Saturday, 30 April 2016

MAY DAY GREETINGS

உழைக்கும் தொழிலாளர் வர்க்கம் வாழ்வில் விடியல் பெற அனைவருக்கும் தமிழ் மாநில சங்கம் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. 

Thursday, 28 April 2016

Deep Condolence

AIGDSU சங்க முன்னாள் தென் மண்டல செயலர் தோழர்.D.சொக்கலிங்கம் அவர்கள் இன்று(29.04.2016) காலை 6 மணி அளவில் இயற்கை எய்தினார். அவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ் மாநில சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

Thursday, 21 April 2016

சேலம் கிழக்கு கோட்ட 10 வது கோட்ட மாநாடு

சேலம் கிழக்கு கோட்ட 10 வது கோட்ட மாநாடு 20.04.2016 அன்று ஆத்தூர் தலைமை அஞ்சலகத்தில் வைத்து கோட்ட தலைவர் தோழர் C . பழனிமுத்து அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
2016-2018 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தலை மாநில செயலர்         A. இஸ்மாயில் அவர்கள் நடத்தி வைத்தார்கள். 

President : Com.V.Loganathan, GDS MD, Nattamangalam BO a/w. Kondalampatti.

Secretary: Com.C.Balamurugan, GDS BPM, Udayarpalayam BO a/w. Kammampatti

Treasurer: Com.G.Ramesh, GDS MC, Pallipatti a/w. Sukkampatti.

ஆகியோர் போட்டி இன்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் நடைபெற்ற வாழ்தரங்கத்தில் தலைமை ஆலோசகர் தோழர். R. John Britto, முன்னாள் அஞ்சல் மூன்று துணை பொதுச்செயலாளர் தோழர். C.அமிர்தலிங்கம், சங்க சட்ட ஆலோசகர் தோழர் R. வாசுதேவன் மற்றும் P3,P4 கோட்ட தலைவர்கள் மேற்கு மண்டலத்தின் கோட்ட செயலர்கள் உள்பட ஏராளமான தோழர்கள் மாநாட்டில் கலந்து சிறப்பித்தனர்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு கோட்ட சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.



























GDS ஊழியர்களுக்கான பஞ்சப்படி ஆணை வெளியிடப்பட்டுள்ளது

Payment of Dearness Allowance to Gramin Dak Sevaks (GDS) at revised rates w.e.f. 01.01.2016 onwards-reg.


Thursday, 14 April 2016

Birthday Greetings







அரசியல் சட்ட மாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 125 வது பிறந்தநாளை கொண்டாடும் இன்று, ஜாதி மத பேதமின்றி தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்காக ஒற்றுமையுடன் உழைப்போம் என அனைவரும் சபதமேற்போம்.

                                                                                                         A.Ismail
                                                                                                   Circle Secretary
                                                                                                  Tamil Nadu Circle

Short Submission of Memorandum

                                  ஏழாவது ஊதியக்குழு சம்பந்தமான GDS Committee யிடம் பொதுச்செயலாளர் தோழர் S.S. மஹாதேவைய்யா அவர்கள் அளித்துள்ள memorundam த்தில் இடம் பெற்றுள்ள கோரிக்கைகளை சுருக்கமாக தங்களின் பார்வைக்கு விவரிக்கிறோம்.

1) 1977 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றம் P.V. Rajamma வழக்கில் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், ஐந்தாவது ஊதியக்குழுவில் நீதிபதி தால்வார் அவர்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு இலாகா ஊழியர் அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும்.

2) இந்தியா முழுவதிலும் 2013-2014 நிலவரப்படி உள்ள 1,54,882 தபால் அலுவலகங்களில் 1,29,389 கிளை அஞ்சலகங்களில் பணியாற்றும் 2,59,604 கிராமிய அஞ்சல் ஊழியர்கள் இலாகா ஊழியர்கள் செய்யும் அனைத்து பணிகளையும் செய்து வருகிறார்கள். ஆயினும் 1898 ஆம் ஆண்டு Indian Post Office Act படி 5 மணி நேரப்பணிதான் அதிகபட்சமாக கணக்கிடப்படுகிறது. எனவே வேலைப்பளு அடிப்படையில் பணி நேரம் உயர்த்தப்படவேண்டும்.

3) கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கான Conduct and Employment Rules என்பது நடராஜ மூர்த்தி கமிட்டி அறிக்கைக்குப்பின் Conduct and Engagement Rules 2011 என மாற்றப்பட்டு ஒப்பந்த அடிப்படையிலான வேலை எனும் நிலையில் உள்ளது. இது 1977 உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும், தொடர்ந்து அமைக்கப்பட்ட ஊதியக்குழு அறிக்கைகளுக்கும் எதிரானது. எனவே Conduct and Engagement Rules 2011 என்பது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

4) கிளை அஞ்சலகங்களின் வேலை நேரம் குறைந்தபட்சம் ஆறு மணி நேரமாகவும் அதிகபட்சம் 8 மணி நேரமாகவும் உயர்த்தப்பட வேண்டும். Time Related Continuity Allowance(TRCA) முறையில் கிராமிய அஞ்சல் ஊழியர்களின் பணி அனைத்தும் கணக்கிடப்படுவதில்லை. புதிய பணிகள் அனைத்தும் GDS ஊழியர்களுக்கு வழங்கப்பட்டும் ஊதிய நிர்ணய அளவீட்டின் போது பணிகள் அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ள படுவதில்லை. எனவே TRCA முறை மாற்றப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

5) ஊதியம் சம்மந்தமான கோரிக்கை

கிராமிய அஞ்சலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இலாகா ஊழியர்களுக்கு இணையான பணிகளை திருப்திகரமாக செய்து வருகின்றனர். எனவே இலாகா ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற அனைத்து சலுகைகளும் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். GDS BPM தோழர்களுக்கு Postal Assistant சம்பள விகித அடிப்படையிலும், GDS MD தோழர்களுக்கு Post Man சம்பள விகித அடிப்படையிலும்,GDS MC/PKR/Mailman  தோழர்களுக்கு MTS சம்பள விகித அடிப்படையிலும் ஊதியம் வழங்கிட வேண்டும்.

6) விடுப்பு சம்பந்தமாக விடப்பட்ட கோரிக்கைகள்

a. இலாகா ஊழியர்களைப்போல் E.L, 6 மாதத்திற்கு 15 தினங்கள் என கணக்கிட்டு அதனை 300 நாட்கள் வரை சேமித்து வைத்து அதில் உபயோகித்த நாட்களை கழித்து மீதமுள்ள நாட்களுக்கு பணி முதிர்வு அடைந்தபின் அதற்குரிய பண பலன் வழங்கிட வகை செய்ய வேண்டும்.

b. மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிற CL புறநிலை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

c. HPL மத்திய அரசு ஊழியர்களை போல் கணக்கிட்டு 6 மாதத்திற்கு ஒருமுறை 10 தினங்கள் எனவும் அதனை மருத்துவ விடுப்பில் Commute செய்வதற்கும் மீதமுள்ள நாட்களை பணிமுதிர்வின் போது காசாக்கி கொள்வதற்கு அனுமதி அளித்திடவேண்டும்.

d. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல LND மொத்த பணி நாட்களில் 360 தினங்கள் வரை வழங்கிட வேண்டும்.

e. பெண் ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பு 6 மாதத்திற்கு அனுமதிக்க வேண்டியும், 45 தினங்கள் abortion - க்கு வழங்க வேண்டியும், குழந்தைகளை பராமரிப்பதற்க்காக மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப்போல் 2 வருட கால விடுமுறை வேண்டி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

f. இதைப்போல் Paternity Leave மற்றும் Extraordinary Leave, Special Casual Leave ஆகியவை 7-வது ஊதிய குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.

7) பணி முதிர்வில் வழங்கவேண்டிய சலுகைகள்

புறநிலை ஊழியர்கள் தங்களது 65-வது வயதில் பணிநிறைவின் போது வெறும் கையோடு செல்லாமல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் அனைத்து சலுகையும் வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு.
a. நடராஜ மூர்த்தி கமிட்டி பரிந்துரைத்த மாதந்தோறும் ரூபாய் 200/- புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு(NPS ) அரசு சார்பில் செலுத்தப்படுவதை மாற்றி மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

b. புறநிலை ஊழியர்கள் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டாலோ அல்லது நோய்வாய்ப்பட்டு பணியினை தொடர இயலாமலோ இருந்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப்போல சலுகைகள் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

c. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவகுவது போல் Commutation of Pension புறநிலை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.

d. மத்திய அரசு ஊழியர்களைப்போல் 80 வயதிற்கு மேல் முறையான உயர்வு ஓய்வூதியத்தில் வழங்க வேண்டும்.

e. DCRG மத்திய அரசு ஊழியர்களைப்போல் கணக்கிட்டு வழங்க வேண்டும்.

f. CGEIS புறநிலை ஊழியர்களிடம் முறையான பிடித்தம் செய்து 10,00,000 வழங்க வேண்டும்.

g. புறநிலை ஊழியர்களுக்கு கீழ்க்காணும் allowances வழங்க வேண்டும்.
      1)  Dearness Allowance
      2) House Rent Allowance
      3) Family Planning Allowance
      4) Children Education Allowance
      5) Funeral Allowance
      6) Uttrarakhand Allowance
      7) Project Allowance
      8) Cycle Maintenance Allowance
      9) Combined Duty Allowance
     10) Overtime Allowance
     11) Allowance for conveyance of cash
     12) Special Duty Allowance
     13) Split Duty Allowance
     14) Fixed Medical Allowance 
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குகிற இதர Allowances வழங்கப்பட வேண்டும். 

8. ஊழியர் சங்கங்களுக்கான சலுகைகள்

a. இதர சங்கங்களுக்கு வழங்குகிற சலுகைகளைப்போல் கிராமிய அஞ்சல் ஊழியர்  சங்கப்  பிரதிநிதிகளுக்கும் Special Casual Leave வழங்க வேண்டும்.

b. கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க நிர்வாகிகள் விருப்பதிற்கேற்ப Foreign Service வழங்க வேண்டும்.

c. JCM அங்கீகாரம் வழங்க வேண்டும்.

9. புறநிலை ஊழியர்களுக்கான பதவி உயர்வு 

தபால்காரர் மற்றும் MTS பதவிகள் அனைத்தும் புறநிலை ஊழியர்களின் பணி மூப்பு அடிப்படையில் வழங்க வேண்டும், வெளியில் இருந்து ஆள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
         தபால்காரர் மற்றும் MTS - ற்கான நியமன உத்தரவில் முறையான மாற்றம் கொண்டு வர வேண்டும்.
         25% PA/SA பதவிகளுக்கு கிராமிய அஞ்சல் ஊழியர்களில் இருந்து நேரடி நியமனம் செய்ய வேண்டும். அதற்க்கு ஏற்றார் போல் நியமன உத்தரவுகளை மாற்றி அமைக்க வேண்டும்.
         மூன்று Financial Upgradations 10,20,30 வருடங்களுக்கு என கணக்கிட்டு வழங்க வேண்டும்.

10. Welfare and Medical 
      இலாகா ஊழியர்களுக்கு வழங்குகிற அனைத்து சலுகைகளும் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கும் எந்த வித Contribution இல்லாமல் வழங்க வேண்டும்.
       மருத்துவ சலுகைகள் மற்றும் CGHS சலுகைகள் அனைத்தும் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
       இலாகா ஊழியர்களுக்கு வழங்குவதைபோல் HBA வழங்க வேண்டும்.
       இலாகா ஊழியர்களுக்கு வழங்குவதைப்போல் LTC வழங்க வேண்டும்.
  கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கான Training Period -ல் ஊதியம் வழங்க வேண்டும்.
  கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கான அலுவலகத்தில் ஊழியர்களுக்கு கீழ்க்காணும் வசதிகள் செய்து தர வேண்டும்.

1. Proper Counter
2. Chairs, Tables and Furniture
3. Almirah
4. A small hand box for counter
5. one iron chest with inbuilt lock for cash and valuables.

மற்றும் பொதுமக்களுக்கு உரிய வசதிகள் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் அலுவலகத்தில் செய்து கொடுக்கவும்.

        உடல் ஊனமுற்றோருக்கான 3% இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
        Sccoter/Motor Cycle Advance கிராமிய அஞ்சல்ஊழியர்களுக்கு வழங்க                             வேண்டும்.
        Flood Advance -ஆக 30,000 வழங்க வேண்டும்.
        இயற்கை சீற்றத்தின் போது ஏற்படுகிற வீடு சேதம் போன்றவற்றிற்கு முறையான நிவாரணம் வழங்க வேண்டும்.
         வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற வசதியாக அவர்களுக்கு முறையான Salary Certificate வழங்க வேண்டும்.
         Condingency உயர்த்தி வழங்க வேண்டும்.

இவை அனைத்தும் அடங்கிய ஒரு Memorandum கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் S.S. மஹாதேவைய்யா அவர்களால் GDS committee யிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
                                              தோழமையுடன்
                                                                                                    A.Ismail
                                                                                              Circle Secretary
                                                                                            Tamil Nadu Circle

Tuesday, 12 April 2016

கோட்ட கிளை செயலாளர்களின் கவனத்திற்கு

கோட்ட கிளை செயலாளர்களின் கவனத்திற்கு,

நமது சங்க அங்கீகாரத்திற்கான புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் 30.04.2016 ஆம் தியதிக்குள் இலாகா வெளியிட உள்ளது. எனவே கோட்ட கிளை செயலாளர்கள் விரைந்து செயல்பட்டு எதிரணியினரின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து அனைத்து தோழர்களையும் நமது AIGDSU சங்க உறுப்பினராக சேர்த்து முதன்மை சங்கமாக ஆக்கிட வேண்டும். உறுப்பினர் படிவம் வெளியான உடன் அனைத்து கோட்ட கிளை செயலருக்கும் மாநில சங்கத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்படும். எனவே விரைந்து செயல்பட ஏதுவாக பொறுப்பாளர்கள் தங்களது பணிகளை செய்திட மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

Socio Economic Survey BO List

அன்பார்ந்த தோழர்களே
GDS களின் ஊதிய கமிட்டி கிளை அஞ்சலகங்களின் வேலைப்பளுவினை கணக்கிட்டு ஊதிய நிர்ணயம் செய்வதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து 1500 கிளை அஞ்சலகங்களை தேர்வு செய்து பட்டியல் அனுப்பும்படி அகில இந்திய சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் தமிழ் மாநில சங்கம் கீழ்காணும் கிளை அஞ்சலகங்களின் பட்டியலை ஊதிய கமிட்டிக்கு அனுப்பி உள்ளது.


          ALL INDIA GRAMIN DAK SEVAKS UNION
           TAMIL NADU CIRCLE
                     B-5 P&T Quarters,Dr.Subarayanagar,Teynampet,Chennai-600 018.
 

              President                           Chief Advisor           Treasurer                      Secretary
              M.Rajankam                       R.John Britto           R.Swaminathan           A.Ismail
              9787157078                       9443860244            9486157082                9442265195               

Ref: TN/ECO SUR/2016                                                                                  Date: 12.04.2016
Respected sir,
                         
Sub:-  Socio-economic survey of BOs –reg

The division wise list of BOs of Tamilnadu circle, as requested by the GDS Committee for taking sample survey is enclosed herewith.

Name of BO
Name of SO
Name of Division
Name of Region
Name of Circle
TIRUPASUR
KADAMBATTUR
KANCHIPURAM
CHENNAI CITY
TAMIL NADU
MAMBAKKAM
SV CHATRAM
KANCHIPURAM
CHENNAI CITY
TAMIL NADU
VADAKKUPATTU
SINGAPERUMALKOIL
CHENGALPATTU
CHENNAI CITY
TAMIL NADU
DOZHAVETTI
ZAMIN ENDATHUR
CHENGALPATTU
CHENNAI CITY
TAMIL NADU
THIRUMUDAIVAKKAM
CHROMPET
TAMBARAM
CHENNAI CITY
TAMIL NADU
ALAMELURANGAPURAM
SATHUVACHERY
VELLORE
CHENNAI CITY
TAMIL NADU
THUTHIKADU
CHOZHAVARAM
VELLORE
CHENNAI CITY
TAMIL NADU
OZHUGUR
AMMOOR
ARAKONAM
CHENNAI CITY
TAMIL NADU
COUDAPAKKAM
VALUDAOOR
PONDICHERRY
CHENNAI CITY
TAMIL NADU
AVANIPUR
AKSHIPAKKAM
PANDICHERRY
CHENNAI CITY
TAMIL NADU
KORUKKAITHOTTAM
SAKKOTTAI
KUMBAKONAM
CENTRAL
TAMIL NADU
SANKARANKUDI PUTHUR
KONERIRAJAPURAM
KUMBAKONAM
CENTRAL
TAMIL NADU
MEMATHUR
SEMBANARKOIL
MYLADUTHURAI
CENTRAL
TAMIL NADU
KANCHANAGARAM
KILAIUR
MYLADUTHURAI
CENTRAL
TAMIL NADU
MALAYADIVARAM
THIRUVERUMPUR
TRICHY
CENTRAL
TAMIL NADU
ETTARAI
KULUMANI
TRICHY
CENTRAL
TAMIL NADU
SATHIYAMANGALAM
CAVERYNAGAR
PUDUKOTTAI
CENTRAL
TAMIL NADU
PANAYAPATTI
KULIPIRAI
PUDUKOTTAI
CENTRAL
TAMIL NADU
MINNAPALAYAM
SIVAGIRI
ERODE
WESTERN
TAMIL NADU
PUNCHAIPURAYAMPALAYAM
D.N.PALAYAM
ERODE
WESTERN
TAMIL NADU
DEVALAPURAM
AMBUR
TIRUPATTUR
WESTERN
TAMIL NADU
MADAVALAM
VENGALAPURAM
TIRUPATTUR
WESTERN
TAMIL NADU
VASANTHAPURAM
GANESAPURAM
NAMAKKAL
WESTERN
TAMIL NADU
ALAMPALAYAM
PALLIPALAYAM AGRAHARAM
NAMAKKAL
WESTERN
TAMIL NADU
TIRUMALPURAM
RESERVE LANE
MADURAI
SOUTHERN
TAMIL NADU
B.METTUPATTI
ALANGANALLUR
MADURAI
SOUTHERN
TAMIL NADU
KULAPPURAM
KALIYAKKAVILAI
KANNIYAKUMARI
SOUTHERN
TAMIL NADU
RAJAKKAMANGALAM THURAI
EATHAMOZHY
KANNIYAKUMARI
SOUTHERN
TAMIL NADU
NERIPAYUOOR
KANNIRAJAPURAM
RAMANATHAPURAM
SOUTHERN
TAMIL NADU
KARANKADU
NAMBUTHALAI
RAMANATHAPURAM
SOUTHERN
TAMIL NADU
AVARAIKULAM
MAHENDRAGIRI
TIRUNELVELI
SOUTHERN
TAMIL NADU
CHETTIKULAM
ANU VIJAY TOWN
TIRUNELVELI
SOUTHERN
TAMIL NADU

With regards,

A.Ismail
Circle Secretary
Tamil Nadu