Wednesday 13 July 2016

GDS ஊழியரின் மனக்குமுறல்

 மத்திய அரசு ஊழியரின் மஹா சம்மேளன தலைவர்களுக்கும், பணி ஓய்வுக்கு பின்னும் பதவி வெறியால் தொழிற்சங்கங்களை உடைத்து சுகம் அனுபவிக்கும் NFPE அதிமேதாவி தலைவர்களுக்கும் ஏழாவது ஊதியக்குழுவின் அமலாக்கத்தை எதிர்த்து 11.07.2016 முதல் அறிவிக்கப்பட்ட காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது பற்றி பாமர GDS ஊழியரின் மனதில் ஏற்பட்டுள்ள கேள்விக்கு  உங்களிடம் விடையை எதிர்பார்க்க முடியாது. உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என வெற்றுக் கோஷமிட்டு உள்ளூர் தொழிலாளர்களை பிரித்தாளும் அறிவு ஜீவிகளும், அதிமேதாவிகளும் தொழிலாளர் நலனில் உங்கள் மனசாட்சிக்கு பதில் அளித்து, GDS தோழர்களின் ஒற்றுமையை குலைக்கும் முயற்சியை இனிமேலும் தொடர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறோம்.

வெற்று நிகழ்வுகளை பக்கம் பக்கமாக அறிக்கை விடும் தலைவர்களே.

(EMPOWERED) அதிகாரமளித்த கமிட்டி பரிந்துரைத்தது, என்ன நிராகரித்தது என்ன உண்மையை விவரித்து அறிக்கை வெளியிடாதது ஏன்? 

ஏழாவது ஊதியக்குழு கொடுத்த பரிந்துரையை அமுல் படுத்துவதற்கு முன்பே அரசே முன்வந்து Empowered( அதிகாரமளிக்கும்) கமிட்டி அமைத்திட வேண்டிய நிலையை உருவாக்கியது யார்? ஊழியர் தரப்பு பிரதிநிதிகளே இல்லாத அரசுடனான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டதே யாரை ஏமாத்த இந்த நாடகம். ஓய்வு பெற்றோர் நடத்தியதாக சொல்லப்படும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும் நான்கு மாதத்திற்குள் நல்ல முடிவு எட்டப்படும் என சொல்கிறீர்களே இது அரசின் மீது ஏற்பட்ட நம்பிக்கையா? அல்லது போராட்ட உணர்வினை மழுங்கடிக்கும் இறுதி முயற்சியா? அல்லது பணியில் இருக்கும் ஊழியர்களின் போராட்ட உணர்வில் ஏற்பட்டுள்ள சந்தேகமா?

Empowered கமிட்டி யின் அறிக்கை பற்றி இதுவரை வாய் மூடி மௌனியாக இருக்கும் தலைவர்களின் மௌனம் இனியாவது கலையும் என எதிர்பார்க்கிறோம். 30.06.2016 இல் நடந்த பேச்சுவார்த்தை முறிவடைந்த நிலையில் 06.07.2016 இல் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த அடிப்படையில் அரசின் மீது நம்பிக்கை பிறந்தது? வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படும் சூழல் ஏற்பட்டது எப்படி?

06.07.2016 அன்று நிச்சயமாக போராட்ட அறிவிப்பு விளக்கி கொள்ளப்படும் எனும் ரகசிய செய்தியை கசியவிட்ட மர்மம் என்ன?

GDS போராட்டத்தின் போது பொதுச்செயலர் தோழர் S S மஹாதேவய்யா அவர்கள் இலாகாவுடன் போட்ட எழுத்து பூர்வமான ஒப்பந்தத்தை விமர்சித்த மேதாவி தலைவர்களுக்கு தற்போது எழுத்து பூர்வமான ஒப்பந்தம் கிடையாது. மீடியாக்களில் பார்த்துக்கொள்ளுங்கள் என்றவுடன் இரத்தம் கொதித்திருக்க வேண்டாமா? அங்கேயே இன்குலாப் முழங்கியிருக்க வேண்டாமா?

இழந்தது போராட்டம் எனும் பயணம் மட்டுமல்ல, போராட்ட பாதையும் தான் என்பதை இனியும் சொல்ல தேவையில்லை. பழிபோட பாலு இல்லை என்ற பயம் இல்லாமல் இருக்கலாம். பாலுவால் பட்டை தீட்டப்பட்ட கூட்டம் இருக்கிறது என்ற எச்சரிக்கையை மனதில் கொண்டு, GDS ஊழியர் நலன் பேணிட போராட்ட குணம் மிக்க உணர்வுள்ள தோழர் SS மஹாதேவய்யா தலைமை உள்ளது. போராட்டத்தை சிதைக்கின்ற அல்லது விமர்சிக்கின்ற எந்த நோக்கமும் GDS தலைமைக்கோ GDS ஊழியருக்கோ கிடையாது. இலாகா ஊழியரின் போராட்ட அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து தோழர் SS மஹாதேவய்யா சம்மேளன தலைமைக்கு ஒரே ஒரு கோரிக்கையான GDS ஊழியர் இலாகா ஊழியராக்கப்படுவது வரை போராட்டம் விளக்கி கொள்ளப்பட கூடாது என்று உறுதிமொழி அளித்தால் GDS ஊழியர் அனைவரும் இலாகா ஊழியருடன் இணைந்து போராட தயார் என்ற அறிவிப்பினை எழுத்து மூலம் மத்திய அரசு மஹா ஊழியர்  சம்மேளனத்துக்கும், NFPE, FNPO சங்கங்களுக்கும் அளித்த பின்னும் சரியான போராட்ட பாதையை வகுக்காத சம்மேளனங்களின் போக்கினையும் அரசியல் சார்ந்த தொழிற்சங்க தலைவர்களின் சுய நலத்தையும் உணர்ந்து கொள்ளும் தருணம் வந்துவிட்டது. 1954 முதல் 2007 வரை NFPE இயக்கத்திற்கு GDS தோழர்கள்  செய்த தியாகமும் அதன்மூலம் இலாகா ஊழியர்கள் அடைந்த பலன்களையும் இளைய தலைமுறைக்கு தெரியவைப்பதுடன் GDS தலைமை அறிவிக்கின்ற போராட்டத்தின் மூலம்தான் அஞ்சல் ஊழியரின் வாழ்வில் விடியல் ஏற்படும் என்பதையும் இங்கு பதிவு செய்கிறோம்.

                                                                                                      தோழமையுடன் 
                                                                                                        A இஸ்மாயில் 
                                                                                                       மாநில செயலர் 

No comments:

Post a Comment