Friday, 29 September 2017

வருந்துகிறோம் 

பட்டுக்கோட்டை கோட்ட முன்னாள் கோட்ட செயலர் தோழர் S துரைராஜ், வயது 65 அவர்கள் 26.09.2017 அன்று இயற்க்கை எய்தினார். அவரது நல்லடக்கம் 26.09.2017 அன்று மாலை நடைபெற்றது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு மாநில சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திப்போம். 

அம்மாப்பட்டில் நடைபெற்ற 7வது மாநில மாநாட்டினை பொறுப்பேற்று நடத்திட்ட தோழர் S துரைராஜ் அவர்களின் தொழிற்சங்க பணியினையும், அம்மாநாட்டின் கிராமிய சூழலையும் நினைவு கூர்வதில் தமிழ் மாநில சங்கம் அன்னாரின் நினைவினை போற்றுகிறது.

A இஸ்மாயில் 
மாநில செயலர்.

Thursday, 28 September 2017

அனைவருக்கும் தசரா வாழ்த்துக்கள்


ஜூலை 2017 முதல் கிராமிய அஞ்சல் ஊழியருக்கான பஞ்சப்படி(DA) 3% என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான உத்தரவு இலாக்காவிலிருந்து விரைவில் வெளியாகும்.

ORDER COPY


Tuesday, 19 September 2017

2016-17 ஆம் ஆண்டிற்கான போனஸ் 60 நாட்களுக்கு வழங்கிட இலாகா உத்தரவிட்டுள்ளது. இலாகாவின் ஆணை நகல்.




2013 ஆம் ஆண்டு  நிறுத்தப்பட்ட Benevolent Fund திட்டத்தில் GDS ஊழியர்களின் பங்களிப்பு தொகையினை திரும்ப வழங்கிட வேண்டி தமிழ் மாநில சங்கம் எடுத்த முயற்சியால் தற்போது இலாகா GDS ஊழியர்களுக்கு வழங்கிட இருப்பதை முறையாக அந்த திட்டத்தில் உறுப்பினராக இருந்த ஓய்வு பெற்ற, இறந்த GDS ஊழியர்களின் வாரிசுகளுக்கும், பணியில் இருப்பவர்களுக்கும்  வழங்கிட வேண்டி CPMG அவர்களுக்கு எழுதிய கடித்த நகல்.



சங்க அங்கீகார உறுப்பினர் சரிபார்ப்பில் இரட்டை படிவம் கையெழுத்திட்ட உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று AIGDSU சங்கத்தில் உறுப்பினர் ஆக்கிட மறுக்கும் கோட்ட கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிட வேண்டி CPMG அவர்களுக்கு தமிழ் மாநில சங்கம் எழுதிய கடித நகல்.