Tuesday, 28 November 2017

கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையினை உடனடியாக அமுல்படுத்தக் கோரி பாரதிய ஜனதா தேசிய தலைவர் திரு.H. ராஜா அவர்களுடன் சந்திப்பு.

கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கையினை உடனடியாக அமுல்படுத்திடக்கோரி பாரதிய ஜனதா தேசிய தலைவர் திரு.H ராஜா அவர்களை காரைக்குடியில் அவருடைய இல்லத்தில் இன்று காலை (28.11.2017) மாநில சங்க தலைமை ஆலோசகர் தோழர் R ஜான் பிரிட்டோ, தென் மண்டல செயலாளர் தோழர் பாஸ்கரன், காரைக்குடி கோட்ட செயலர் தோழர் M ரவி ஆறுமுகம், தலைவர் தோழர் S சிவகுமார், பொருளாளர் தோழர் S S முருகன், முன்னாள் செயலர் S ஆறுமுகம், முன்னாள் தலைவர் S பூமிநாதன் மூத்த தோழர் K R ஆதிமுத்து ஆகியோர் சந்தித்து மாநில சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு அளித்து GDS ஊழியர் பிரச்சனைகளை தெளிவாக எடுத்துரைத்தனர். சுமார் ஒருமணிநேரம் கடந்த சந்திப்பின் விளைவாக திரு H ராஜா அவர்களும் தான் உடனடியாக நிதி அமைச்சரை சந்தித்து GDS பிரச்சனைகளை விரிவாக எடுத்துரைத்து கமிட்டி அறிக்கையின் அமலாக்கத்திற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். மாநில சங்கம் கமிட்டி அறிக்கையின் அமுலாக்கத்திற்கான தொடர் நடவடிக்கைகளை விரைவு படுத்தி உள்ளது.

A இஸ்மாயில் 
மாநில செயலர்.






Monday, 27 November 2017

மிலாடி நபி விடுமுறை நாள் மாற்றப்பட்டுள்ளது.

கோவில்பட்டி கிளை மாநாடு

கோவில்பட்டி கிளை மாநாடு கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் வைத்து 26.11.2017 அன்று நடைபெற்றது. மாநில தலைமை ஆலோசகர் தோழர் R ஜான் பிரிட்டோ, மாநில செயலர் தோழர் A இஸ்மாயில், மண்டல செயலர் தோழர் பாஸ்கரன், விருதுநகர் கோட்ட செயலர் தோழர் அசோக்குமார், தலைவர் தோழர் ராமசுவாமி, ராமநாதபுரம் கோட்ட தலைவர் தோழர் சேகர், கோவில்பட்டி கோட்ட செயலர் தோழர் பூராஜா, தலைவர் தோழர் நெல்லையப்பர் முன்னாள் தென் மண்டல செயலர் தோழர் குப்புசாமி, கோவில்பட்டி கோட்ட சங்க ஆலோசகர் தோழர் முருகேசன், சங்கரன் கோவில் கிளைச்செயலாளர் தோழர் M இராஜமனி உட்பட பலர் கலந்து கொண்டனர். கீழ்கண்ட நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். 

தலைவர்                 : தோழர் W ஜெயராஜ்
                                       GDS MD /MC, அய்யனார் ஊத்து

செயலர்                   : தோழர் U பிச்சையா
                                       GDS MD /MC, கிழக்கு பாண்டவர் மங்களம்

பொருளாளர்         : தோழர் S பாண்டுரங்கன்
                                       GDS MD /MC, சூரங்குடி


மாநாட்டு புகைப்படங்கள்









Tuesday, 21 November 2017

சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்படும் செய்திகளை உண்மையென கருத வேண்டாம் மாநில சங்கம் வேண்டுகோள் 

சமூக வலைத்தளங்களான Whatsapp, Facebook மற்றும் youtube ல் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வதற்காக சில தோழர்கள் உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களையும், வதந்திகளையும் (கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கை சம்மந்தமாக) பரப்பி வருகின்றனர்.

கமிட்டி அறிக்கையின் விரைவான அமலாக்கத்திற்கான நடவடிக்கையில் மத்திய சங்கமும், மாநில சங்கமும் முழு முயற்சியுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 07.11.2017 அன்று மாநில செயலர் நிதித்துறை இணையமைச்சரை சந்தித்த பின் 17.11.2017, 20.11.2017 தியதிகளில் நமது அகில இந்திய பொதுச்செயலரும், பொருளாளரும் நிதித்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ளனர். இலாகாவின் உயர் அதிகாரிகளும் நிதித்துறை அனுமதிக்காக உள்ளனர். தவறான பிரச்சாரங்களை தவிர்த்து உண்மை செய்திகளை Rural Postal Employees, aigdsutamilnadu இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளவும். வதந்திகளை நம்ப வேண்டாம்.

A இஸ்மாயில் 
மாநில செயலர் 
நமது மாநில சங்கத்தின் விடாமுயற்ச்சியின் பயனாக கருணை அடிப்படையிலான பணியிடங்களை நிரப்பிட கடந்த 10.11.2017 அன்று அதற்கான குழு கூட்டம் கூட்டப்பட்டு கல்வி தகுதி அடிப்படையில் GDS பணி இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நமது கோரிக்கை குறித்து விரைவாக முடிவெடுத்த CPMG அவர்களுக்கு மாநில சங்கம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

பணி நியமன ஆணை 
CLICK HERE

Monday, 20 November 2017

கோவில்பட்டி கோட்டம் சங்கரன்கோவில் கிளை மாநாடு 

சங்கரன்கோவில் கிளை மாநாடு 19.11.2017 அன்று சங்கரன்கோவில் தலைமை அஞ்சலகத்தில் வைத்து கோட்டத்தலைவர் தோழர் G அனஞ்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலர் A இஸ்மாயில் மாநில சங்க தலைமை ஆலோசகர் R ஜான் பிரிட்டோ, கோட்டச்செயலர் M பூராஜா கோட்ட சங்க ஆலோசகர் M முருகேசன், கிளை சங்க ஆலோசகர் G முருகேசன் கோவில்பட்டி கிளை சங்க செயலாளர் முன்னாள் தென்மண்டல செயலர் K குப்புசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பெரும்பாலான கிளை சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்                          : தோழர் G அனஞ்சி
                                                  GDS BPM, புன்னையாபுரம் 

செயலாளர்                    : தோழர். M இராஜமனி,
                                                 GDS MD/MC, பணவடலிசத்திரம்.

பொருளாளர்                : தோழர். A பண்டாரம் 
                                                 GDS MD, வீரசிகாமணி 






Monday, 13 November 2017

மத்திய மண்டல இருமாதந்திர பே ட்டிக்கான Subjects


          ALL INDIA GRAMIN DAK SEVAKS UNION
           TAMIL NADU CIRCLE
                     B-5 P&T Quarters,Dr.Subarayanagar,Teynampet,Chennai-600 018.
 
Ref: GDS/BMM/CR                                                                                         Date: 13.11.2017

To
Post Master General,
Central Region,
Tiruchirappalli – 620 001.

Respected Sir/Madam

Sub: Subjects for Bimonthly Meeting

The Subjects for the proposed bimonthly meeting are furnished in duplicate in the annexure.
The following office bearers will attend the meeting.

1)      S/S. R. Swaminathan, Circle Treasurer & Regional Secretary, Swamimalai BO, Kumbakonam Division.
2)      S/S.C. Karunanithi, Vice President, Poolampalayam BO, Karur Division.

It is requested that necessary permission and relief arrangements may be granted to them in time enabling them to attend the bimonthly meeting.

Yours Faithfully

  
     A.Ismail
          /Circle Secretary/

Subjects:
1.      Stopping the irregular recovery of huge amount from the GDS officials due to audit objection reg.

Most of the divisions in Central Region (eg) Virudhachalam, Pattukkottai are implemented heavy amount recovery from TRCA of the GDS officials due to the TRCA reductions in lieu of triennial revision which was taken not in a due period and the same was effected retrospectively without proper intimation to the officials. The recovery procedure is irregular. The kind attention of the PMG(C.R) is that the procedure contained in DG(P) Circular No: 2-16/2017-PAP GOI MOC/DOP Est dn/PAP section dated at New Delhi the 13.10.2017 procedure for wrongful/excess payment recovery was not directly implemented to the official concerned but the detail procedure is given for regularize it. Therefore this union request that the recovery forced by the divisional administrations may kindly be stopped forthwith.
2.      Service Discharge benefits(SDBS) not disbursed to the discharged employees from service reg.

The GDS employees are properly subscribed in the SDBS scheme and the Govt contribution also given to the schemes. But the benefit of the scheme was not properly given to the retired employees. Therefore the discharged GDS are highly suffered to receive their actual benefits. After discharge from service of GDS officials none of the employees are not received this benefits. Suitable action may kindly be taken to the authorities to discharge the benefits properly to the retired GDS officials at the earliest.

3.      Prevailing GDS employees welfare issues torture in RPLI Melas, Maturity grant and delay in confirmation.

It is brought to your kind notice that the frequent RPLI melas are conducted by the IP/ASP and divisions. During the time of meetings the alone officials are highly tortured our members to achieve the high targets fixed by the IP/ASPs. Therefore our members are demotivated to do the business without proper interest. The business tactics followed by the officers are highly demotivate the business among the GDS employees. Show cause notice are also issued to the absentees in the Melas. GDS post regularization are badly delayed due to some administration reason such as PVR, Community verification etc. Thus our employees are loosing  this departmental monetary benefits such as PLB, Leave benefits etc..Regarding Maturity Grant and transfer requests are not forwarded in time by the Divisional administration. Therefore inordinate delay caused to receive this monetary benefits such as Maternity Grant. Most of the divisions not properly sent the transfer applications in time. Therefore GDS officials are highly deprived and meet many problem in the family.
Proper guidance may kindly be issued to the Appropriate Authorities to avoid delay to forward such applications.



A. Ismail
       Circle Secretary


Saturday, 11 November 2017

மாநில சங்க போராட்ட அறிவிப்பின்படி தமிழகத்தின் பல்வேறு கோட்டங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்.



















Tuesday, 7 November 2017


கமலேஷ் சந்திரா கமிட்டியின் அறிக்கையை உடனடியாக அமல்படுத்தக் கோரி, மத்திய நிதித் துறை இணையமைச்சர் திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை இன்று மாலை அவரது அலுவலகத்தில் வைத்து மாநிலச் செயலாளர் திரு.இஸ்மாயில் ' குமரி மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் திரு.சுபாஷ், திரு.இசக்கியப்பன், செயற்குழு உறுப்பினர் திரு.கண்ணன், ஆலோசகர் திரு. வைத்தீஸ்வரன் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினோம்.

அறிக்கை சம்மந்தமான கோப்புகள் தற்போது, நிதி அமைச்சகத்தின் செலவுகள் பிரிவில் இருப்பதால் அதை உடனடியாக, அனைத்து நடவடிக்கைகளையும் முடித்து அமலாக்க  கோரி கோரிக்கை மனுவினை அளிததோம்.

விரைவில் ஆவன செய்வதாக உறுதியளித்தார். பின்னர்,  கோப்புகளை தனது டெல்லி அலுவலக தனி உதவியாளரிடம் கொடுத்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தினார்.




கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு 

கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமுல் படுத்துவது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட தலைமையிடங்களில் 10.11.2017 அன்று மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்திட மாநில சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. நிதி அமைச்சகத்துக்கு அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ள அறிக்கையின் நகல் உடனடியாக ஒப்புதலுடன் இலாகாவுக்கு அனுப்பப்பட வேண்டும். நமது ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலமே கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். எனவே கோட்ட  கிளை செயலர்கள் விரைந்து செயல்பட்டு மாலை நேர போராட்டத்தை 100 சதவீதம் வெற்றி பெற செய்திட வேண்டும் என மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.



A இஸ்மாயில் 
                          மாநில செயலர்.