Saturday 24 February 2018

தொடர் கறுப்பு சட்டை அணிந்து போராட்டம்


தோழர்களே

    நமது மத்திய சங்க அறிவிப்பின்படி கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை உடனடியாக அமுல் படுத்திடக்கோரி 19.02.2018 முதல் நமது பணியிடங்களில் கறுப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம் தமிழகமெங்கும் இன்றைய தினம் ஐந்தாவது நாளாக வீரம் செறிந்த போராட்டமாக நடை பெற்று வருகிறது. நாளைய தினம் (24.02.2018) நமது போராட்டத்தை சிறப்பான முறையில் நடத்திடவும், வரும் மார்ச் 14 ஆம் தியதிக்குள் நமது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையெனில் 15.03.2018 அன்று டெல்லியில், பிரதமர் இல்லத்தின் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. எனவே தமிழகத்தில் இருந்து பெருவாரியான தோழர்கள் டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்ள தங்கள் பயணத்திற்கான இரயில் முன்பதிவினை உடனடியாக செய்து கொள்ளவும்.

     நமது கோரிக்கை குறித்து பொதுச் செயலர் S S மஹாதேவைய்யா BJP அகில இந்திய தலைவர் அமித்ஷா அவர்களை 21.02.2018 அன்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் சந்தித்து பிரச்னையின் தீவிரத்தை எடுத்துரைத்து கோரிக்கை மனு அளித்துள்ளார்கள். BJP தலைவர் அவர்கள் நமது கோரிக்கையை உடனடி கவனிப்பதாக உறுதிமொழி அளித்துள்ளார்.

   பயண ஏற்பாடு செய்துள்ள தோழர்கள் பொறுப்பு செயலர் தோழர் M பாஸ்கரன் அவர்களிடமோ அகில இந்திய தலைவர் தோழர் M இராஜாங்கம் அவர்களிடமோ தங்கள் பயண விபரங்களை தெரிவித்தால் தலைநகரில் மத்திய சங்கம் ஏற்பாடு செய்துள்ள ரவிதாஸ் மந்திர் குருத்துவாரா இல் இருந்து தமிழக தோழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டி மாநில சங்கம் ஏற்பாடு செய்யும்.



M பாஸ்கரன் 
மாநில செயலர் (பொறுப்பு)





















3 comments:

  1. மத்திய அரசாங்கத்திடம் நம்முடைய மதிப்புதான் என்ன?? வாய்மொழி வாக்குறுதி கொடுத்ததும் போராட்டம் திரும்ப பெற்றது சரியா. இன்னும் சிறிது நாட்கள் வேலைநிறுத்தம் செய்திருந்தால் பரவாயில்லையே. 26 மாதங்கள் ஆன பிறகும் நம் நிலைமை அப்படியே தான் உள்ளது காரணங்கள் கூறப்படுவது

    ReplyDelete
  2. கார்தி எழுதியதற்கு union விளக்கம் என்ன?

    ReplyDelete
  3. கார்தி எழுதியதற்கு union விளக்கம் என்ன?

    ReplyDelete