*********************
*பிறப்பு இறப்பு மட்டுமே நம்மைத் தேடி வரும் மற்றவற்றை நாம் தான் தேடிச்செல்ல வேண்டும்.*
*********************
*முக்கிய செய்தி*
*********************
வேலை நிறுத்தப் போராட்டம் இன்றுடன்(02/06/2018) பனிரெண்டாம் நாளை நோக்கி நகர்கிறது. நேற்றைய பேச்சு வார்த்தை தோல்வி.
**********************
அனைத்து GDS தோழர் தோழியர்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பில் காலை வணக்கம்...
இன்று காலை 9 மணி முதல் அந்தந்த கோட்ட தலைமையிடங்களில் அனைத்து GDS ஊழியர்களையும் ஒன்றினைத்து பெரிய அளவில் தொடர் உண்ணாவிரத போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திடுமாறு மாநில சங்கம் அன்போடு வேண்டுகிறது.மறு அறிவிப்பு வரும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்.அறிக்கைக்கு ஒப்புதல் கிடைக்கும் வரை வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. வெற்றியை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம்...தளராமல் முன்னேறுவோம்... வெற்றி நமதே...
வீரம் செறிந்த போராட்ட வாழ்த்துகளுடன்...🏻🏻🏻🏻🏻
==================
M. பாஸ்கரன்
மாநில செயலர் (பொறுப்பு)
தென் மண்டல செயலர்,தமிழ் மாநிலம், சென்னை.
*********************
*சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை ,துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.🏻🏻🏻🏻🏻
---அப்துல் கலாம்.* ***********************
மிக்க நன்றி* 🏻🏻🏻🏻🏻
No comments:
Post a Comment