Pages

Wednesday, 9 May 2018

கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு 

எதிர்வரும் 13.05.2018 அன்று மாநில சங்க செயற்குழு கூட்டமும் கோட்ட கிளை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டமும் சேலம் மேற்கு கோட்டம் சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தில் வைத்து மாநில தலைவர் தோழர்.M இராஜாங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. கோட்ட மட்ட பிரச்சனைகள் மற்றும் 22.05.2018 முதல் நடைபெற இருக்கும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம், நம்முடன் இணைந்து போராடும் NUPE - GDS (FNPO) தோழர்களுடன் கோட்ட மட்டங்களில் JCA அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டி இருப்பதால் கோட்ட கிளை நிர்வாகிகள் காலை 9.00 மணிக்குள் கூட்ட அரங்கிற்கு வந்து தங்கள் மேலான கருத்துக்களை விவாதிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.



M பாஸ்கரன் 
மாநில செயலர் (பொறுப்பு)  

No comments:

Post a Comment