Thursday, 3 January 2019

*GDSஊழியர்களுக்கு அவசரகால விடுப்பு(EMERGENCY LEAVE) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அவசரகால விடுப்பு 01.01.2019 முதல் அமலுக்கு வருகிறது.*

*1.அவசரகால விடுப்பினை ஒரு காலண்டர் ஆண்டில் 5 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.*

 *2.ஒரே நேரத்தில் அதிகபட்சமாக இரண்டு நாட்கள் மட்டுமே அவசரகால விடுப்பு எடுத்துக்கொள்ள முடியும்.*

*3. அவசரகால   விடுப்புகளுக்கு பதிலிகள் (SUBSITUTE ) நியமிக்கப்படக் கூடாது. இரண்டு GDS ஊழியர்கள்(BPM- ABPM ) உள்ள அலுவலகங்களில் ஒருவர் விடுப்பு எடுத்தால் மற்றவருக்கு COMBINED DUTY போட வேண்டும். தனிநபர் அலுவலகம் எனில் பதிலி நியமிக்கலாம்.*

 *4. இதனை அடுத்த ஆண்டு அவசர விடுப்பு கணக்கில் சேர்க்கவோ(Carry Forward ) அல்லது பணமாக்கி(Encashment) கொள்ளவோ முடியாது.*

 *5. அவசரகால  விடுப்பினை எடுப்பதற்கு BPM ஊழியர்கள் கோட்ட அலுவலகத்தின்(DO) அனுமதியையும் BPMதவிர்த்த மற்ற GDSஊழியர்கள் உட்கோட்ட அதிகாரி/முதுநிலை அஞ்சல் அதிகாரி/அஞ்சல் அதிகாரி  அனுமதியையும் பெற வேண்டும்.*

*6.ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் அவசர விடுப்பின் முன்பு அல்லது  பின்பு இருப்பின் அவைகள் அவசரகால விடுப்பிலிருந்து கழிக்கப்படாது.*

 *7.இரண்டு நாட்களுக்கு மேல் அவசர விடுப்பு எடுக்கும் பட்சத்தில் அவர் விடுப்பு  எடுத்த நாட்கள் அவருடைய Paid leaveலிருந்து கழிக்கப்படும். Paid Leave இல்லாத பட்சத்தில் Unauthorised Absent ஆக கருதப்பட்டு அவருக்கு TRCA வழங்கப்படாது.*

*8.அவசர கால விடுப்பு எடுக்க அனுமதி இல்லை.*

*9.PUT-OFF DUTY  உள்ள GDS ஊழியர்களுக்கு இந்த விடுப்பு வழங்கப்படாது.*

*10. அவசரகால  விடுப்பு அளிக்கும் அதிகாரிகள் அவசரகால விடுப்புகள் குறித்த தனிப்பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.*




No comments:

Post a Comment