M.Baskaran, Circle Seretary,B5,P&T Quarters,Dr.Subarayanagar,Teynampet, Chennai-600018
Monday, 30 April 2018
தோழர் NCA அவர்களின் நினைவஞ்சலி
தொழிலாளர் உரிமையை பெற வேண்டிட,அதிகார வர்க்கத்தின் ஆணவத்தை அடக்கிட,தொழிலாளர் நலன் காத்திட தொழிற்சங்க தலைவனின் செயல்பாடுகள் எவ்விதம் அமைய வேண்டும் என உணர்த்திய தன்னிகரில்லா தலைவன் , நமது நினைவை விட்டு மறையாத அண்ணன் பாலு அவர்களை உருவாக்கிய தலைவன் தொழிலாளர்களுக்காகவே வாழ்ந்து தொழிலாளர் தினத்திலேயே இவ்வுலகை விட்டு மறைந்த அன்பு தலைவன் N C A அவர்களை கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் என்றென்றும் நினைவு கூர்ந்து தனது அஞ்சலியை செலுத்துகிறது. அவர் விட்டு சென்ற பணியை தொடர தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் இந்நாளில் சபதமேற்கிறது.
மே தின வாழ்த்துக்கள்
தொழிற்சங்க இலக்கணம் -நூற்றாண்டை கடந்தும் வாழும் வலம் வரும் கவிதை
தொழிலாளர் இயக்கம்
பத்தாயிரம் முறை விழும்;
எழும்; வடுபடும்; மறுபடியும்; எழும்!
அதன் குரல்வளை இறுக்கப்படும்,
உணர்வற்றுப் போகும் வரை
தொண்டை அடைக்கப்படும்;
நீதிமன்றம் கேள்விக்கணை தொடுக்கும்;
குண்டர்களால் வசைபாடப்படும்;
பத்திரிக்கைகளால் வசைப்பாடப்படும்;
பொதுமக்களின் புருவ நெரிப்பும் கூட போர் தொடுக்கும்;
அரசியல்வாதிகளால் ஏய்க்கப்படும்;
ஓடுகாலிகளால் மறுப்புரைகள் கூறப்படும்;
கூதாடிகளால் பலிகொடுக்கப்படும்;
உளவாளிகளின் ஒற்றறியும் நோயால் பீடிக்கப்படும்;
கோழைகளால் நடுவீதியில் விடப்படும்;
துரோகிகளால் வஞ்சிக்கப்படும்;
தலைவர்களால் கூட விற்று விடப்படும்!
ஓ!
இவ்வளவு சோதனைகள் இருந்தாலும்
இந்த வையகம்,
இதுவரை கண்டிராத
உன்னத சக்தி வாய்ந்தது -
உழைக்கும் மக்களின் இயக்கம் ஒன்றுதான்!
ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டிருக்கும்
பாட்டாளிகளை விடுதலை செய்வதே
வரலாற்றுக் கடமையாகும்;
இதன் வெற்றி சர்வ நிச்சயமே!
Subscribe to:
Posts (Atom)