Sunday 28 May 2017

NFPE சம்மேளன பார்வைக்கு

 ஊழியர்களின் உதிரத்தை உறிஞ்சும் இலாகாவின் எதேச்சாதிகாரமான போக்கினை கண்டு கொள்ளாத NFPE தலைமை தற்போது GDS ஊழியர்களின் ஊதியக்குழு அறிக்கையினை அமுல் படுத்திட வேண்டி 27.07.2017 இலாகா மந்திரியின் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்துவதாக தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்களது போராட்ட அறிவிப்பை பெயரளவுக்கு வெளியிட்டுவிட்டு அங்கீகரிக்கப்பட்ட AIGDSU சங்கத்தையும், பொதுச்செயலாளர் தோழர் S S மஹாதேவையாவையும் விமர்சிப்பதிலேயே அதிகம் கவனம் செலுத்தி உள்ளதோடு உறுப்பினர் சரிபார்க்கைக்கு பயந்து அறிவிக்கப்பட்ட போராட்டத்தை விளக்கி கொண்டதாக குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்துள்ளனர்.

   இதுகுறித்து நமக்கு எழுந்துள்ள சந்தேகங்களுக்கு NFPE தலைமை விளக்கம் அளிக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் நமது தோழர்களுக்கு NFPE தலைமையின் கீழ்த்தரமான விமர்சனங்கள் குறித்து விளக்கம் தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளதால் இந்த பதிவினை பதிவு செய்கிறோம்.

1) 01.01.2016 முதல் அமுல்படுத்தப்பட்ட 7வது ஊதியக்குழு பரிந்துரையில் ஏற்பட்ட ஊதிய குளறுபடிகளை, பலன்களை இன்றுவரை இலாகா ஊழியருக்கு பெற்று கொடுக்காதது ஏன்.

2) அளவன்ஸ்கள் வழங்கிட அமைக்கப்பட்ட Empowered கமிட்டியின் கூட்டம் பலமுறை நடந்தும் அலவன்ஸ் பெற்று கொடுத்திட முடியாததை ஊழியர்களிடம் மறைப்பது ஏன்.

3) இலாகா ஊழியரின் பிரச்சனைகள் பல இருந்தும் ஊழியர் நலனில் அக்கறை காட்டாமல் அதிகார வர்க்கத்துக்கு துணைபோகும் மர்மம் என்ன.

4) தங்கள் கனவு திட்டம் என தம்பட்டம் அடித்த பதவி சீரமைப்பில் (Carder Restructure) பாதிக்கப்படும் ஊழியர்களின் நிலையை மாற்றிட எடுத்த நடவடிக்கைதான் என்ன.

5) உறுப்பினர் சரிபார்ப்புக்கு பயந்ததாக கூறும் நீங்கள், இலாகா ஊழியரின் உறுப்பினர் சரிபார்ப்பு படிவம் கொடுத்து ஓராண்டுக்கு மேலாகியும் இலாகா முடிவெடுக்காமல் உள்ளது குறித்து உங்கள் நிலையை உறுப்பினருக்கு ஏன் தெரிவிக்கவில்லை.

6) உறுப்பினர் சரிபார்ப்பு இல்லாமலேயே BPEU சங்கத்திற்கு மாதாந்திர, இருமாத, நான்கு மாத பேட்டி இலாகாவால் வழங்கப் படுகிறதே அதை தடுத்திட ஏன் நடவடிக்கை எடுத்திட வில்லை .

2007 ஆம் ஆண்டுக்கு பின் இன்றுவரை இலாகா ஊழியர் நலனுக்காக ஒரு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்திட முடியவில்லையே, பண மதிப்பிழப்பு அறிவிப்பு அரசு அறிவித்து இராப்பகலாக பணி செய்த இலாகா ஊழியருக்கு பெற்றுக்கொடுத்த பணபலன்களை சொல்ல முடியவில்லையே.

இன்னும் பல்வேறு கேள்விகள் எழுந்தாலும் இலாகா ஊழியர் நலனை பற்றியும், உரிமைகளை பெற்றுக்கொடுப்பது பற்றியும் முடிவெடுத்திடாத NFPE சம்மேளனத்தலைமை, GDS ஊழியர்களின் உரிமைக்காக போராட்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது யாரை ஏமாற்ற என்பதை GDS ஊழியர்கள் நன்கு அறிவார்கள். போராட்ட குணமும் போராடும் தலைமையும் GDS ஊழியர்க்களிடம்தான் உள்ளது என்பதை இனிமேலும் உணராமல் இருந்தால் இழப்பு இலாகா ஊழியருக்குதான் என்பதை இங்கு சுட்டிக்காட்டி, இனிமேலும் அங்கீகரிக்கப்பட்ட AIGDSU சங்கத்தை விமர்சிப்பதை NFPE சம்மேளனம் நிறுத்திக்கொள்ள தமிழ் மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.















1 comment:

  1. தைரியம் இருந்தால் பதிலளிக்கட்டும்

    ReplyDelete