M.Baskaran, Circle Seretary,B5,P&T Quarters,Dr.Subarayanagar,Teynampet, Chennai-600018
Friday, 29 July 2016
Thursday, 28 July 2016
Monday, 25 July 2016
WESTERN REGION BI-MONTHLY MEETING
மேற்கு மண்டல Bi-Monthly meeting 20.07.2016 அன்று மதியம் 1.00 மணி அளவில் கோவை மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில செயலர் A இஸ்மாயில், மண்டல செயலர் C பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊழியர் நலன் பற்றிய பிரச்சனைகள் விரிவாக விவாதிக்கப்பட்டது. கோவை மண்டலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள PMG திருமதி. சாரதா சம்பத் அவர்களிடம் மேற்கு மண்டலத்தில் தீர்க்கப்படாமல் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கான நேரம் ஒதுக்குமாறு கேட்டதன் அடிப்படையில் மதியம் 2.30 மணி அளவில் Informal Meeting மண்டல PMG அவர்களுடன் நடைபெற்றது. மாநில செயலர், மண்டல செயலர், கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, திருப்பூர் கோட்ட செயலர்கள் கலந்து கொண்டனர்.
GDS ஊழியர் நலன் சார்ந்த தேங்கி கிடந்த பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவாக விளக்கமாக PMG அவர்களுடன் விவாதிக்கப்பட்டது. PMG திருமதி சாரதா சம்பத் அவர்கள் GDS ஊழியர் நலன் சார்ந்த பிரச்சனைகள் உடனடியாக சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி அளித்துள்ளார்கள். 2 வருடங்களுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருந்த 78 GDS ஊழியர்களின் Meternity Leave க்கான ஊதியம் உடனடியாக வழங்கிடவும் . 17 GDS தோழர்களுக்கான மருத்துவ உதவித்தொகை உடனடியாக வழங்கிடவும் ஆணை வழங்கப்பட்டது. பிரச்சனைகளில் தேக்கம் ஏற்பட்டால் தன்னை நேரடியாக சங்க நிர்வாகிகள் எப்போதும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். மிகவும் இணக்கமான சூழலில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் சங்க நிர்வாகிகளின் கருத்துக்களுக்கு செவி மடுத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த மேற்கு மண்டல PMG அவர்களுக்கு மாநில சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
மயிலாடுதுறை கோட்ட சங்க 9வது கோட்ட மாநாடு
மயிலாடுதுறை கோட்ட சங்க 9வது கோட்ட மாநாடு 17.07.2016 அன்று மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் வைத்து சீர்காழி கிளைச்சங்க தலைவர் தோழர் P பவுல் ரத்தினம் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சங்க கொடியினை மாநில செயலர் தோழர்.A இஸ்மாயில் அவர்கள் ஏற்றி வைத்தார்.
ஈராண்டரிக்கை, வரவு செலவு கணக்குகள் உறுப்பினர்களின் கரவொலியுடன் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்: U ஜலாலுதீன், GDS BPM Sirupuliyur BO
செயலர்: A கலையரசன் GDS MD, Pillur BO
பொருளாளர்: A கலையரசன், GDS MD, Tirunantiyoor BO
வாழ்த்தரங்கத்தில் முன்னாள் மாநில செயலர் தோழர் R ஜான் பிரிட்டோ, முன்னாள் மண்டல செயலர் தோழர். R ஜெகநாதன், மாநில பொருளாளர். R சுவாமிநாதன், குடந்தை கோட்ட தலைவர் S கிருஷ்ணமூர்த்தி, மன்னார்குடி கிளைச்செயலர் M உதய குமார் P4 சங்க தோழர் K வேல்முருகன், P3 சங்க முன்னாள் செயலர் தோழர் ஊமைத்துரை மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்தோ ழர் P ஜெயக்குமார் அவர்களின் நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது.
Wednesday, 13 July 2016
GDS ஊழியரின் மனக்குமுறல்
மத்திய அரசு ஊழியரின் மஹா சம்மேளன தலைவர்களுக்கும், பணி ஓய்வுக்கு பின்னும் பதவி வெறியால் தொழிற்சங்கங்களை உடைத்து சுகம் அனுபவிக்கும் NFPE அதிமேதாவி தலைவர்களுக்கும் ஏழாவது ஊதியக்குழுவின் அமலாக்கத்தை எதிர்த்து 11.07.2016 முதல் அறிவிக்கப்பட்ட காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது பற்றி பாமர GDS ஊழியரின் மனதில் ஏற்பட்டுள்ள கேள்விக்கு உங்களிடம் விடையை எதிர்பார்க்க முடியாது. உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என வெற்றுக் கோஷமிட்டு உள்ளூர் தொழிலாளர்களை பிரித்தாளும் அறிவு ஜீவிகளும், அதிமேதாவிகளும் தொழிலாளர் நலனில் உங்கள் மனசாட்சிக்கு பதில் அளித்து, GDS தோழர்களின் ஒற்றுமையை குலைக்கும் முயற்சியை இனிமேலும் தொடர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறோம்.
வெற்று நிகழ்வுகளை பக்கம் பக்கமாக அறிக்கை விடும் தலைவர்களே.
(EMPOWERED) அதிகாரமளித்த கமிட்டி பரிந்துரைத்தது, என்ன நிராகரித்தது என்ன உண்மையை விவரித்து அறிக்கை வெளியிடாதது ஏன்?
ஏழாவது ஊதியக்குழு கொடுத்த பரிந்துரையை அமுல் படுத்துவதற்கு முன்பே அரசே முன்வந்து Empowered( அதிகாரமளிக்கும்) கமிட்டி அமைத்திட வேண்டிய நிலையை உருவாக்கியது யார்? ஊழியர் தரப்பு பிரதிநிதிகளே இல்லாத அரசுடனான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டதே யாரை ஏமாத்த இந்த நாடகம். ஓய்வு பெற்றோர் நடத்தியதாக சொல்லப்படும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும் நான்கு மாதத்திற்குள் நல்ல முடிவு எட்டப்படும் என சொல்கிறீர்களே இது அரசின் மீது ஏற்பட்ட நம்பிக்கையா? அல்லது போராட்ட உணர்வினை மழுங்கடிக்கும் இறுதி முயற்சியா? அல்லது பணியில் இருக்கும் ஊழியர்களின் போராட்ட உணர்வில் ஏற்பட்டுள்ள சந்தேகமா?
Empowered கமிட்டி யின் அறிக்கை பற்றி இதுவரை வாய் மூடி மௌனியாக இருக்கும் தலைவர்களின் மௌனம் இனியாவது கலையும் என எதிர்பார்க்கிறோம். 30.06.2016 இல் நடந்த பேச்சுவார்த்தை முறிவடைந்த நிலையில் 06.07.2016 இல் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த அடிப்படையில் அரசின் மீது நம்பிக்கை பிறந்தது? வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படும் சூழல் ஏற்பட்டது எப்படி?
06.07.2016 அன்று நிச்சயமாக போராட்ட அறிவிப்பு விளக்கி கொள்ளப்படும் எனும் ரகசிய செய்தியை கசியவிட்ட மர்மம் என்ன?
GDS போராட்டத்தின் போது பொதுச்செயலர் தோழர் S S மஹாதேவய்யா அவர்கள் இலாகாவுடன் போட்ட எழுத்து பூர்வமான ஒப்பந்தத்தை விமர்சித்த மேதாவி தலைவர்களுக்கு தற்போது எழுத்து பூர்வமான ஒப்பந்தம் கிடையாது. மீடியாக்களில் பார்த்துக்கொள்ளுங்கள் என்றவுடன் இரத்தம் கொதித்திருக்க வேண்டாமா? அங்கேயே இன்குலாப் முழங்கியிருக்க வேண்டாமா?
இழந்தது போராட்டம் எனும் பயணம் மட்டுமல்ல, போராட்ட பாதையும் தான் என்பதை இனியும் சொல்ல தேவையில்லை. பழிபோட பாலு இல்லை என்ற பயம் இல்லாமல் இருக்கலாம். பாலுவால் பட்டை தீட்டப்பட்ட கூட்டம் இருக்கிறது என்ற எச்சரிக்கையை மனதில் கொண்டு, GDS ஊழியர் நலன் பேணிட போராட்ட குணம் மிக்க உணர்வுள்ள தோழர் SS மஹாதேவய்யா தலைமை உள்ளது. போராட்டத்தை சிதைக்கின்ற அல்லது விமர்சிக்கின்ற எந்த நோக்கமும் GDS தலைமைக்கோ GDS ஊழியருக்கோ கிடையாது. இலாகா ஊழியரின் போராட்ட அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து தோழர் SS மஹாதேவய்யா சம்மேளன தலைமைக்கு ஒரே ஒரு கோரிக்கையான GDS ஊழியர் இலாகா ஊழியராக்கப்படுவது வரை போராட்டம் விளக்கி கொள்ளப்பட கூடாது என்று உறுதிமொழி அளித்தால் GDS ஊழியர் அனைவரும் இலாகா ஊழியருடன் இணைந்து போராட தயார் என்ற அறிவிப்பினை எழுத்து மூலம் மத்திய அரசு மஹா ஊழியர் சம்மேளனத்துக்கும், NFPE, FNPO சங்கங்களுக்கும் அளித்த பின்னும் சரியான போராட்ட பாதையை வகுக்காத சம்மேளனங்களின் போக்கினையும் அரசியல் சார்ந்த தொழிற்சங்க தலைவர்களின் சுய நலத்தையும் உணர்ந்து கொள்ளும் தருணம் வந்துவிட்டது. 1954 முதல் 2007 வரை NFPE இயக்கத்திற்கு GDS தோழர்கள் செய்த தியாகமும் அதன்மூலம் இலாகா ஊழியர்கள் அடைந்த பலன்களையும் இளைய தலைமுறைக்கு தெரியவைப்பதுடன் GDS தலைமை அறிவிக்கின்ற போராட்டத்தின் மூலம்தான் அஞ்சல் ஊழியரின் வாழ்வில் விடியல் ஏற்படும் என்பதையும் இங்கு பதிவு செய்கிறோம்.
தோழமையுடன்
A இஸ்மாயில்
மாநில செயலர்
Tuesday, 12 July 2016
திருவரங்க கோட்ட மாநாடு
தென் திருப்பதி என தரிசனம் செய்யும் கோயில் நகரமாம் குணசீலத்தில் திருவரங்க கோட்ட 9வது கோட்ட மாநாடு 10.07.2016 அன்று சங்கர் திருமண மண்டபத்தில் வைத்து கோட்டத்தலைவர் V வீரமலை அவர்கள் தலைமயில் நடைபெற்றது.
ஈராண்டறிக்கை வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டு 2016-2018 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில் மாநில செயலர் A இஸ்மாயில் தலைமை ஆலோசகர் R ஜான் பிரிட்டோ, மண்டல செயலர் R ஸ்வாமிநாதன் விருத்தாச்சலம் கோட்ட செயலர் M ராமகிருஷ்ணன் தஞ்சை தோழர் குமரகுரு உட்பட பெருவாரியான தோழர் தோழியர் கலந்து கொண்டனர்.
நிர்வாகிகள் :
தலைவர் தோழர்: M ரவீந்திரன்
GDS BPM, புக்கத்துறை BO
a/w சிறுகாம்பூர் SO 621213
செயலாளர் தோழர்: V வீரமலை
GDS MD தொட்டியம் SO 621215
பொருளாளர் தோழர்: J சுரேஷ்குமார்
GDS PKR பாலசமுத்திரம் SO 621203
ஈராண்டறிக்கை வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டு 2016-2018 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில் மாநில செயலர் A இஸ்மாயில் தலைமை ஆலோசகர் R ஜான் பிரிட்டோ, மண்டல செயலர் R ஸ்வாமிநாதன் விருத்தாச்சலம் கோட்ட செயலர் M ராமகிருஷ்ணன் தஞ்சை தோழர் குமரகுரு உட்பட பெருவாரியான தோழர் தோழியர் கலந்து கொண்டனர்.
நிர்வாகிகள் :
தலைவர் தோழர்: M ரவீந்திரன்
GDS BPM, புக்கத்துறை BO
a/w சிறுகாம்பூர் SO 621213
செயலாளர் தோழர்: V வீரமலை
GDS MD தொட்டியம் SO 621215
பொருளாளர் தோழர்: J சுரேஷ்குமார்
GDS PKR பாலசமுத்திரம் SO 621203
Wednesday, 6 July 2016
இல்லாத ஊருக்கு வழிகாட்டுவதை நம்பி ஏமாற வேண்டாம்
அன்பார்ந்த தோழர்களே ஏழாவது ஊதியக்குழுவின் முரண்பாடுகள் களையப்படாமல் நீதிபதி மாத்தூர் தலைமையிலான கமிட்டியின் அறிக்கையினை அமுல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து மத்திய அரசு மகா ஊழியர் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ள 11-07-2016 முதல் நடைபெறவுள்ள வேலைநிறுத்தம் மத்தியஅரசு ஊழியர் மட்டுமே பங்கேற்கும் வேலைநிறுத்தம் ஆகும் . GDS ஊழியருக்கான KAMELASH CHANDRA கமிட்டி அறிக்கை அரசிடம் தாக்கல் செய்ய நவம்பர் மாதம் வரை கால அவகாசம் உள்ளது . அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபின் அரசு எடுக்கும் நடவடிக்கையால் GDS ஊழியரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் AIGDSU மத்திய சங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஏற்ப தமிழ் மாநில சங்கம் போராட்ட வியூகங்களை வகுத்து நடவடிக்கை எடுக்கும். இலாகா அங்கீகாரம் பெற்ற ஒரே ஊழியர் சங்கமான AIGDSU சங்கம் இலாகா ஊழியர்கள் அறிவித்துள்ள போராட்டத்தில் பங்கேற்பதாக சில தவறான வதந்திகள் பரப்பப்பட்டு ஊழியரிடையே குழப்பத்தை ஏற்படுத்த சில சக்திகள் தவறான தகவல்களை இணையதளத்தில் பதிவு செய்துள்ளது . 11-07-2016 இல் நடைபெறவிருக்கும் வேலைநிறுத்த போராட்டம் மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் நடத்தும் போராட்டம் . AIGDSU சங்கம் எவ்வித போராட்ட அறிவிப்பும் வெளியிடவில்லை எவ்வித போராட்ட அறிவிப்பையும் இலாகாவுக்கும் வழங்கவில்லை. எனவே GDS தோழர்கள் யாரும் இல்லாத ஊருக்கு வழிகாட்டும் ஏமாற்றுக்காரர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தமிழ் மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. A.ISMAIL மாநில செயலர்.
Subscribe to:
Posts (Atom)