M.Baskaran, Circle Seretary,B5,P&T Quarters,Dr.Subarayanagar,Teynampet, Chennai-600018
Saturday, 30 December 2017
Thursday, 28 December 2017
Saturday, 23 December 2017
முக்கிய செய்தி
மாநில செயலர் A இஸ்மாயில் அவர்கள் சொந்த அலுவல் காரணமாக விடுப்பில் உள்ளதால் பொறுப்பு மாநில செயலராக தோழர் பாஸ்கரன் (தென்மண்டல செயலர்) அவர்கள் செயல் படுவார். எனவே கோட்ட கிளை செயலர்கள் தங்கள் பகுதி பிரச்சனைகள் குறித்தும், இதர சங்க செயல்பாடுகள் பற்றிய தொடர்புகளையும் பொறுப்பு மாநில செயலர் தோழர் பாஸ்கரனை தொடர்பு கொள்ளும்படி வேண்டுகிறேன்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
M.Baskaran
GDS BPM
Pudusukkampatti BO
Melur S.O 625 106
Madurai Dist
Mobile No : 9943054914, 7598042681
Friday, 15 December 2017
கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு
கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையினை அமுல் படுத்திடக்கோரி நமது AIGDSU சங்கம் பல்வேறுகட்ட போராட்டத்தை நடத்தி இறுதியாக 16.08.2017 முதல் 22.08.2017 வரை நடத்திய வெற்றிகரமான வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து கடந்த 07.11.2017 அன்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு.பொன் இராதாகிருஷ்ணன் அவர்களை தமிழ் மாநில செயலர் A இஸ்மாயில் அவர்களும், கன்னியாகுமரி கோட்ட சங்க நிர்வாகிகளும் சந்தித்து GDS தோழர்களின் வாழ்வாதார பிரச்சனைகளை எடுத்துரைத்து, 7வது ஊதியக்குழுவின் பலன்களை மத்திய அரசு ஊழியர்கள் பெற்று ஓராண்டு கழிந்த பின்னரும் GDS ஊழியர்களுக்கு அரசால் அமைக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கை நிதி அமைச்சக செலவின அனுமதிக்காக நிலுவையில் உள்ளதை அமைச்சரிடம் விளக்கி மகஜர் அளித்ததின் தொடர்ச்சியாக அமைச்சரின் ஆணைப்படி, அவரது தனிச்செயலர் திரு.கணேசன் அவர்களின் தொடர் நடவடிக்கையை தொடர்ந்து 17.11.2017 மற்றும் 20.11.2017 தியாதிகளில் நமது பொதுச்செயலர் தோழர். S S மஹாதேவய்யா அவர்கள் நிதி அமைச்சக அதிகாரிகளுடன் விவாதித்து அதனை தொடர்ந்து 28.11.2017 அன்று மாநில சங்க தலைமை ஆலோசகர் திரு. R ஜான் பிரிட்டோவும், காரைக்குடி கோட்ட சங்க நிர்வாகிகளும் BJP தேசிய செயலர் திரு.H ராஜா அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.
நமது மாநில சங்க மற்றும் மத்திய சங்க தொடர் முயற்சியின் பலனாக இன்று (15.12.2017) கமிட்டி அறிக்கை நிதி அமைச்சகத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆணை அஞ்சல் இலாகாவுக்கு அனுப்பப்பட்டு, இலாகா கமிட்டி அறிக்கையை அமுல் படுத்துவதற்கான குறிப்பாணையை நிதி அமைச்சகத்துக்கு அனுப்பும் நிதி அமைச்சகம் அக்குறிப்பாணையை மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பும், அமைச்சரவை ஒப்புதலுக்குபின் இலாகா கமிட்டி அறிக்கையை அமுல் படுத்தும். இந்த நடவடிக்கைகள் முடிவடைய குறைந்தபட்சம் ஆறுவார காலம் ஆகும். அதையும் விரைவு படுத்திட நமது AIGDSU சங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
நமது முயற்சியின் பலன்களை விமர்சிக்கின்ற மாற்று சங்கங்களும், NFPE சம்மேளனமும் அறிக்கையின் அமலாக்கத்தை தாமதப்படுத்தும் நோக்குடனும், இலாகா ஊழியர்களின் தீர்க்கப்படாத பிரச்சனைகளை திசை திருப்பிடவும், GDS ஊழியர்களின் கோரிக்கையை முதல் கோரிக்கையாக வைத்து போராட்ட அறிவிப்பினை வெளியிட்டு GDS ஊழியர் இல்லாமல் போராட்டங்கள் நடத்திட முடியாது என்பதை உணர்ந்துள்ள சம்மேளனங்கள் மீண்டும் நம்மை ஏமாற்றும் விதமாக போராட்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள், சங்க அங்கீகார உறுப்பினர் சரிபார்ப்பு இலாகா ஊழியர்களுக்கு இரண்டு வருடங்கள் கழிந்த பின்னரும் அதைப்பற்றி கவலைப்படாத NFPE சம்மேளனம், தற்போது வெளியிட்டுள்ள போராட்ட அறிவிப்பில் GDS ஊழியர் உறுப்பினர் சரிபார்ப்பினை இரண்டாவது கோரிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் இலாகா ஊழியர்களின் உறுப்பினர் சரிபார்ப்பினை பற்றிய கோரிக்கையை மறந்துவிட்ட சம்மேளனகளின் ஏமாற்று வேலைகளுக்கும், பொய்யான பரப்புரைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக GDS ஊழியர்களுக்காக உழைத்திடும் ஒரேசங்கமான AIGDSU சங்கத்தில் 100% GDS தோழர்களை உறுப்பினராகி வரும் காலங்களில் நமது கோரிக்கைகளை வென்றெடுத்து நமது வாழ்வாதாரத்தை உயர்த்திட கோட்ட கிளை செயலர்கள் செயல்பட வேண்டும் என மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
A இஸ்மாயில்
மாநில செயலர்
Subscribe to:
Posts (Atom)