Thursday 19 October 2017

தோழர் பாலுவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் 20.10.2017!


தோழர்  பாலுவின் இரண்டாம்  ஆண்டு நினைவு  நாள்  20.10.2017!
---------------------------------
அஞ்சல் ஊழியர்களின் முன்னாள் தமிழ் மாநில செயலாளர் தோழர்  பாலு என அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் பாலசுப்ரமணியன் மறைந்த அந்த துயர்மிக்கநாள்கடந்து ஆண்டுகள் இரண்டு ஆகி விட்டன! 

மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை இல்லை. மரணங்கள் இல்லாத  உயிரினங்கள் இல்லை. மனிதர்களின் மரணங்கள் ஏற்படுத்தும் வெற்றிடங்களை  புதிய பிறப்புகள் சமன் செய்கின்றன. ஆனாலும் சிலரது மரணங்களால் ஏற்படும் வெற்றிடங்கள் சமன் படுத்தப்பட முடிவதில்லை. தோழர் பாலுவின் மறைவும் அப்படிப்பட்ட ஒன்றே. அஞ்சல் ஊழியர்களின்  இயக்கத்தில் தோழர் பாலு உருவாக்கிச்சென்ற வெற்றிடம் நிரப்பப்பட முடியாதது என்பதை காலம் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

தோழர் பாலு அஞ்சல் ஊழியர் இயக்கத்தில் போராட்ட பரிமாணத்தை செழுமை படுத்தியவர். அவரது 19 ஆண்டு கால மாநில செயலாளர் பணிக் காலத்தில் அஞ்சல் மூன்றின் சங்கம் போர்க்குணமிக்க இயக்கமாக பரிணமித்ததை அவரது விரோதிகள் கூட மறுத்ததில்லை .அஞ்சல் துறையின் அதிகார வர்க்கம் தனது வானளாவிய அதிகாரங்களை பரிட்சித்துபார்க்க அவர் அனுமதித்ததில்லை. அப்படி யாராவது சில அதிகாரிகள் முயற்சியில் ஈடுபட்டால் தோழர் பாலு தலைமையில் எழுச்சிபெறும்  தமிழக அஞ்சல் ஊழியர்களின்  தீரமிக்க தொடர் போராட்டங்கள் அவர்களுக்கு புதிய நிர்வாக பாடத்தை கற்றுத்தரும். அப்படி கற்றுக்கொண்ட அதிகாரிகள் ஏராளம்.

 தனது திறமைகளால் பிற அமைப்புகளை தனக்கு ஆதரவாக்கி தோழர் பாலுவை தனிமைப்படுத்துவதில் வெற்றிகொண்ட உயரதிகாரிகளும் , தனியொரு அமைப்பாக நின்று  போராடிய தோழர் பாலுவின் துணிவான போட்டத்தின் முன்  தோற்றப்போன நிகழ்வுகள் அஞ்சல் ஊழியர் இயக்க வறலாற்றின் ஒளிரும் அத்தியாயங்களாக அவரது பெருமையை பேசிக்கொண்டிருக்கின்றன. அவரை வீழ்த்த அதிகார வர்க்கமும் ,எதிரிகளும் மேற்கொண்ட இடைவிடாத தொடர் முயற்சிகள் அவரது கடும் தொழிற்சங்க பணியில் கரைந்துபோயின.

தோழர் பாலுவிடம் நெருங்கி பழகும் வாய்ப்புகள் பெற்றவர்களுக்கு தெரியும் அவரது மனதின் அன்பும் தோழமையும். தன்னை நம்பி நட்புடன் பழகுபவர்களை அவர் முழுமையாக நம்புவார்.  தொழிற்சங்க தோழர்களுக்கு  அவரது இல்லம் ஒரு அன்பாலயம்.   அணைக்கப்படாத சமையல் அடுப்பை அவர் வீட்டில் மட்டுமே பார்க்கமுடியும். 

இந்திய அஞ்சல் ஊழியர் வரலாற்றில் நீங்கள்  மரியாதைக்குரியஇடத்தில்இருக்கிறீர்கள்,என்றைக்கும்இருப்பீர்கள்!
 போர்க்குணத்துடன் செயல்படவிழையும் தோழர்களுக்கு  உங்களின் அழியாதநினைவுகள் ஒரு கலங்கரை விளக்கமாக ஒளிவீசி வழிகாட்டும்!

வீர வணக்கம் தோழர் பாலு!

2 comments:

  1. அஞ்சா நெஞ்சுரம் கொண்ட அண்ணன் பாலு அவர்களை என்றுமே மறக்க முடியாது - க.வெ.ரெங்காச்சாரி, அஞ்சல் அலுவலர் ஓய்வு இருப்பு எமனேஸ்வரம் 623701

    ReplyDelete
  2. தோழர் அஞ்சா நெஞ்சர் பாலு வாழ்க !!!

    ReplyDelete