M.Baskaran, Circle Seretary,B5,P&T Quarters,Dr.Subarayanagar,Teynampet, Chennai-600018
Thursday, 27 July 2017
Monday, 24 July 2017
வருந்துகிறோம்
புதுக்கோட்டை கோட்ட செயலர் தோழர் S ராமச்சந்திரன் அவர்களின் தகப்பனார் திரு.R சுவாமிநாதன் வயது 78 அவர்கள் இன்று 24.07.2017 காலை 11.00 மணி அளவில் சேர்ந்தார். அவரின் நல்லடக்கம் நாளை 25.05.2017 காலை 11.00 மணி அளவில் பழைய கந்தர்வ கோட்டையில் வைத்து நடைபெறும்.
அன்னாரை இழந்து வாடும் தோழர் ராமச்சந்திரனுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் தமிழ் மாநில சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
A இஸ்மாயில்
மாநில செயலர்.
Sunday, 16 July 2017
குடந்தை கோட்ட 10வது கோட்ட மாநாடு
கும்பகோணம் கோட்ட 10வது கோட்ட மாநாடு கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் வைத்து கோட்டத்தலைவர் S கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் 16.07.2017 அன்று நடைபெற்றது. கோட்ட பொருளாளர் தோழர் C சேகர் அவர்கள் வரவேற்புரையாற்றினார். சங்க கொடியினை மாநில செயலர் A இஸ்மாயில் அவர்கள் ஏற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். செயலாளர் R ஸ்வாமிநாதன் அவர்கள் ஈராண்டறிக்கையினை சமர்ப்பித்தார்.பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் கீழ்காணும் நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து நடந்த வாழ்த்தரங்கத்தில் கோட்ட கண்காணிப்பாளர் L துரைசாமி, உதவி கண்காணிப்பாளர் S அருள்தாஸ் முன்னாள் P3 கோட்ட செயலர் D கோவிந்தராஜன், முன்னாள் P4 கோட்ட செயலர்கள் A நாகராஜன், U பழனிவேலு ஆகியோர் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்தினர். மாநாட்டில் பெருந்திரளான தோழர்களும் தோழியரும் கலந்து சிறப்பித்தனர்.
புதிய நிர்வாகிகள்
தலைவர் : தோழர் S கிருஷ்ணமூர்த்தி
GDS BPM, பழையக்கூடலூர் BO
செயலர் : தோழர் R ஸ்வாமிநாதன்
GDS BPM, கங்காதரப்புரம்.
பொருளாளர்: C சேகர்
GDS BPM, கோவிந்தபுரம் BO
மாநாட்டு புகைப்படங்கள்
Saturday, 15 July 2017
HC Directive On Plea For Restoring Old Pension Scheme
Additional Chief Secretary ( Finance ) Sri.Thiru.K.Shanmugam.
Madurai: Madurai Bench of the Madras High Court has directed the Tamil Nadu Government to file a status report on submission of final report by an expert committee set up to examine the possibility of restoring the old pension scheme for its employees in place of the contributory pension.
- Justice D Raja directed the Additional Chief Secretary, Finance (PGC) Department and the Principal Secretary, Planning and Development, to file the status report within three weeks.
- The order was given during the hearing of a petition by P Fdredic Engels, a retired government school teacher, seeking restoration of the old pension scheme.
- The petitioner said though the committee’s term had been extended thrice last year, it had not yet submitted its report. To a query by him, the government had informed that the report had not been filed till June 8 this year.
- He contended that the contributory pension scheme was discriminatory and violative of fundamental rights as the employees were ‘forced’ to relinquish their hard earned money without authority of law and with no guarantee of returns.
- All the existing retirement benefits, inlcuding provident fund, gratuity, family pension and pension which were available till Feb 31,2003 had been lost.
- Hence the court should direct the government to get the expert committee report within the time frame and restore the old pension scheme, he said.
Thursday, 13 July 2017
FLASH NEWS
கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கை (MOC) தகவல் துறை அமைச்சகத்தில் 12.07.2017 அன்று ஒப்புதல் பெற்று நிதி அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இச்செய்தியினை அனைத்து தோழர்களுக்கும் தெரிவித்து நமது சங்க உறுப்பினர் சேர்க்கையை விரைவு படுத்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
A இஸ்மாயில்
மாநில செயலர்
Wednesday, 12 July 2017
வீர வாழ்த்துக்கள்
மத்திய சங்க அறைகூவல் இன்று (12.07.2017) தமிழகத்தின் அனைத்து கோட்டங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. போராட்டத்தில் பங்கு பெற்ற அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும், கோட்ட கிளை சங்க நிர்வாகிகளுக்கும் மாநில சங்கம் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது.
20.07.2017 அன்று சென்னை CPMG அலுவலகம் முன் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து கோட்டங்களில் இருந்தும் பெருவாரியான GDS தோழர்களை கலந்து கொள்ள செய்திட கோட்ட கிளை நிர்வாகிகள் இப்போதே பணியாற்றிட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
தர்ணா புகைப்படங்கள்
Tuesday, 11 July 2017
Monday, 10 July 2017
தொழிற்சங்க சகுனி சிரிதரன் - எச்சரிக்கை
அன்பார்ந்த தோழர்களே
தொழிற்சங்க அங்கீகாரம் வழங்கிட இலாகாவால் அறிவிப்பு வெளியிடப்பட்டு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க (AIGDSU) கோட்ட கிளை நிர்வாகிகள் பம்பரம் போல் செயல்பட்டு உறுப்பினர் படிவங்களை பெற்று வரும் செய்திகள் மாநில சங்கத்திற்கு வலு சேர்ப்பதாக உள்ளது. அகில இந்திய அளவில் AIGDSU சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ள சூஸ்நிலையில், இலாகாவின் அடக்குமுறைகளை எதிர்க்கும் துணிவும், ஆற்றலும் மிக்க நமது சங்க மா பொதுச்செயலர் தோழர் S S மஹாதேவையா அவர்களின் தொழிற் சங்க செயல்பாடுகளை சகித்து கொள்ள முடியாத தொழிற் சங்க வியாபாரிகள் நமது கிராமிய அஞ்சல் ஊழியர்களின் ஒற்றுமையை குலைக்கும் விதமான நடவடிக்கைகளில் மிக தீவிரமாக செயல்படுவது வேதனைக்குரியது. NFPE என்ற மாபெரும் தொழிற்சங்க இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டுக்கு பிந்தைய தலைமை பதவியில் அமர்ந்த K V சிரீதரன், கிருஷ்ணன் போன்றோர் தொழிற்சங்கங்களை உடைத்து, தொழிலாளர்களின் போராட்ட உணர்வினை மழுங்கடித்து, இலாகாவுடன் கைகோர்த்துக் கொண்டு இலாகாவின் அடிவருடிகளாக செயல்பட்டு இலாகாவில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தங்களுக்கென தொழிற்சங்கத்தில் பதவிகளை உருவாக்கி பிழைப்பு நடத்திவரும் தரங்கெட்ட செயலை நாம் இன்றளவும் கண்கூடாக கண்டு கொண்டிருக்கின்றோம்.
இலாகா ஊழியர்களுக்கு பதவி சீரமைப்பு (Cadre Restructure) மூலம் ஏற்படுகின்ற இழப்புகள், பல்வேறு அளவன்ஸ்கள் மறுக்கப்பட்ட நிலையில் 01.01.2016 முதல் வழக்கப்படவேண்டிய அளவன்ஸ்கள் அரசால் 01.07.2017 முதல் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு, போன்றவற்றால் கொதித்து போய் இருக்கும் இலாகா ஊழியரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், இலாகாவில் வலுவான சங்கமான Group 'C' சங்கத்தை உடைத்து General Line சங்கத்தை உருவாக்கிட திட்டமிடும் K V சிரிதரன் கம்பெனியினர் இலாகா ஊழியரின் பிரச்சனைகளை திசை திருப்பிட வலுவான GDS சங்கத்தின் ஒற்றுமையை குலைப்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் தங்களது கோயா பல்ஸ் செய்திகளை வெளியிட்டு நமது பொதுச் செயலர் தோழர் S S மஹாதேவய்யா அவர்களை விமர்சனம் செய்வதோடு, NFPE யின் அங்கமான GDS சங்கத்தில் உறுப்பினராகிடவும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் களப்பணியாற்றிட முடியாது எனவே அவர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்திட வேண்டும் என மஹாதேவய்யா இலாகாவுக்கு பரிந்துரை அளித்துள்ளதாக பொய்யான தகவலையும் வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதோடு Whats app Group களிலும் செய்தி பரப்பி வருகின்றனர். இதற்கும் மேலாக K V சிரிதரன் அவர்கள் தமிழகம் முழுவதும் பணியாற்றுகின்ற SPM தோழர்களுக்கு P3,P4 கோட்ட நிர்வாகிகள் மூலம் கடிதம் அனுப்பி தங்கள் அலுவலகங்களின் கீழ் உள்ள கிளை அஞ்சலகங்களில் பணியாற்றும் GDS தோழர்களிடம் மிரட்டி பணியவைதாவது உறுப்பினர் படிவம் கையெழுத்து பெற வேண்டும். அவ்வாறு கையெழுத்திடாத GDS தோழர்களை Non Member ஆக்கிட இரட்டை சங்க படிவ கையெழுத்து பெற்றிட வேண்டும் என்னும் செய்தியினை வேண்டுகோளாக அனுப்பி உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அண்ணன் பாலு அவர்களின் உதிரத்தில் மூலம் பெற்ற பதவியால் உயர்ந்த K V சிரிதரன், அண்ணனின் இறப்பில், இறுதி சடங்கில் கூட கலந்து கொள்ளாத நிலையை நாம் எண்ணி பார்க்கின்ற இவ்வேளையில் அண்ணன் பாலு அவர்களால் உருவாக்கப்பட்ட தோழர் S S மஹாதேவய்யா அவர்களின் பின்னால் அணிவகுத்து நிற்கின்ற GDS தோழர்கள், பதவி சுகத்திற்காக எதையும் இழக்கும், நன்றி மறக்கும் கூட்டத்தின் பின்னால் செல்ல மாட்டார்கள் என்பதையும், GDS தோழர்களின் போராட்ட குணம் அண்ணன் பாலுவால் வளர்க்கப்பட்டது என்பதையும் K.V.S. கூட்டத்திற்கு உணர்த்திட இதுவே சரியான தருணமாகும்.
எனவே கோட்ட கிளை நிர்வாகிகள் துரோக கும்பலுக்கும், அவர்களை சார்ந்து நிர்ப்பவர்களுக்கும் சாவு மணி அடித்திடவும், போராட்ட விச்சத்தினை, போராட்ட உணர்வினை விரிவுபடுத்திடவும், எச்சரிக்கையுடன் செயல்பட்டு அனைத்து தோழர்களையும் நமது AIGDSU சங்கத்தில் உறுப்பினராகக்கிட படிவம் பெற்றிடவும், அண்ணன் பாலு அவர்களின் கனவான GDS வாழ்வில் விடியல் எனும் எண்ணம் நிறைவேறிட நாம் பணியாற்றிட மாநில சங்கம் அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறது.
A இஸ்மாயில்
மாநில செயலர்
Friday, 7 July 2017
இரங்கல் செய்தி
தொழிற் சங்க மாமேதை முன்னால் ஒன்றுபட்ட சம்மேளன (NFPTE) பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய மாபெரும் தலைவர் தோழர் ஞானையா (கோயம்புத்தூர்) அவர்கள் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மருத்துவமனையில் வைத்து இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்வதோடு அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
தொழிற் சங்க வரலாற்றில் தொழிலாளர் நலனுக்காக தன்னை அர்ப்பணித்த தலைவர்களின் வரிசையில் தோழர் ஞானையா அவர்களின் அர்ப்பணிப்பு அதனால் அவர் அடைந்த துயரங்கள், இழப்புகள் இன்றைய தலைமுறைக்கு ஒரு வரலாற்று பாடமாகும். அன்னாரின் இழப்பு தொழிற்சங்கத்திற்கு ஈடு செய்ய முடியாதது. அவருடைய ஆன்மா சாந்தி அடைத்திட அனைவரும் பிராத்திப்போம்.
Tuesday, 4 July 2017
12.07.2017 இல் நடைபெறும் போராட்டத்தின் முடிவில் கீழ் காணும் மெமோராண்டத்தினை கையெழுத்திட்டு பிரதமர், நிதியமைச்சர், இலாகா அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கவும்.
MEMORANDUM
To
1. The Hon’ble Prime Minister,
Govt. of India,
New Delhi-110001
2. The Hon’ble Finance Minister,
Government of India,
North Block, New Delhi-110001
3. The Hon’ble Communication Minister
Govt. of India,
Sanchar Bhavan, New Delhi-110001
On behalf of 2.6 lakh Gramin Dak Sevaks in the Department of posts, Most respectfully, this union is submitting memorandum requesting Hon’ble Prime Minister’s intervention for an early implementation of GDS committee Report.
The Gramin Dak Sevaks render their valuable services in one lakh thirty thousand Branch Post offices located in remote areas. Their services are extended to more than 80% population of the country. Unfortunately these low paid employees are being neglected for last 160 years. Nobody care them. This union is requesting the Hon’ble Prime Minister to grant 8 hours work and regularization of GDS.
The Govt. of India appointed one man committee under the presidentship of Sri Kamalesh Chandra retired Postal Board Member to examine wage structure and service conditions of Gramin Dak Sevaks in the month of November 2015. The Committee submitted its report to the Department of posts in the month of November 2016. The Department assured this union on 24th April 2016 during strike negotiations that the committee report will be implemented as early as possible. There is no remarkable action from the Department for implementation. All the GDS are under frustration due to inordinate delay. Hence this union is holding country wide hunger fast today. All the GDS are requesting the Hon’ble Prime Minister’s intervention for an early implementation of GDS Committee report.
Yours faithfully
1.
2.
3.
4.
5.
Monday, 3 July 2017
போராட்ட அறிவிப்பு
கோட்ட/கிளை செயலர் கவனத்திற்கு
கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்திட கோரி மத்திய சங்கம் பல்வேறு அரசியல் தலைவர்களிடமும், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை மனு அளித்தும், இலாகா தலைமையிடம் கோரிக்கை வைத்த பின்னும் அறிக்கையின் அமலாக்கத்தை இலாகா தாமதப்படுத்தி வருகிறது. 25.04.2017 முதல் நடைபெறுவதாக இருந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இலாகாவின் வேண்டுகோளுக்கு இணங்க ஒத்தி வைக்கப்பட்ட பின்னரும் நமது கோரிக்கைகளில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் கமிட்டியின் அறிக்கை இன்று வரை நிதி அமைச்சருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெற பெற விரும்பவில்லை. எனவே மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்திட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதால், மத்திய சங்கம் இலாகாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் 15.08.2017 க்குள் கமிட்டியின் அறிக்கை அமலாக்கப்பட வில்லையெனில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வோம், என்றும் அதற்கு முன்னர் இரண்டு கட்டமாக 12.07.2017 அன்று கோட்ட தலைமையிடங்களில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டமும் 20.07.2017 அன்று மாநில தலைமையிடங்களில் உண்ணாவிரத போராட்டமும் நடத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எனவே கோட்ட/கிளை செயலர்கள் விரைந்து செயல்பட்டு போராட்டத்திற்கான தயாரிப்புகளை செய்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
A இஸ்மாயில்
மாநில செயலர்
Subscribe to:
Posts (Atom)