M.Baskaran, Circle Seretary,B5,P&T Quarters,Dr.Subarayanagar,Teynampet, Chennai-600018
Wednesday, 11 October 2017
Tuesday, 10 October 2017
மாநில சங்க செயற்குழு கூட்டம்
தமிழ் மாநில சங்க செயற்குழு கூட்டம் 08.10.2017 அன்று திருச்சி தலைமை அஞ்சலகத்தில் வைத்து மாநில தலைவர் தோழர் M இராஜாங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநில சங்க நிர்வாகிகளில் ஒருவரை தவிர அனைத்து நிர்வாகிகளும் தமிழ் மாநிலத்தின் ஓரிரு கோட்ட நிர்வாகிகளை தவிர அனைத்து கோட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
அமைப்பு நிலை முதல் பல்வேறு ஆரோக்கியமான விவாதங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெற்றது. விவாதங்களின் அடிப்படையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
சங்க ஆலோசகர் தோழர் R ஜான்பரிட்டோ, T கந்தசுவாமி NCA பேரவை செயலர் தோழர் S முத்துசுவாமி, முன்னாள் பொருளாளர் தோழர் R ஜெகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில அமைப்பு செயலரும், திருச்சி கோட்ட செயலருமான தோழர் K மருதமுத்து அவர்கள் நன்றியுரையுடன் செயற்குழு சிறப்புற முடிந்தது.
நிகழ்வுகளுக்கு சிறப்பான ஏற்பாடு செய்து அனைத்து பகுதியில் இருந்து வந்திருந்த தோழர்களையும் விருந்தோம்பலுடன் உபசரித்து நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த திருச்சி கோட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
A இஸ்மாயில்
மாநில செயலர்.
Thursday, 5 October 2017
Subscribe to:
Posts (Atom)















