Pages

Friday, 18 August 2017

மூன்றாம் நாள் போராட்டம் 

நமது காலவரையற்ற போராட்டத்தின் மூன்றாம் நாளாகிய இன்றும் போராட்ட வீச்சம் இந்தியா முழுக்க அதிகரித்துள்ள  செய்தியினை ஊடகங்களின் வாயிலாக அறிய முடிந்தது.மத்திய அரசு ஊழியர்களுடைய அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்து போராட்டம் நடத்திட இயலாத நிலையில் GDS ஊழியர்களுடைய போராட்ட நடவடிக்கைகளை எதிர் அணியில் இருப்பவர் கூட பாராட்டும் நிலை என்பது நமது போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து கோட்டங்களிலும் போராட்டம் உச்ச நிலையை எட்டியுள்ளது. தொழிற் சங்க புரட்சியாளர் அண்ணன் பாலு அவர்களால் உருவாக்கப்பட்ட GDS சங்கத்தின் போராட்டத்தை வாழ்த்துகின்ற, தொழிற் சங்க உணர்வு மிக்க, தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட GDS வாழ்வின் விடியலே நம் லட்சியம் எனும் கனவினை கண்ட அண்ணன் பாலுவின் உண்மை விசுவாசிகளான இலாகாவில் பணியாற்றும், பணியாற்றிய Group 'C' தபால்காரர் தோழர்களுக்கும், சங்க வேற்றுமை பாராமல் போராட்டத்தை ஊக்குவிக்கும் அனைத்து நல் இதயங்களுக்கு போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் கோட்ட கிளை நிர்வாகிகளுக்கும் மாநில சங்கம் வீர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

A இஸ்மாயில் 
மாநில செயலர் 










No comments:

Post a Comment