M.Baskaran, Circle Seretary,B5,P&T Quarters,Dr.Subarayanagar,Teynampet, Chennai-600018
Wednesday, 30 August 2017
Monday, 28 August 2017
கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு
ஏழு நாட்கள் நடைபெற்ற வீரம் செறிந்த வேலை நிறுத்த போராட்டத்தின் தொடர்ச்சியாக நமது AIGDSU சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக வரும் September இறுதிக்குள் கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை இலாகா அமலாக்க உள்ளது. போராட்டத்தை விமர்சிக்கும் போட்டி சங்கங்களின் பொய்யான வதந்திகளை புறந்தள்ளி நமது வெற்றியினை போராடாத தோழர்களுக்கும் சேர்ந்தே பகிர்ந்தளிப்போம்.
சங்க அங்கீகார உறுப்பினர் படிவம் சமர்ப்பித்திட 05.09.2017 இறுதி நாளாகும். எனவே கோட்ட கிளை செயலர்கள் விரைந்து செயல்பட்டு அனைத்து GDS தோழர்களையும் நமது AIGDS சங்கத்தில் உறுப்பினராக்கி தமிழகத்தில் 100% உறுப்பினர் சேர்க்கையை உறுதி செய்திட வேண்டுவதோடு, இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக கோட்ட கண்காணிப்பாளர்களிடம் உறுப்பினர் படிவத்தை சமர்ப்பித்து இலாகாவில் பெரும் உறுப்பினர் படிவத்திக்கான நகலை மாநில சங்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்.
A இஸ்மாயில்
மாநில செயலர்.
பாபநாசம் கிளை மாநாடு
தஞ்சாவூர் கோட்டம் பாபநாசம் கிளை மாநாடு 27.08.2017 அன்று நடைபெற்றது. மாநில பொருளாளர் தோழர் சுவாமிநாதன், கோட்ட செயலர் தோழர் ஜெபாஸ்டியான் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநில சங்கம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது.
Wednesday, 23 August 2017
கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு
ஏழு நாட்கள் வெற்றிகரமாக நடத்திய போராட்டத்தின் மூலம் அரசு நமது கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுத்துள்ளது. போராட்ட பலன்கள் அகில இந்திய சங்க அறிக்கை கிடைத்தபின் வெளியிடப்படும். தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான யூகங்களும் தவறான செய்திகளும் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. நமது சங்கம் எப்போதும் உண்மையான செய்திகளை ஆதாரத்துடன் தான் வெளியிடும். எனவே தவறாக பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனும் செய்தியினை அனைத்து தோழர்களுக்கும் தெரியப்படுத்தவும். மாநில, அகில இந்திய சங்க அதிகாரபூர்வமான இணைய தளங்களில் வரும் செய்தியை மட்டும் சுற்றரிக்கையாக வெளியிட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
A இஸ்மாயில்
மாநில செயலர்
Tuesday, 22 August 2017
FLASH NEWS
இன்றைய தினம் (22.08.2017) மாலை 6 மணி அளவில் இலாகா முதல்வருடன் (DG) நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையிலும் தொடர்ந்தது இலாகா அமைச்சர் அலுவலகத்தில் நடந்த பேசிச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது. எனவே நாளைய தினம் (23.08.2017) அனைத்து தோழர்களும் தோழியரும் அவரவர் பணியிடங்களில் பணியில் சேர்ந்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
A இஸ்மாயில்
மாநில செயலர்
ஏழாம் நாள் போராட்டம்
நமது காலவரையற்ற போராட்டம் பேசிச்சுவார்த்தையின் மூலமாக நல்ல முடிவை எட்டும் என எதிர்பார்த்த வேலையில் அரசின் அடக்குமுறை ஆரம்பம் ஆகி விட்டது. போராட்டத்தை நிபந்தனையின்றி விளக்கிக்கொண்டால்தான் பேசிச்சுவார்த்தை என இலாகா தரப்பில் அறிவித்ததோடு மட்டுமில்லாமல் போராடும் GDS ஊழியர்களுக்கு FR 17 நோட்டிஸ் வழங்க உத்தரவு இலாகாவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடக்கு முறைக்கு அடிபணியாமல் நமது தோழர்கள் போராட்ட வீச்சத்தினை அதிகப்படுத்தி, இலாகா அனுப்பும் நோட்டிஸை நம்முடைய தோழர்கள் யாரும் வாங்கிட வேண்டாம். முறைப்படியாக இலாகாவுக்கு வேலை நிறுத்த நோட்டிஸ் அகில இந்திய சங்கத்தால் வழங்கப்பட்டு கால அவகாசம் வழங்கித்தான் நாம் போராட்டத்தை ஆரம்பித்தோம் போராட்டத்தின் பலம் நாளுக்கு நாள் அதிகரிப்பதை தாங்க முடியாத இலாகா அடக்கு முறைகள் மூலம் நமது போராட்டத்தை அடக்க நினைக்கிறது. தொழிலாளரின் கோரிக்கைகளை தீர்க்க முன்வராத இலாகாவின் நடவடிக்கைகளை எந்த விதத்திலும் எதிர்கொள்ள நமது தோழர்களை முனைப்புடன் வழிநடத்தி போராட்டத்தை வெற்றியடைய செய்திட கோட்ட கிளை நிர்வாகிகளை மாநில சங்கம் வேண்டுகிறது.
A இஸ்மாயில்
மாநில செயலர்
Monday, 21 August 2017
தொடரட்டும் வேலை நிறுத்த போராட்டம்
நமது காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் இன்று வெற்றிகரமாக ஆறாவது நாளை நிறைவு செய்துள்ளது. GDS ஊழியர்களுடைய வாழ்வாதார பிரச்சனைகளுக்கான இப்போராட்டத்தை அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. இலாகா வேலையில் இலக்கினை அடைந்திட GDS ஊழியர்களை கசக்கிப்பிழியும் அதிகார வர்க்கம் GDS ஊழியர்களின் உரிமைக்கான போராட்டத்தை வலுவிழக்க செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவது வெட்கப்பட வைக்கிறது. போராட்ட வீச்சம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் போராட்ட நடவடிக்கைகளை குலைத்திட வதந்திகளும் பரப்பப்பட்டு வருகிறது. எந்தவிதமான பிரச்சனைகள் வந்தாலும் நெஞ்சுரம் மிக்க GDS தோழர்கள் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதை இலாகா உணரும் காலம் நெருங்கி உள்ளது. நமது கோரிக்கைகளை வெல்வது வரை உறுதியுடன் போராடுவோம். இன்றைய தினம் பேசிச்சுவார்த்தை எதுவும் நடைபெறாததால் நாளையும் நமது போராட்டம் தொடரும். எனவே கோட்ட கிளை நிர்வாகிகள் போராட்ட நடவடிக்கைகளை தொய்வில்லாமல் நடத்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
A இஸ்மாயில்
மாநில செயலர்
Saturday, 19 August 2017
தொடரட்டும் - தொடர் வேலை நிறுத்த போராட்டம்
நமது AIGDSU சங்கத்தின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் வெற்றிகரமான நான்காம் நாளை தாண்டி இன்று ஐந்தாம் நாளாக (20.08.2017) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பொதுச்செயலாளர் S S மஹாதேவய்யா, துணைப்பொதுச்செயலர் B V ராவ், பொருளாளர் லக்விந்தர் பால்சிங் ஆகியோர் இலாகா member(P) திருமிகு உஷா சந்திரசேகர் அவர்களுடன் நடத்திய பேசிச்சுவார்த்தையை தொடர்ந்து இலாகா அமைச்சர் திரு. மனோஜ் சின்கா அவர்களையும் சந்தித்துள்ளார்கள். நம்முடைய நியாயமான கோரிக்கைகளை அழுத்தமாக எடுத்துரைத்துள்ளார்கள். வெற்றி கிட்டும் வரை போராட்டம் என்னும் இலக்குடன் நமது போராட்ட வீச்சத்தினை இன்னும் அதிகப்படுத்தி ஆறாம் நாள் (21.08.2017 திங்கள்) நாம் போராட்டத்தில் 100% நம் தோழர்களை போராட்டக்களத்தில் அணி வகுத்திடுவோம்.
05.09.2017 அன்று உறுப்பினர் படிவம் இலாகாவில் அளித்திட இறுதி நாள் ஆகும். எனவே கோட்ட கிளை நிர்வாகிகள் சங்க அங்கீகார விதிக்கான உறுப்பினர் படிவங்களை விரைவாக கோட்ட கண்காணிப்பாளரிடம் வழங்கி அதற்கான அத்தாட்சி கடிதம் பெற்று அதன் நகலினை மாநில சங்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.
போராட்ட வாழ்த்துக்கள்
A இஸ்மாயில்
மாநில செயலர்
Friday, 18 August 2017
Strike is continued
Strike is continued
Com. S.S. Mahadevaiah, General Secretary, Com. B.V. Rao, Asst. General Secretary, Com. Lakhwinder Pal Singh, Treasurer CHQ met Sri Vijay Sampla, Hon’ble Minister for Social Justice and empowerment today at his residence and submitted the memorandum. The Minister assured us to speak to Finance Minister.
The Indefinite strike is in full swing all over India. More than 70% GDS employees are participating in the strike third day. The strike rate is increasing day by day. Hats off to all GDS comrades and AIGDSU well wishers.
Some of the top officers from D.G. office called for to the office of Communication Minister today.
We donot compromise till our justified demands accepted. We shall also try to meet communication Minister tomorrow. The Secretary Department of posts is on leave due to personal problems. Member (O) Ms. Usha Chandrashekr invited our leaders for talks. Talks will be held at 4-00 P.M.
Subscribe to:
Posts (Atom)