்கும் விதமான நடவடிக்கைகளில் மிக தீவிரமாக செயல்படுவது வேதனைக்குரியது. NFPE என்ற மாபெரும் தொழிற்சங்க இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டுக்கு பிந்தைய தலைமை பதவியில் அமர்ந்த K V சிரீதரன், கிருஷ்ணன் போன்றோர் தொழிற்சங்கங்களை உடைத்து, தொழிலாளர்களின் போராட்ட உணர்வினை மழுங்கடித்து, இலாகாவுடன் கைகோர்த்துக் கொண்டு இலாகாவின் அடிவருடிகளாக செயல்பட்டு இலாகாவில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தங்களுக்கென தொழிற்சங்கத்தில் பதவிகளை உருவாக்கி பிழைப்பு நடத்திவரும் தரங்கெட்ட செயலை நாம் இன்றளவும் கண்கூடாக கண்டு கொண்டிருக்கின்றோம்.

    இலாகா ஊழியர்களுக்கு பதவி சீரமைப்பு (Cadre Restructure) மூலம் ஏற்படுகின்ற இழப்புகள், பல்வேறு அளவன்ஸ்கள் மறுக்கப்பட்ட நிலையில் 01.01.2016 முதல் வழக்கப்படவேண்டிய அளவன்ஸ்கள் அரசால் 01.07.2017 முதல் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு, போன்றவற்றால் கொதித்து போய் இருக்கும் இலாகா ஊழியரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், இலாகாவில் வலுவான சங்கமான Group 'C' சங்கத்தை உடைத்து General Line சங்கத்தை உருவாக்கிட திட்டமிடும் K V சிரிதரன் கம்பெனியினர் இலாகா ஊழியரின் பிரச்சனைகளை திசை திருப்பிட வலுவான GDS சங்கத்தின் ஒற்றுமையை குலைப்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர்.

    சமூக வலைத்தளங்களில் தங்களது கோயா பல்ஸ் செய்திகளை வெளியிட்டு நமது பொதுச் செயலர் தோழர் S S மஹாதேவய்யா அவர்களை விமர்சனம் செய்வதோடு, NFPE யின் அங்கமான GDS சங்கத்தில் உறுப்பினராகிடவும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் களப்பணியாற்றிட முடியாது எனவே அவர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்திட வேண்டும் என மஹாதேவய்யா இலாகாவுக்கு பரிந்துரை அளித்துள்ளதாக பொய்யான தகவலையும் வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதோடு Whats app Group களிலும் செய்தி பரப்பி வருகின்றனர். இதற்கும் மேலாக K V சிரிதரன் அவர்கள் தமிழகம் முழுவதும் பணியாற்றுகின்ற SPM தோழர்களுக்கு P3,P4 கோட்ட நிர்வாகிகள் மூலம் கடிதம் அனுப்பி தங்கள் அலுவலகங்களின் கீழ் உள்ள கிளை அஞ்சலகங்களில் பணியாற்றும் GDS தோழர்களிடம் மிரட்டி பணியவைதாவது உறுப்பினர் படிவம் கையெழுத்து பெற வேண்டும். அவ்வாறு கையெழுத்திடாத GDS தோழர்களை Non Member ஆக்கிட இரட்டை சங்க படிவ கையெழுத்து பெற்றிட வேண்டும் என்னும் செய்தியினை வேண்டுகோளாக அனுப்பி உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

      அண்ணன் பாலு அவர்களின் உதிரத்தில் மூலம் பெற்ற பதவியால் உயர்ந்த K V  சிரிதரன், அண்ணனின் இறப்பில், இறுதி சடங்கில் கூட கலந்து கொள்ளாத நிலையை நாம் எண்ணி பார்க்கின்ற இவ்வேளையில் அண்ணன் பாலு அவர்களால் உருவாக்கப்பட்ட தோழர் S S மஹாதேவய்யா அவர்களின் பின்னால் அணிவகுத்து நிற்கின்ற GDS தோழர்கள், பதவி சுகத்திற்காக எதையும் இழக்கும், நன்றி மறக்கும் கூட்டத்தின் பின்னால் செல்ல மாட்டார்கள் என்பதையும், GDS தோழர்களின் போராட்ட குணம் அண்ணன் பாலுவால் வளர்க்கப்பட்டது என்பதையும் K.V.S. கூட்டத்திற்கு உணர்த்திட இதுவே சரியான தருணமாகும்.

      எனவே கோட்ட கிளை நிர்வாகிகள் துரோக கும்பலுக்கும், அவர்களை சார்ந்து நிர்ப்பவர்களுக்கும் சாவு மணி அடித்திடவும், போராட்ட விச்சத்தினை, போராட்ட உணர்வினை விரிவுபடுத்திடவும், எச்சரிக்கையுடன் செயல்பட்டு அனைத்து தோழர்களையும் நமது AIGDSU சங்கத்தில் உறுப்பினராகக்கிட படிவம் பெற்றிடவும், அண்ணன் பாலு அவர்களின் கனவான GDS வாழ்வில் விடியல் எனும் எண்ணம் நிறைவேறிட நாம் பணியாற்றிட மாநில சங்கம் அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறது.

A இஸ்மாயில் 
மாநில செயலர் 


1 comment: